UK central college இப்படித் தான் சொல்லுவோம். ஆனால் மத்திய கல்லூரி அல்ல. வெறும் மகா வித்தியாலயம் தான். UK மகா வித்தியாலயம். உடையார் கட்டு மகா வித்தியாலயம். பரந்தன் முல்லைத்தீவு வழியில் விசுவமடுவிற்கு அடுத்ததாக சில கட்டடங்கள் சில கொட்டில்கள் சில மர நிழல்கள் இவைதான் அப்பாடசாலையில் மொத்தமான கட்டுமானங்கள். அப்போது 1996 நான்கைந்து பாடசாலை அனுபங்கள் எனக்கு உண்டு. எல்லாமுமே மூன்று வருடங்களுக்கு மேற்படாதவை. அது ஓடிக்…
Author: சயந்தன்
இந்திய – ஈழப் போரின் முதற் புள்ளி என்ன ?
அன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து …. தமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள் படர்ந்த காலப் பகுதியாக கட்டவிழ்ந்தது 1987 அக்டோபர் மாதம். அக்டோபர் 2ம் நாள் பருத்தித்துறை கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இந்திய அரசின் கையாலாகாத் தனத்தாலும் சிங்கள அரசின் இனவெறிப் போக்கினாலும் பேரவலமாக மாறியது. புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் ஆகியோருடன் பதினைந்து உயர்மட்ட புலி…
லவ்ஸ் அகராதி! யாழ்ப்பாணத் தமிழில் மட்டுமல்ல
வருத்தப்படாத வாலிபர் சங்கப்பதிவில் கானா பிரபா எழுதிய பதிவொன்றின் பிறகு கடந்த வருடத்தின் ஏப்ரலில் செய்திருந்த இந்த ஒலிப்பதிவு நினைவுக்கு வந்தது. இந்நாள் வரை வெளியிடப்படாத இந்தப் பதிவினை இன்று தூசி தட்டி வெட்டியெடுத்தேன். தமிழகத்தினதும் ஈழத்தினதும் பல பகுதிகளில் பயன்படுத்தும் பல்வேறான சொல் வழக்காடல் குறித்து நானும் சோமிதரனும் வரவனையானும் பேசியிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக கடலை போடுதல் சைட் அடித்தல் ஆள் இவையெல்லாம் எங்கெல்லாம் எப்படி பேசப்படுகின்றது என்ற…
பூவைப் போல புன்னகை காட்டு – புலிகளின் பாடல்
நேற்று யூ ரியுப்பில் மேய்ந்து கொண்டிருந்த போது இந்தப் பாடலை பார்க்கக் கிடைத்தது. ஒவ்வொரு பூக்களுமே பாடலை நினைவுபடுத்துகின்ற தன்னம்பிக்கைப் பாடலை பகிர்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. காட்சி முழுவதும் பெண்போராளிகள் பங்கு பற்றியிருக்கிறார்கள். பாடலை அனுராதா சிறிராம் பாடியிருக்கிறார். இசை வழங்கியிருப்பவர் போராளி இசைப்பிரியன். அண்மையில் இசைபிரியனின் செவ்வியொன்றினைக் காணக்கிடைத்தது. அதில் இசையை இந்தியாவிற்கு அனுப்பி அங்கிருந்து குரல்களைப் பெற்று கலவைசெய்து பாடல்களை வெளியிட முடிகிறதென அவர் சொன்னார்….
இது ஒப்பாரி அல்ல – நினைவு 1
புனைவுகளில் கற்பனை கலந்திருக்குமா என்பது குறித்து எனக்குத் தெரியாது. இந்த 86 களிலிருந்து என்பது எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து நான் நேரடியாகத் தொடர்புற்றிருந்த சம்பவங்களின் பதிவு. இவை அனைத்திலும் மகனாக நண்பனாக வழிப்போக்கனாக வாய் பார்த்தவனாக செய்தி கேட்டவனாக நான் ஏதோ விதத்தில் உள்ளிருப்பேன். டப் என்ற சத்தத்தில் கிணற்றிற்குள்ளிருந்து கேட்குமாப்போல் ஒரு சத்தம் அம்மாவிற்கும் அம்மம்மாவிற்கும் கேட்டிருக்கக் கூடும். எந்தவித அதிர்வினையும் பய உணர்ச்சியினையும் தராத…