திருத்தியெழுதப்பட்ட கதைகள்

mistakes-alamy_148760s

பிரதீபா (சக்திவேல்) என்றொரு நண்பி கொழும்பில் இருந்தார். அப்பொழுது நாங்கள் உயிர்ப்பு என்றொரு இதழை வெளியிட்டுப் பழகினோம். அதற்கொரு ஆக்கம் கேட்டபோதுதான் சோமிதரன் தன் வாழ்நாள் எழுத்துக்களை ஒரு பைலில் இட்டு “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்ற ரேஞ்சில் தந்திருந்தார். பிறகது தொலைந்து போய்விட்டது என்று மூன்று வார்த்தைகளில் நான் கடந்து போவது அவருக்கு கடுப்பை ஏற்படுத்தலாம். விதி வலியது கொழும்பு பாடசாலையில் வெளியான ஆண்டு மலரிலேயே கண்கெட்ட பிறகும் சூரியநமஸ்காரம் செய்யலாம் என்று அரசியல் கட்டுரைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். அதற்குச் சற்று நாட்களின் முன்னர்தான் சந்திரிகா மீது குண்டுத்தாக்குதல் நடந்து அவர் கண் இழந்திருந்தார். இப்பொழுது சமாதானம் மெலிதாக அரும்பியிருந்தது. ரணில் பதவியேற்றிருந்தார். ஆகவே ஓர் அரசியல் “ஆய்” … [Read more...]

தமன்னாவும் ஒரு ஆபிரிக்க இளைஞனும்

thamanna

சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் வேலை விசா என்று செற்றில் ஆகிவிட்டவர்கள் கூட பிள்ளைகளின் ‘படிப்பிற்காக‘ என்று அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அண்மையில் கனடா சென்று வந்த நண்பர் ஒருவரிடம் சனமெல்லாம் கனடா கனடா என்று ஓடுகிறார்களே அப்படி என்னதான் அங்கே இருக்கென்று கேட்டேன். அவர் பதிலுக்கு அங்கு இடியப்பம் ஐந்து சதங்களுக்கு வாங்கலாம் என்றார். போலந்து சிறையில் அடைக்கப்பட்ட நண்பர் … [Read more...]

ஓகே, ரெடி.. இப்பொழுது காலில் விழலாம்

sethu

பத்து வயதுச் சிறுவனுக்கு குட்டிப் பிரபாகரன் என்று பட்டம் சூட்டியிருக்கிறார்கள். நான் முல்லைத்தீவில் பிறந்தவன், அதனால் தாய் தந்தையர் கால்களைத் தவிர, மற்றவர் (இந்த வார்த்தைக்குப் பதில் ஒவ்வொருவரும் அந்நியர், எதிரிகள் என்ற வார்த்தைகளை தம்பாட்டிற்குச் சேர்த்திருக்கிறார்கள்.) கால்களில் விழமாட்டேன் என சிறுவன் பேட்டியளித்ததாக வேறு சொல்கிறார்கள். சிறுவன் கால்களில் விழப் "பஞ்சிப்படும்" வீடியோவை நான் பார்த்தேன். நமது செய்தியாளர்களும் அந்த வீடியோவையே தமது செய்தி மூலங்களாகக் கொண்டிருப்பர் என்றுதான் நினைக்கிறேன். அந்த ஒளிப்பதில், அமைச்சரிடம் "வணங்கி ஆசிபெறும்" படி இருவர் அவனை ஆயத்தப்படுத்துகின்றனர். அவன் நெளிந்து தயங்கி விலகிச் செல்கின்றான். அவ்வளவும்தான். அவன் ஒரு தமிழனாகவும் மேலதிகமாக முல்லைத்தீவில் பிறந்தவனாகவும் மிக … [Read more...]

பரதேசி நாய்

RACISM

நேற்றிரவு தொடரூர்ந்து நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஆபிரிக்கர், அவராகச் சொன்னபின் சோமாலியர் எனத் தெரிந்து கொண்டேன். சற்றுத் தூரத்தில் நின்று சிரித்தார். சோமாலியா எரித்திரியா போன்ற நாட்டுக்காரர்களின் சிரிப்பில் ஒருவித குழந்தைத்தனம் இருப்பது போல எனக்கு நெடுநாளாகத் தெரிகிறது. பதிலுக்குச் சிரித்தேன். சிநேகபூர்வமாக கிட்ட வந்தவர் தமிலியனா என்றார் (Tamilien) ஜெர்மன் மொழியில் தமிலியன் என்றால் தமிழர்கள். தமிலிஸ் என்றால் தமிழ். சோமாலியாக்காரருக்கு சுவிற்சர்லாந்து பிடிக்கவேயில்லை என்றார். சுவிற்சர்லாந்து வெள்ளையின மக்கள் தங்களை மனிதர்களாகவே நினைப்பதில்லையென்றவர் ஒரு சிறு புன்னகை கூட தங்களை நோக்கி அவர்கள் தருவதில்லை என்றார். புறக்கணிப்பில் வலி அவரது பேச்சிலிருந்தது. இங்கே எதிர்ப்படும் மனிதருக்கு அது எவராயிருந்தாலும் வணக்கம் … [Read more...]