வேட்டைக்காரன் – கடுப்பைக் கிளப்புறார் யுவர் ஆனர்

நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம். புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் - புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் - ஈழத்தமிழர்கள் திரட்டப்படக்கூடிய சக்தியா என்பதுதான். என்னளவில் பொதுவாகவே தமிழர்கள் ஒரு சக்தியே அல்ல என்ற முடிபுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களாவது சக்தியாவது.. அண்மைய நாட்களில் Facebook இலும் ட்விட்டரிலும் சில மறுமொழிகளிலும் ஆங்காங்கே எழுதிய குறிப்புக்கள் இவை, முன்பாக சில உண்மைகள் இலங்கைக்கு அன்னியச்செலாவணியைப் பெற்றுக் கொடுக்கின்ற அங்கிருந்து ஏற்றுமதியாகின்ற பொருட்களை இன்னும் யாரும் தவிர்க்கவில்லை. தெரிந்த ஒரு புள்ளிவிபரம் சொல்கிறேன். சுவிற்சர்லாந்தில் 140 க்கும் மேற்பட்ட சின்னதும் பெரியதுமான ஈழத்தமிழர்களால் நடாத்தப்படுகின்ற விற்பனை நிலையங்கள் உள்ளன. வாரத்திற்கு 200 kg இலிருந்து 2000 kg வரை அவர்களுக்கான கடலுணவை இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 50 000 kg கடலுணவு வாரத்திற்கு இறக்குமதியாகிறது. இதற்காக 350 000 அமெரிக்க டொலர்கள் வாரத்திற்கு சுவிற்சர்லாந்தில் இருந்து மட்டும் அன்னியச் செலாவணியாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போகிறது. இது வாரக்கணக்கு. அதுவும் சுவிற்சர்லாந்திலிருந்து மட்டும். இனி மாதத்திற்கும் அதேபோல மற்றைய ஐரோப்பிய கனடா நாடுகளிற்கும் கணக்குப் பாருங்கள். ஒப்பீட்டளவில் சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்களின் தொகை குறைவென்பதையும் மனதில் வையுங்கள். வேட்டைக்காரனுக்குப் பின்னால் ஒரு ரத்தக் கதையிருக்கென்று கதைவிடுகிறவர்கள் - இலங்கைக் கடல் மீனில் உண்மையாகவே தமிழன் ரத்தம் இருக்கென்றதை வசதியாக மறந்து விடுகிறார்கள். கடைக்காரர்களிடம் பேசினால் ஏன் இத்தாலியிலிருந்து … [Read more...]