தொடர் தாக்குதல்கள்: இலங்கையில் – 1

நானும் அனந்தனும் சேயோனும் கொழும்பில் தாட்சாயினி வீட்டுக்கு போயிருந்தோம். சேயோன் கனடாவிலிருந்து வந்திருந்தான். படிக்கின்ற காலங்களில் முன் நெற்றியில் வந்து விழும் முடிகளை வாயிலிருந்து காற்றுக்கொண்டே ஊதிச் சரி செய்து வயிற்றெரிச்சல் தருகின்றவனை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.அகண்ட தமிழ்த்தனிநாடு எண்டுறது போல அவன்ரை நெற்றி மேலேறி தலையிலும் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து இருந்திச்சு. பரம்பரை வழுக்கையெண்டும் தான் அதைப்பற்றி கவலைப்பட போறதில்லை எண்டும் சொன்னான்.தாட்சாயினி வீட்டை போய் இருக்கிறம். தாட்சாயினியின்ரை அம்மா அதில நான் ஒருத்தன் இருக்கிறதைப் பற்றி சட்டை செய்யாமல் அனந்தனைப்பாத்து அப்ப எப்பிடி அவுஸ்ரேலியா பிடிச்சிருக்கோ எண்டுறா.இது எனக்கு முதலாவது அற்றாக்.அனந்தன் அது நானில்லைங்கோ அது … [Read more...]

பாராளுமன்றில் நான்

கடந்த மாதத்தின் ஒரு வார இறுதியில் ஒஸ்ரேலிய பாராளுமன்றுக்கு சென்று பார்வையிட கூடிய வாய்ப்புக் கிடைத்தது. சிட்னியில் இருந்து கன்பெரா நோக்கிய 3 மணி நேரப் பயணம்! அதுவே மெல்பேணிலிருந்து 7 மணிநேரமாகையால் முதலில் சிட்னிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருக்கின்ற இரண்டு நண்பர்களோடு கன்பெரா நோக்கி புறப்பட்டேன்.கன்பெராவின் மிகச் சரியான வட்டமானதும் நீள் கோடுகளுமான வீதிகளுக்கால் சென்று பாராளுமன்றை அடைந்தோம். கன்பெராவின் வரைபடத்தினை நோக்கும் போது மிகத் தெளிவாகவே அது செயற்கையாக உருவாக்கப்பட்ட நகரம் என்பது விளங்குகிறது.இந்த வரை படத்தில் பாருங்கள். அதன் மையத்தில் இருக்கின்ற சிறிய வட்டத்தில் இருந்த குன்று ஒன்றை வெட்டி எடுத்து அங்கே பாராளுமன்றினை கட்டியிருக்கிறார்கள். சூழ இருக்கின்ற பெரிய வட்டங்களும் நீள் கோடுகளும் நகரின் பிரதான … [Read more...]

ஐரோப்பாவின் உயரத்தில்

Jungfraujoch!தமிழில் இந்த ஜேர்மன் வார்த்தையை எப்படி சரியாக உச்சரிப்பது என்று தெரியவில்லை. எனினும் கிட்டத்தட்ட அது ஜுன்ப்றோ என்னும் வார்த்தைக்கு நெருக்கமுள்ளதாக இருக்கலாம். இது போலவே Bahnhof என்னும் தொடரூந்து நிலையத்தினை குறிக்கும் ஜேர்மன் வார்த்தை, வாணப்பு என, யாரோ ஒரு அப்புவின் பெயரைச் சொல்வது போலவும் Sankt Gallen என்கிற இடத்தின் பெயர் செங்காலன் (யாரோ கரிகாலனின் தம்பி என்பது போல) என்றும் தான் எனக்கு அறிமுகமான சிலதிற் சிலவான ஜேர்மன் வார்த்தைகள் அறிமுகமாயின.மீண்டும் jungfraujochசுவிற்செர்லான்டில் இருக்கிறது ஐரோப்பாவின் உயரமாகிய இந்த வெள்ளிப் பனிமலை! அதன் உச்சியில் நிற்கின்ற போது உடலும் மனசும் சேர்ந்து இளகிப்போகின்றது.ஐரோப்பிய குளிர் நாடுகளிலும் வெயில் இப்படி வெட்டி எறிக்கும் என உணர்த்திய ஒரு summer காலத்தில் நான் jungfraujoch போனேன்.குறித்த ஓர் இடம் வரை சாதாரண … [Read more...]