இந்தியாக் காரன்
“இவனொரு இந்தியாக்காரனடா. இலங்கைத் தமிழன் என்று பொய் சொல்லி இங்கை அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான்.” என்று பூலோகத்தார் சுட்டிய இளைஞன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். இடத்திற்குப் புதியவனைப்போலவே தோன்றியது. கண்டதில்லை. முதுகில் தொங்கிய பையின் கைப்பிடியை நெஞ்சோடு அழுத்திப் பிடித்திருந்தான். ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்த்தான். கண்களில் சிநேகமா அச்சமா என் உய்த்துணரமுடியாத பார்வையிருந்தது. அவன் அப்படிப் பார்த்தபோதெல்லாம் அவனை எரித்துவிடுவது போல பூலோகத்தார் முறைத்தார். “பாரன், களவெடுத்துப் பிடிபட்டவன் மாதிரி அவன்ரை முழியை.. யாரைப் பேக்காட்டலாம் …