அருமையான வாசிப்பனுபவம் : ´ஆறாவடு´

நேற்று வாசித்து முடித்த அருமையானதொரு புத்தகம் இது. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம் பெயர் தமிழரான சயந்தன் எழுதி இருக்கிறார். நீர்க்கொழும்பில் இருந்து இத்தாலி நாட்டிற்குப் படகுப் பயணம் மேற்கொள்ளும் ஒரு போராளியின் முந்நிகழ்வு (பிளாஷ் பேக்) நினைவாக கதை விரிகிறது. அவர் இயக்கத்தில் சேர்வது ஒரு…

நஞ்சுண்ட காடு

ஈழப்போரிலக்கியத்தில்  புலிப்போராளிகளின் படைப்புக்கள் ஈழப்போரிலக்கியங்களை ஈழத்தின் சகல இயக்கங்கள் சார்ந்தும், மூன்று பெரும்பாகத்தினுள் குறிப்பிடமுடியும். 1. போராளிகள் , களமாடும் சமகாலத்திலேயே எழுதிய படைப்புக்கள் 2. போராட்டத்தின் நேரடிப்பங்காளர்களாக அல்லாத அதனுடைய ஆதரவாளர்களால் எழுதப்பட்ட படைப்புக்கள். 3. போராட்ட அமைப்புக்களிலிருந்து விலகிய பின்னர் அதிருப்தியடைந்த அல்லது அதிருப்தியடைந்த பின்னர்…

ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்

தமிழ்கவி அம்மாவிற்கு இப்பொழுது வயது 64. அவர் எனது சிறுவயதுகளில் புலிகளின் குரல் வானொலியூடாக குரல்வழியில் அறிமுகமாயிருந்தார். வானொலி நாடகங்களில் வட்டாரப்பேச்சு வழக்கில், ‘அப்பிடியாமோ’ ‘மெய்யாமோ’ என்ற அவரது வார்த்தைகள் நினைவில் நிற்கின்றன. நாட்டார் பாடல்கள் பற்றிய நிகழ்ச்சிகளும் செய்திருந்தார். தமிழ்கவி அம்மாவை இதுவரை நான் நேரிற் சந்தித்துப்…

ஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி

மனிதன் விலங்குதான். தீ மூட்டியதிலிருந்து, சிந்தித்துச் சிந்தித்து ஐம்பதாயிரம் ஆண்டுகளாக எண்ணி எண்ணித் துணிந்து, இணையத்தால் உலகளந்த பின்னும் அவன் விலங்குதான். அவனுக் கான வசதிகள் மேம்பட்டன, அவ்வளவுதான். அறிவு என்பதோ, பருப்பொருட்களைப் பகுத்து அறிந்து, ஆக்கிப் பயன் கொண்டது மட்டும்தான். அவன் தன்னை அறிவதில்லை. தற்காத்து, தற்பேணி,…

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்

ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்று டிவியின் உள்ளே நின்று சற்றே நெஞ்சை முன்தள்ளியவாறு கைகளை உயர்த்திக் கத்திய இளைஞனை எங்கோ கண்டிருந்ததாக அகதித்தஞ்ச விசாரணையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர்  சோபாவில் புதைந்திருந்து விரல்களால் முன் நெற்றியைத் தேய்த்தபடி யோசித்தார். இளைஞனின் ரீ சேர்ட்டில் புலியொன்று பாய்ந்தபடியிருந்தது. தொப்பியிலும்…