comment 0

ஜிஃப்ரி ஹாஸன்

ஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின் போராட்டமும் தமிழர் வாழ்வும் பற்றி பல நாவல்கள் வெளிவந்து விட்டன. ஷோபா சக்தியின் BOX கதைப்புத்தகம், குணா கவியழகனின் விடமேறிய கனவு, சாத்திரியின் ஆயுத எழுத்து, சயந்தனின் ஆதிரை போன்றன இந்தவகையில் குறிப்பிடத்தக்க நாவல்கள். ஆதிரை வடபுல சாமான்ய தமிழ்ச்சனங்களினது வாழ்வு ஈழப்போரால் எப்படிச் சிதைந்தது என்பதை மிக அழுத்தமாக தனிமனிதர்கள், குடும்பங்கள், கிராமங்கள் என ஆழமாக ஊடுறுவி சரளமான புனைவு மொழியில் எடுத்துக் கூறுகிறது.  மலையக மக்களினதும் ஒரு குறிப்பிட்ட காலகட்ட அவலம் சிதைந்த சித்திரமாக நாவலுக்குள் ஊடுறுவிச் செல்கிறது. வடபுல எழுத்தாளர்களின் ஈழப் போராட்ட நாவல்களில் போராட்டத் தீயின் கொடு நாக்கு எப்படி அப்பாவி மலையகச் சனங்களையும் தீண்டியது என்பதை மனச்சாட்சியோடு இந்நாவல்தான் பதிவு செய்கிறது. 1983 இனப்படுகொலையில் மலையகத் தமிழ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அது பற்றி முழுமையாகப் பதிவுசெய்யும் ஒரு மலையக நாவலே தெளிவத்தை ஜோசப்பின் நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983. அதைத் தவிர்த்து இலங்கை…

comment 0

ஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்

1977 தொடக்கம் 2009 வரையான காலத்தை பேசும் ஒரு நாவல். விமர்சனம் அல்லது கருத்துரை என்பதற்கு அப்பால் சயந்தனின் இந்த ஆர்வம் அல்லது முயற்சியை வரவேற்பதுடன் பாராட்டியும் ஆகவேண்டிய கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன். மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சயந்தன். படைப்பியற்றுறையில் சயந்தன் தனித்துவமான ஒரு கதைசொல்லியாக தன்னை அடையாளப்படுத்தியிருப்பதுடன், நிறுவியுமிருக்கின்றார். ஆதிரைக்கு முன்பதாகவே இதனை அவர் நிறுவியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. நாடற்றஒருவன் சிறையில் அனுபவிக்கும் மிகக்கொடூரமான சித்திரவதைகளுடன் நாவல் ஆரம்பிக்கிறது. “லெட்சுமணன்” இனத்துவேசத்தால் கொல்லப்பட்ட, மற்றும் இன்னமும் சிறைகளில் வதைபடும் தமிழ் இளைஞர்களின் ஒரு குறியீடாகவே தெரிகிறான். மிகநீண்ட இடைவெளிக்கு பிறகு மலையக தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுகின்ற ஒரு படைப்பாகவும் ஆதிரை உள்ளது. கண்டுகொள்ளப்படுவதில் பின்தள்ளப்படுகின்ற மக்களைப்பற்றி பேசும் ஆற்றல் வரவேற்கத்தக்கது. தன்னுடைய நறுக்கென்ற உரையாடல்கள் மூலமாக படிப்பவர்கள்நெஞ்சில் ஆணிஅறைந்துவிடுகிறார் சயந்தன். உதாரணமாக, (பக்கம் 28, 29 ல்வரும் உரையாடல்) “யாருக்கு தனிநாடு கேக்கிறாங்க? “ “தமிழங்களுக்கு…

comment 0

கயல்விழி – தமிழரசி – சந்திரிகா

1995ம் வருடம், யூன், 5ம் நாள் சூரிச் த்ரிம்லி ஆஸ்பத்திரியில் ஒரு முன்னிரவில், திரு திருமதி நவரட்ணம் அவர்களின் மூத்த புதல்வியாக திருநிறைச் செல்வி (அப்படித்தான் அவளது பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழில் உள்ளது) தமிழரசி பிறந்தாள். அவளை, வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்த இந்தக் கோடை காலத்தில் , சூரிச் நகரின் சனநெரிசல் மிக்க இடத்திலமைந்த ஒரு மெக்சிகன் உணவகத்தில் நான் சந்தித்தபோது இந்தக் கதை ஆரம்பிக்கின்றது. அப்போது காதுகளுக்குப் பழக்கமான ஒரு துள்ளிசை, பழக்கமற்ற ஒரு மொழியில் என்னைச் சூழ்ந்திருந்தது. தமிழரசி தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த, பளிச் என்ற க்ளாஸை மேசையில் வைத்தாள். அப்போது எஞ்சிய தண்ணீரின் ஊடாக அவளது மார்பின் ஒரு பகுதி அகன்று, தோற்ற மயக்கம் காட்டியது. அப்போது “அண்ணா, இது டன்னா பஓலாவின் இசை, (youtube இல் Danna Paola என்று தேடவும்) கேட்டிருக்கிறீர்களா..” என்று கேட்டாள் தமிழரசி. நான் சட்டென்று தலையைத் திருப்பி வாசலை நோக்கினேன். இரண்டு பேர்…

comment 0

புத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்

05 ஜூன் 1991 கரியிருட்டு. தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை  வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டுநரம்பை நசித்துக்கொண்டிருந்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க, முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். குண்டும் குழியுமாய் சிதிலமான தரையில் கிளை பிரியும் தாரையென மூத்திரம் மற்றுமொரு பாதையில் என்னைத் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். விரல்களில் பிடுங்கிய நகக் காயங்களிலிருந்து நோவு கிளர்ந்தது. நீரில் மெதுவாக முங்குவதைப்போல வியர்வையும் மூத்திரமும் கலந்த நாற்றத்தில் புலன்கள் இயல்படையலாயின. இருளை அளைந்தேன். இடது கண் ஒரு கொப்புளம் போல வீங்கிக்கிடந்தது. விழிமடலைத் திறக்கும்போது  பிளேற்றால் தோலை வெட்டிப்பிளப்பதைப்போன்ற வலி. ஒன்றரைப் பார்வையில்  கம்பிகள் கீலங்கீலமாகப் புலப்பட்டன. புகையைப்போல குளிர் பரவிற்று. வெளிச்சத்தின் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. தோலுரிந்ததுபோல சுவர் பூச்சுகள் கழன்று தொங்கும் பழங்காலத்துக் கட்டடத்தில் தனியான…