வெட்கம்

vedkam

கடந்து சென்ற வாகனமொன்று முழுப்புழுதியையும் கெனடி மீது வாரியிறைத்துவிட்டுப் போனது. எவ்வளவுதான் ஒதுங்கி நின்றாலும் போகிற வருகிற வாகனங்கள் கிளப்புகிற செம்புழுதி உடல் முழுவதும் படியத்தான் செய்கிறது. தெருவில் எந்த மாற்றத்தையும் காண முடியவில்லை. அது அப்பிடியேதான் குண்டும் குழியுமாக கிடந்தது. கெனடியைச் சிலர் ஆச்சரியமாக பார்த்துப் போனார்கள். 'நடை உடைகளில் நான் இந்த இடத்துக்கு புதியவனாக தெரியக்கூடும்' என அவன் நினைத்துக் கொண்டான். 'சங்கக்கடை கடந்தாச்சு இன்னும் கொஞ்சத்தூரம் தான்..' சுமந்து வந்த பையை அடுத்த தோளுக்கு மாற்றி நடையில் வேகமெடுத்து நடந்தான். அம்மாவின் நச்சரிப்பு தாங்காமல் அதிகாலையிலேயே இங்கு வந்து நிவாரணத்திற்காக காத்திருந்த காலங்கள் ஞாபகத்தில் வந்து போயின. அப்போதும் கூட சிலர் நடு இரவிலேயே வந்திருந்து … [Read more...]

சூனிய வெளி

prison

சாகீரை நித்திரையில் வைத்து அமத்திய போதே முதற்காரியமாக அவனது கையிரண்டையும் பின் முதுகில் சேர்த்து அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். சாகீர் தலையை உயர்த்த முடியாதபடி இன்னொரு கை தரையோடு தலையை இறுக்கி வைத்திருந்தது. இடுப்பில் கட்டப்பட்டிருந்த சயனைட் குப்பியை எப்படிக் கடிப்பதென்று தெரியவில்லை.எப்படியாவது செத்து விட வேண்டும். எங்கு பிசகியதெனத் தெரியவில்லை.… ஆனால் பெரும் பிசகல். குலேந்தியும் அருளும் என்னவானார்களோ தெரியவில்லை. அருள் அகன்றிருப்பான். அவன் சுழியன்! கடைசியாய் ரத்மலானையில் வாகனத்துக்குள் சக்கை அடைந்துகொண்டிருந்த போது அவன் அருகில் நின்றிருந்தான். “வாகனத்தின்ரை செஸி நம்பரை இடிச்சு அழிக்க வேணும். அலவாங்கொண்டு கிடைச்சால் நல்லது” அவன் அலவாங்கு அல்லது கோடாலியொன்றைத் தேடிக்கொண்டிருந்தான். சாகீர் அதைப் பெரிதாக … [Read more...]

மோட்டார் சைக்கிள் குரூப்

ZSPBD00Z

முடிச்சுக்களும் திருப்பங்களும் உப்பும் சப்பும் அற்ற இந்தக்கதை தொடங்குகிற போது, முறிகண்டி மாங்குளம் வீதியில் பனிச்சங்குளத்தில் காட்டுக்குள் இறங்கும் ஒற்றையடிப்பாதையில் முதலில் கிச்சின் பிறகு பிள்ளைகளின் (பெட்டைகள் என்று சொன்னால் பனிஸ்ட்மென்ட்) காம்ப் என்று கடந்து தொங்கலில் மூன்று நான்கு, சீற்றுகளால் கூரைவேயப்பட்ட கூடாரங்கள் ஒன்றிலிருந்து இவன் யோசித்துக் கொண்டிருந்தான். "ச்சே.. மெடிக்ஸ்ஸில் நின்ற என்னைத் தூக்கி சிவராசண்ணை மெஸ்ஸில் போட்டுட்டாரே.." இப்பொழுதுதான் மெஸ்ஸில் வேலைகளை முடித்து வந்தான். நேற்றிரவு ஓடிப்போன இருவரைத் தவிர்த்து இன்றைய காலைக் கணக்குக்கு நூற்று நாற்பத்து இரண்டு பேர் முகாமில் இருந்தார்கள். தனிய இவன்தான் மெஸ்ஸில் நிற்கவேண்டியதாய்ப்போனது. சிவராசண்ணை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு ஆக்களுக்கும் சமமான அளவில … [Read more...]

புடுங்கியிருக்கிறது

Smoke

இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்ணைச் சுழட்டிக்கொண்டு வந்தது. மூன்று நாளாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமில்லை. ஒழுங்கான குளிப்பு முழுக்கு கக்கூசு என்று ஒன்றுமில்லை. ரவியண்ணை வீட்டு விறாந்தையில் கிழங்கு அடுக்கின மாதிரி படுக்கிற இருபது இருகைத்தந்து பேர்களில் போன இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவணைக் கண்ணயரவே விடுவதில்லை என்று பிளான் பண்ணியிருந்தார்கள். க்ர்.. புர்.. என்ற அவர்களின் குறட்டைக்கு கவிண்டு படுப்பதும் காதுகளைப்பொத்திப்படுப்பதும் என்று இவனும் உள்ளநாட்டு ட்ரிக்சுகளைப் பாவித்துப்பார்த்தான். தீபன் அப்பப்ப தன் காலைத்தூக்கி இவனின் தொடைக்குமேல போட்டு அவ்..உவ்.. என்று புரியாத ஏதோ மொழியில் புசத்தினான். அவன் ஒவ்வொரு தடவையும் காலைப்போட … [Read more...]