கடலின் பசு
பாக்கு நீரிணை கடற்பரப்பு, மன்னார் வளைகுடா மற்றும் ஹவாய்த் தீவுகளில் மட்டுமே வாழ்கின்ற அருகி வருகின்ற ஒரு உயிரினம் இக் கடற்பசு. ஈழக் கடலின் தனித்துவமான பெரிய உயிரினங்களில் ஒன்றான இது Dugong எனப்படுகிறது. தாவர உண்ணி என்பதனாலேயே அதிகம் பவளப் பாறைகள் மற்றும் தாவரங்கள் நிறைந்த ஈழத்தின் மேற்குக் கடல் பகுதியில் இவ்வுயிரினம் வாழ்கிறது. ஆகக் கூடியதாக 3 மீற்றர் நீளமும் 400 கிலோ நிறையும் உள்ள கடற்பசு கிட்டத் தட்ட தரை விலங்கான யானையின் …