ஆயாச்சி அல்லது கச்சான்காரப் பூரணத்தின் பேரன்

ஆறாவடுவின் நான்காவது திருத்தமும் முடித்து, “இதுதான் எனது உச்சக் கொள்ளளவு. இதற்குமேலும் நீங்கள் எதிர்பார்க்கும் செழுமை என்னிடம் மருந்திற்கும் கிடையாது” என்று அனுப்பிவைத்தபோது தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொன்னார். “பரவாயில்லை. இது கெட்டிக்கார இளைஞன் ஒருவன் எழுதிய சுவாரசியமான பதிவுதான். ஒரு தொடக்கமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் கெட்டிக்காரத்தனம்…

கிழவனின் உயிர்!

“பொழுதுவிடிந்து வெளிச்சம் பரவியதும், புதைத்த இடத்தில் பூ வைக்கலாமென்று போனால், ஆண்டவரே, பச்சைப் பிள்ளையை மூடிய குழியில் மண்ணைக் கிளறிப் போட்டிருந்தார்கள். என்னால் தாங்க முடியவில்லை..” மர்மக்கதையொன்றின், முதலாவது முடிச்சை இலாவகமாக முடிவதுபோல நடேசுக் கிழவர் ஆரம்பித்தபோது நான் நிமிர்ந்து உட்கார்ந்து தலையை அவரிடத்தில் சரித்தேன். இம்மாதிரியான திகில்…

புத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்

05 ஜூன் 1991 கரியிருட்டு. தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை  வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டுநரம்பை நசித்துக்கொண்டிருந்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க, முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். குண்டும்…

ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்

19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது. நேர்காணல் : கருணாகரன் 1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன? அது எப்ப வருது? அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று…

காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Gaza, July 10, 2014 சண்டையின் இரண்டாம் நாள். வாழ்வில் ஒருபோதும் அனுபவித்திராத பயங்கரத் தருணங்களை இந்த நாளில் கடந்தேன். மதியத்தின் பின்னர், வீடு அதிர்ந்தாடிய பெரு வெடியொலியிற்குச் சில நிமிடங்கள் கழித்து தொலைபேசி அழைத்தது. அக்கா அழைத்தாள். “இஸ்ரேலிய விமானங்கள் தாக்குகின்றன. அயலவர்களும் நாங்களும் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டோம்….