நான் எப்பிடி இருக்கிறன்!

எனது படத்தை வலைப்பதிவில் வெளியிட வேணும் என்று கோரிய அநேகம் பேரின் வேண்டுகோளை மதித்து (அடி ஆத்தி! அநேகம் பேரா..? அது யாரு? சரி! ஆகக்குறைந்தது எனது விருப்பத்திற்கு ஏற்ப) இந்தப் பதிவு! இதில் ஒரு மார்க்கமாக நின்று கொண்டிருப்பது நான் தான்! எப்பிடி இந்தப் படத்தை எடுத்தனியள்…

றேடியோக்களின் கதை

‘எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி!’ ‘அணையிறதுக்கு நான் ஒண்ணும் தீக்குச்சி இல்லை! சூரியன்’ ‘நான் சேர்த்த கூட்டம் அன்பால தானாச் சேர்ந்த கூட்டம்’ ‘அசந்தா அடிக்கிறது உங்க பாணி அசராமல் அடிக்கிறது என் பாணி’ இவையெல்லாம் தமிழ்ச் சினிமாக்களின் பஞ்ச் வசனங்களாயினும் எனக்கு அதிகம் பரீச்சயம்…

எங்கடை தமிழும் உங்கடை தமிழும்!

ஈழத்தமிழ் குறித்து நமது சகோதரர்களின் மெச்சுகை அவ்வப்போது வலைப்பதிவுகளில் வரும். ஆஹா அதுவெல்லோ தமிழ் என்கிற மாதிரியான பாராட்டுக்கள் ஒருவித பெருமையைத் தருவது உண்மைதான். ஈழத்தமிழ் என்கிற அடைமொழியில் அவர்கள் குறிப்பிடுவது யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மொழியைத்தான் என நான் உணர்கிறேன். தமிழக சினிமாக்களிலும் இலங்கைத் தமிழ் என…

ஐரோப்பாவின் உயரத்தில்

Jungfraujoch! தமிழில் இந்த ஜேர்மன் வார்த்தையை எப்படி சரியாக உச்சரிப்பது என்று தெரியவில்லை. எனினும் கிட்டத்தட்ட அது ஜுன்ப்றோ என்னும் வார்த்தைக்கு நெருக்கமுள்ளதாக இருக்கலாம். இது போலவே Bahnhof என்னும் தொடரூந்து நிலையத்தினை குறிக்கும் ஜேர்மன் வார்த்தை, வாணப்பு என, யாரோ ஒரு அப்புவின் பெயரைச் சொல்வது போலவும்…

மடத்தனமாய்..

எனக்கு உடன்பாடில்லாத எழுத்துக்களையும் கருத்துக்களையும் எதிர்கொள்ளும் போதெல்லாம் பெரும்பாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. ஆயினும் அக்கருத்தின் தர்க்கவியல், அவ்வாறான ஒரு கருத்து தோன்றுவதற்கு காரணமாயிருந்த சிந்தனை இவற்றை ஆராய்வதுண்டு. இவையே அக்கருத்துக்களின் சொந்தக் காரர்கள் மீது எனக்கு தனியான எந்த வெறுப்புணர்வும் தோன்றாமல் விடுவதற்குரிய காரணங்களாக இருக்கின்றன. இதற்கப்பால்…