கானா பிரபா தனது பதிவொன்றில் இட்டிருந்த மெட்டு ஒன்று பாடல் மூன்று எனும் பதிவின் பாதிப்பில் உருவாகிய குரற்பதிவு இது. பொதுவாக சினிமா என்ற ஒரே தளத்தில் வெவ்வேறு மொழிகளில் ஒரு மெட்டு பல பாடல்களில் பயன்படுத்தப் பட்டிருக்கும். ஆனால் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் மூன்று பாடல்களும் சினிமாவும் சினிமாவிற்கு வெளியேயுமான வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப் பட்டிருக்கின்றன என்பது குறித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. கேட்டுப் பாருங்கள்.
மூன்று பாட்டு ஒரு மெட்டு! கானா பிரபா, இது வேறு தலைப்பு
அந்த ஐந்து பேரையும் யாருக்காவது தெரியுமா..?
இன்று ஒருவருடன் நமது இளம் பராயத்து நினைவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது இது பற்றிய பேச்செழுந்தது. அதாவது நமது இளம்பராயத்து பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற சுவையான சுவாரசியமான கதைகளை இப்போதும் நம்மால் நினைவு கொள்ள முடிகிறதா என கொஞ்சம் முயற்சித்துப் பார்த்தோம். குறிப்பாக தமிழ் ஆங்கில பாடப்புத்தகங்களில் இவ்வாறான நிறையக் கதைகள் இருந்தன. கதைகள் மட்டுமல்லாமல் பாடல்களும் கூட.
இதனைப் படித்துக் கொண்டிருக்கும் யாருக்காவது Muru என்பவரைத் தெரியுமா? ஆரம்ப ஆங்கில பாடப் புத்தகத்தில் I am Muru, I am from Nigeria எனத் தன்னை அறிமுகப் படுத்துவாரே.. அவர் தான். அவரைத் தெரிந்திருந்தால் நீங்கள் என் வயதொத்தவர்கள்.
Muru ஐ போல மொத்தம் 5 பேர் இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கு Taro ஐயும் ஞாபகமிருக்கிறது. I am Taro, I am from Japan என்றவர் அவர். இது தவிர இந்தியாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் இருவர் இருந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து கூட ஒரு பெண் தன்னை அறிமுகப் படுத்தியிருப்பார். இவர்கள் எல்லோரும் சேர்ந்து தேங்காய்ப் பூ இனிப்புச் செய்து சாப்பிட்டதும் நினைவிருக்கிறது.
இவர்கள் ஐவரின் பெயர்களும் ஊர்களும் யாருக்காவது தெரியுமா.? எனது அறிதலின் படி வசந்தன், சிநேகிதி, டிசே போன்றோர் இதற்கு பதிலளிக்கக் கூடியவர்களாக இருக்கலாம். இது தவிர, வேறு கதைப்பாத்திரங்களையும் நீங்கள் அறிமுகப்படுத்தலாம். (நான் மூளையைப் போட்டு எவ்வளவு குழப்பியும் சிறு வயது தமிழ்ப் புத்தகங்களிலிருந்து எந்தக் கதையையும் என்னால் நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை. )
எமக்கு முந்தைய பாடத்திட்டத்திலிருந்த இவ்வாறான சுவாரசியமான கதைகள் பற்றியும் அறிய ஆவல் உள்ளது.(கானா பிரபா உங்களை அங்கை சேர்க்கவா ? இங்கை சேர்க்கவா?) எமக்குப் பின்னும் பாடத்திட்டம் மாற்றப் பட்டிருக்கிறது. யாராவது சின்ன வட்டுக்கள் அதையும் எழுதுங்கள்.
தமிழகத்தில் எப்படி..? உங்கள் சிறு வயதில் பாடப்புத்தகங்களில் இருந்த சிறு சிறு கதைகள் அல்லது எவையாயினும் சுவையான விடயங்கள் பற்றி முடிந்தால் ஒரு outline கொடுக்கலாமே..
சுஜித் ஜியின் We Tamil Boyz
சுஜித் ஜியின் அடுத்த இசைத் தொகுப்பான Ceylon க்கான சில பாடல்கள் கிடைத்தன. இந்த We tamil Boyz பாடல் அதன் ஆரம்ப சில வரிகள் சில மாதங்களுக்கு முன்பே கிடைத்த போது என்னைக் கவர்ந்திருந்தது. இப்போது முழுமையாகக் கிடைத்திருக்கிறது. இதனைத் தவிரவும் அடிமேல் அடிவைத்து, Buyakka Buyakka, பிறப்பெடு போன்ற பாடல்களும் நன்றாகத் தான் உள்ளன.
வலைப் பதிவர்கள் பற்றிய உற்சாக உரையாடல்
இது ஒரு உற்சாக அலட்டல் பதிவு. ஏற்கனவே நானும் சோமியும் அலட்டி இட்ட பதிவுக்கு முன்பாக சில காலங்களுக்கு முன்பு ஒலிப்பதிவு செய்யப் பட்டது. ஒரு வேளை இது எப்போது ஒலிப் பதிவு செய்யப்பட்டதென்பதை சோமியும் மறந்திருக்கலாம். வழமை போலவே நோக்கமெதுவுமற்ற பலதும் பத்துமான உரையாடல் தான் இப்பதிவாயினும் ஆரம்பத்தில் சோமி தனது வலைப் பதிவு குறித்தும் பதிவர்கள் குறித்தும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
பிற்பாதியில் சாதாரண அலட்டல் தான் இடம்பெறும். அவ்வப்போது ஒலிப்பதிவை குழப்பும் விதத்தில் நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன். (மயக்கும் சிரிப்பு..:))
சோமி நீ என்னைப் பற்றி புகழ்ந்து பாடிய தோத்திரங்களை கூச்சத்தில் எடிற் பண்ணிட்டன். பரவாயில்லை பின்னூட்டத்தில வந்து சொல்லு. :))
நான் போட்ட பின்னூட்டங்கள்
எனது வலைப்பதிவில் பிறர் இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்டினால்ப் போதுமா..? நான் மற்றவர்களுக்கு இடுகின்ற பின்னூட்டங்களைத் திரட்ட வேண்டாமா..? அவற்றை நினைவு வைத்துக்கொள்வது எப்படி..? இப்படி யோசித்ததன் விளைவு தான் பக்கத்தில் நீங்கள் பார்க்கின்ற நான் இட்ட பின்னூட்டங்கள் என்னும் பகுதி.
cocomment என்னும் தள உதவியுடன் Fire fox உலாவியின் அனுசரணையுடன் இதனைச் செய்துள்ளேன். இதன் மூலம் நான் எவருக்கெல்லாம் பின்னூட்டமிடுகின்றேனோ அவர்களின் பதிவின் பெயர் இடுகையின் பெயர் மற்றும் எனது பின்னூட்டத்தின் ஒரு பகுதி இவையாவும் எனது வலைப்பதிவிலும் வந்து தாமாகவே குந்திக் கொள்வார்கள்.
உதாராணமாக கானா பிரபாவின் ஒரு பதிவுக்கு நான் பின்னூட்டமிடுகிறேன். Fire fox இல் நிறுவப்பட்டுள்ள ஒரு நீட்சி அந்தப் பின்னூட்டத்தைத் தானாகவே தூக்கி சென்று ஒரு இடத்தில் சேமிக்கும். சேமிக்கப் பட்ட இடத்திலிருந்து எனது வலைப்பதிவு அதனை தானாகவே பெற்றுக் கொள்ளும். அதிலும் கானா பிரபா எனது பின்னூட்டத்தை அனுமதிக்கும் காலம் வரை காத்திராமல் உடனடியாகவே காட்சிப் படுத்தும். (அனுமதிக்காட்டியும் காட்டுவோமே..)
எனது பயன்பாட்டுக் கணணிகள் தவிர்ந்த புதிய கணணியொன்றில் எந்த வித ஏற்பாடுகளுமற்று நான் பிறருக்கு இடும் பின்னூட்டம் திரட்டப்பட மாட்டாது.
வலைப் பதிவு தவிர்ந்த வேறு களங்களில் நான் ஏதாவது எழுதினால் கூட அவையும் திரட்டப்படக் கூடும். (ஈ மெயில்களையும் திரட்டுமோ..:((
என்ன பதிவு என்ன இடுவையென தனித் தனியே பிரித்துக் காட்டுவது சிறப்பானது.
ஒழுங்காக வேலை செய்தால் விபரமாக எழுதுகிறேன். 🙂