ஆறாவடு, ரஃபேல் உரை – காணொளி

428193_10150731758500752_216728625751_11586478_1664415358_n

04 மார்ச் 2012 அன்று கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற “ஆறாவடு”  நாவல் விமர்சன அரங்கில்,  ரஃபேல் ஆற்றிய விமர்சன உரையின் முழுமையான காணொளி வடிவம். நிகழ்விற்கு  எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் தலைமையேற்றிருந்தார். Audio Quality: Good - Video Quality: Poor … [Read more...]

சின்ராசு மாமா – சிறுகதை

sintasu

2009 இல் சின்ராசு மாமா என்கின்ற துரோகியென்றொரு குறிப்பினை எழுதியிருந்தேன். குறிப்புத்தான் அது. எப்பிடியோ கதையாகி விட்டிருந்தது. அந்தப் பெயரில் தொகுப்பிற்கான அலுவல்களும் நடந்தன. அப்பொழுதே அக்குறிப்பினை விரித்து எழுத வேண்டுமென்றிருந்தேன். இப்போதைக்கே கூடி வந்திருக்கிறது. தொகுப்பிற்காக திரட்டப்பட்ட எல்லாக் கதைகளையும் மீளத்திருத்தியெழுதுகிறேன். ஒரு பயிற்சியாக இருக்கட்டும். வசந்தகுமார் அண்ணனுக்கு நன்றி சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி சின்ராசு … [Read more...]

முதல் விமர்சனம்

SONY DSC

விமர்சனங்கள் அவை எவ்வகைப்பட்டவையாக இருப்பினும், படைப்பாளியை ஒரு வித கிளர்ச்சி நிலைக்குக் கொண்டு செல்லுமெனச் சொன்னார்கள். அது உண்மைதான். அண்மைக் காலமாக நான் அதனை அனுபவித்தேன். ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்னால் ஒரு விமர்சனத்தை நான் பொக்கிஷமாகப் பாதுகாத்து வந்தேன். எனது சிறுகதையொன்றிற்கான விமர்சனமது. (அர்த்தம் சிறுகதைத் தொகுப்பிற்கானது அல்ல. அதனை யாரும் கண்டுகொள்ளவில்லையென்பதே காலம் எனக்களித்த கருணை:) புடுங்கியிருக்கிறது என்ற சிறுகதையொன்றிற்காக கருணாகரன் அண்ணன் இந்த விமர்சனக் குறிப்பை 2009 ஓகஸ்டில் அனுப்பியிருந்தார். அவரது கையெழுத்தில் ஸ்கான் செய்யப்பட்ட பிரதியாக அது எனக்குக் கிடைத்தது. எனக்கான முதல் விமர்சனமாக அமைந்ததினால் மட்டுமன்றி - அப்போது அவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடாதபடி முகாம் வாழ்க்கையில் அவரது காலம் … [Read more...]

தமன்னாவும் ஒரு ஆபிரிக்க இளைஞனும்

thamanna

சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் வேலை விசா என்று செற்றில் ஆகிவிட்டவர்கள் கூட பிள்ளைகளின் ‘படிப்பிற்காக‘ என்று அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அண்மையில் கனடா சென்று வந்த நண்பர் ஒருவரிடம் சனமெல்லாம் கனடா கனடா என்று ஓடுகிறார்களே அப்படி என்னதான் அங்கே இருக்கென்று கேட்டேன். அவர் பதிலுக்கு அங்கு இடியப்பம் ஐந்து சதங்களுக்கு வாங்கலாம் என்றார். போலந்து சிறையில் அடைக்கப்பட்ட நண்பர் … [Read more...]