ஸ்பெயின் ஒரு பயணம்

சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா தே இவற்றோடு கொண்டுபோன புளிச்சாதம் என…

SuperCup க்கு தமிழ் என்ன இலங்கையில் 3A

மோட்டச்சைக்கிளில் (அதை மோட்டச்சைக்கிள் என்று சொல்லலாமோ தெரியாது. சோமிதரன் தான் கொண்டு வந்திருந்தான். TVS 50 ரகம் போல வேறொன்று. லைசென்ஸ் தேவையில்லையென்ற படியால் இறங்கி ஏறும் சோதனைச்சாவடிகளில் அந்த வண்டிதான் சரியான தெரிவு என அவன் சொன்னான்.) நானும் சோமிதரனும் நாவற்குழி பாலத்தை தாண்டுகிறோம். பாலத்தில் வேலைகள்…

என்னத்தை சொல்ல – இலங்கையில் 3

‘உவரோடை எதுக்கு அடிக்கடி தனகுறாய்’ எண்டு அம்மம்மா கேட்டா. ‘தனகேல்லையம்மம்மா, அவர் சொல்லுறதுகளுக்கு பின்னூட்டம் குடுக்கிறன் என்றன் நான். அம்மம்மாவுக்கு பின்னூட்டம் எண்டால் என்னெண்டு விளங்கேல்லைப் போலை. ‘என்ன விண்ணானக் கதை கதைச்சுக் கொண்டிருக்கிறாய் எண்டா அவ. எண்டாலும் நான் அவரோடை தனகுப்படுறது அவவுக்கு பிடிக்கவில்லை. ஆனா உண்மையா…

அசைலம் அடிக்கேல்லையோ- இலங்கையில் -2

அந்த ஆச்சி கிட்டடியில சாகப்போற மாதிரி, எனக்கு தெரியேல்லை. ஆனாலும் அம்மா சொன்னா. “நீ அடுத்த முறைக்கு வரேக்கை மனுசி இருக்குதோ இல்லையோ தெரியாது. எதுக்கும் ஒருக்கா போய்ப்பாத்திட்டு வா.” பரவாயில்லை. மனுசி திடகாத்திரமாத்தான் இருந்தது. என்னைக் கண்டவுடனை அடையாளம் கண்டுகொண்டிச்சு. “வாப்பு. என்னப்பு சரியா இளைச்சு போட்டாய்?…

தொடர் தாக்குதல்கள்: இலங்கையில் – 1

நானும் அனந்தனும் சேயோனும் கொழும்பில் தாட்சாயினி வீட்டுக்கு போயிருந்தோம். சேயோன் கனடாவிலிருந்து வந்திருந்தான். படிக்கின்ற காலங்களில் முன் நெற்றியில் வந்து விழும் முடிகளை வாயிலிருந்து காற்றுக்கொண்டே ஊதிச் சரி செய்து வயிற்றெரிச்சல் தருகின்றவனை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. அகண்ட தமிழ்த்தனிநாடு எண்டுறது போல அவன்ரை நெற்றி…