
சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா தே இவற்றோடு கொண்டுபோன புளிச்சாதம் என 17 மணித்தியாலங்கள் எடுத்தது. அன்றிரவு ரைட் சகோதரர்கள் கனவில் வந்து எங்கட மூஞ்சையப்பாத்தா என்ன வேலை வெட்டியில்லாத கேனைப்பயல்கள் என எழுதியிருக்கா என்றுவிட்டுப் போனார்கள். சுவிற்சர்லாந்தில் வதிகிற மற்றைய தேசியக்காரர் அண்டைநாடுகளுக்குச் செல்வதற்கான விசா அனுமதி முறை கடந்த டிசம்பரில் நீக்கப்பட்டது. எல்லைகளில் ஏனென்றும் கேட்கிறார்கள் இல்லை. பிரான்ஸ் – சுவிஸ் எல்லையில் ஒரு பேருக்காவது வரியல்கள் பொலிசார் நிற்கிறார்கள். … [Read more...]

