ஆறா வடு – கவிஞர் திருமாவளவன்

(ஆறாவடு நாவலில்) ஆரம்பத்தில் கேலியும் கிண்டல் சார்ந்த விமர்சனங்கள் எல்லா இயங்கங்கள் மீதும் சம அளவில் இருந்தது. புலிகள் மீது தூக்கலாக இருந்தது என்றுகூட சொல்லலாம் போகப்போக அது தணிந்து புலிகள் மீது ஒரு அனுதாபப் பார்வை, விட்டுக்கொடாத தன்மை, அல்லது போற்றுதல் தனம் என்பதுபோல உணரமுடிந்தது. இதுவே…

ஆறா வடு – நடராஜா முரளிதரன்

தமிழினி வசந்தகுமாரின் வார்த்தைகள் பெரும்பாலும் மெய்ப்பிக்கப்பட்டதாகவே சயந்தனின் “ஆறா வடு” நாவலை வாசித்து முடித்தபோது என்னால் உணரக்கூடியதாக இருந்தது. சில தினங்களுக்கு முன்பாக இந்நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது பல்வேறு சிக்கல்கள், வேலைகள் என்பன குறுக்கீடு செய்து கொண்டிருந்தது. அதனையும் மீறி அரைவாசிக்கட்டத்தை நான் தாண்டியபோது மீதி அரைவாசியையும் உடனே…

ஆறா வடு – லேகா சுப்ரமணியம்

மனதை கலங்கடிக்கும் எத்தனையோ நாவல்களை புனைவு என வகைப்படுத்தி எளிதில் கடந்து விட முடிந்தது.அவ்விதம் தப்பித்து கொள்ள வழியில்லாது செய்து விட்டது சயந்தனின் “ஆறா வடு”. “நிழலை விலக்க முடியாதபோது தோற்றுப் போன போர் வீரன் பாதுகாப்பில்லாத வெளியில் தனித்து விடப்பட்டதாக உணர்ந்தான் மூடியிருந்த கதவுகள் அவனை அச்சமடையச்…

ஆறா வடு – தர்மினி

இப்ப தான் ‘ஆறாவடு ‘ படித்து முடித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதையாகப் படிக்கக் கூடியவாறு அமைந்துள்ளது.எதார்த்தமும் உண்மைகளும் துயரங்களும் மனச்சாட்சியுமாக புத்தகம் முழுவதும் நம் கதைகள்.அநாவசியமாக எச்சொல்லும் இல்லை. தொடர்பற்று எச்சம்பவமுமில்லை.அத்துடன் எழுத்துப்பிழை எதுவும் இடையூறு செய்ய இதிலில்லை.பாராட்டுகள் சயந்தன்.

ஆறா வடு – கவிஞர் தமிழ்நதி

சயந்தனின் ‘ஆறா வடு’வாசித்தேன். ஈழத்தின் துயர்படிந்த வரலாற்றின் ஒரு பகுதியை அந்த நாவல் பேசுகிறது. வாசிக்க இயலாத அவலம் நிறைந்த சில பகுதிகளை மிகுந்த சிரமத்தோடு கடந்து செல்லவேண்டியிருந்தது. எழுத்தில் கடக்கவியலாத கொடுந்துயரை, யதார்த்தத்தில் எங்கள் மக்கள் எப்படித்தான் சகித்தனரோ…? சயந்தனின் நக்கல் நடையையும் மேவியிருந்தது கண்ணீர். இலங்கை…