த்ரிஷா உங்களுடைய கேர்ள் ப்ரண்டா?

trisha

இந்த சினிமாச் சுற்று கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்றுதான் நினைக்கிறேன். இப்படி முடிவடைந்து விட்டதாக எல்லோரும் நினைக்கும் பொழுதில் ஏதாவது ஒரு புள்ளியில் முடிவை முறியடித்துக்கொண்டு யாரேனும் எழுவதில்லையா ? அது போலத்தான் இந்தச் சுற்றுக்கு அழைத்த லோசன் சின்னக்குட்டி ஆகியோரின் கேள்விகளோடு நீண்ட தாமதத்தில் வந்திருக்கிறேன். இதற்கு கொஞ்சம் காரத்தை குறைக்கும் நோக்கமும் உண்டு. … [Read more...]

வேட்டைக்காரன் – கடுப்பைக் கிளப்புறார் யுவர் ஆனர்

vijay

நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம். புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் - புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் - ஈழத்தமிழர்கள் திரட்டப்படக்கூடிய சக்தியா என்பதுதான். … [Read more...]

லவ்ஸ் அகராதி! யாழ்ப்பாணத் தமிழில் மட்டுமல்ல

love_clipart_03

வருத்தப்படாத வாலிபர் சங்கப்பதிவில் கானா பிரபா எழுதிய பதிவொன்றின் பிறகு கடந்த வருடத்தின் ஏப்ரலில் செய்திருந்த இந்த ஒலிப்பதிவு நினைவுக்கு வந்தது. இந்நாள் வரை வெளியிடப்படாத இந்தப் பதிவினை இன்று தூசி தட்டி வெட்டியெடுத்தேன். தமிழகத்தினதும் ஈழத்தினதும் பல பகுதிகளில் பயன்படுத்தும் பல்வேறான சொல் வழக்காடல் குறித்து நானும் சோமிதரனும் வரவனையானும் பேசியிருக்கின்றோம். அதிலும் குறிப்பாக கடலை போடுதல் சைட் அடித்தல் ஆள் இவையெல்லாம் எங்கெல்லாம் எப்படி பேசப்படுகின்றது என்ற ரொம்ப ரொம்ப முக்கியமான விசயங்களே இவ் ஒலிப்பதிவின் பேசு பொருள் :)ஒலிப்பதிவில் கலந்து விட்டு பின்னர் இது நாள் வரை ஒருவருடங்களைக் கடந்து போன பின்னும் எப்ப வரும் எனக் கேள்வி கேட்காத வரவனையான் மற்றும் சோமிதரன் ஆகியோருக்கு நன்றி. வழமை போலவே இந்த ஒலிப்பதிவினையும் சிஞ்சா … [Read more...]

மச்சானைப் பாரடி – சுஜித் ஜியின் இன்னொரு பாடல்

[Read more...]