ஆறாவடு! இது எங்கள் கதை…

சயந்தனின் ஆறாவடு குளிரும் இரவொன்றில், வானம் நட்சத்திரங்களை மேகங்களுக்குள் ஒளித்து வைத்த இராத்திரியொன்றில், அரை வயிறு உணவும் இரப்பைக்குள் சுழன்று தொண்டைக்குள் தாவும் நிமிடங்களில், கால்கள் கொடுகிக் கொண்டிருக்க, தூக்கத்தின் பிடியிலிருக்கும் கண்களை இமைகள் மூடாமல் காவல் செய்திருக்க, ஒரு சாரத்தை இழுத்துப் போர்த்தியபடி, பெருங்கடல் வெளியொன்றில், திசைகளைத்…

ஆதிரை ஒரு பெரும்படைப்பு

இரண்டு வாரங்களில் 4 புத்தகங்களை வாசிக்க முடிந்தது. நண்பர் பத்திநாதனின் கையிலிருந்த சயந்தன் எழுதிய ‘ஆதிரையை’ வாங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். 640 பக்கங்கள் என்பதால் எடுக்கமுடியாமலே இருந்தது. பழைய வேகம் இல்லையென்றாலும் 4நாட்களில் வாசிக்க முடிந்தது. ஈழத் தமிழரிடமிருந்து வரும் படைப்புகளைப் பெரும்பாலும் வாசித்து வருபவன் என்றவகையில்…

ஆதிரை! ஒரு பெருங் கிழவியின் வாய்ச் சொல்லைப்போல அனுபவம்

சயந்தன் எழுதிய ஆதிரை நாவலை முன்வைத்து “வரலாறு அது யாருடைய வாய்க்குள்ளிருந்து வருகிறதோ அவர்களுடைய விருப்பமானதையும், வேண்டியதையும் மட்டும் சொல்லும்” என்பதற்கு மாறாக ஒரு இனம் நிலமற்று,நிம்மதியற்று, உயிர் பதைக்க இன்னொரு இனத்தால் துரத்தப்பட்ட,சிதைக்கப்பட்ட ஈழத்து தமிழர்களின் வலியின் வரலாற்றை மக்கள் பார்வையில் ஆதிரை நாவல் பதிவு செய்கிறது….

ஆதிரை – உள்ளும் புறமும்

ஆதிரைக்கான எனது தேடல் மிக நெடிது. இந்த புத்தகம் குறித்தான சில குறிப்புக்களை முக நூலில் படித்த காலத்திலிருந்து கிடத்தட்ட ஐந்து வருடங்களின் பின்னரே இந்த புத்தத்தினை வாசிக்க கிடைத்தது தம்பி ஜெனோஜனின் புண்ணியத்தினால். ஒரு நூல் அல்லது நாவலுக்கான பீடிகை இன்றி அதாவது முன்னுரை, முடிவுரை, பதிப்புரை…

போர் ஒரு பொழுதுபோக்கு அல்ல

சயந்தனின் ஆதிரை படித்தேன். தமிழீழப் போராட்டத்தின் துவக்கப் புள்ளியான 1977 கலவரம் துவங்கி 2009 இறுதிப் போர் முடிந்து நிவாரணப் பணிகளுக்கான குழு அமைதல் வரையிலான பரந்த வரலாற்றுப் புதினம். தமிழ் ஈழம் குறித்த தெளிவு இல்லாதவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல். காஷ்மீர் பிரச்சினையோ ஈழப் பிரச்சினையோ…