சமீபத்தில் வெளியான எந்தவொரு தமிழ் நாவலும் சயந்தனின் "ஆறாவடு" நாவல் அளவிற்கு சராசரி வாசக மட்டத்தில் அதீத கவனிப்பு பெற்றிருக்கவில்லை என்பது என் எண்ணம். சமூக வலத்தளங்களிலாகட்டும் அல்லது இணையப் பதிவுகளிலாகட்டும் தொடர்ந்தும் "ஆறாவடு" பற்றிய சிலாகிப்புகளோ அல்லது விமர்சனங்களோ தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறன. ஆக, சயந்தன் "எலக்கிய வட்டங்கள்" தாண்டி, வெகுசன வாசகர்கள் மத்தியில் தனது முதல் நாவலிலேயே வெற்றிகரமான நாவலாசிரியராக பரிணமித்திருக்கிறார். வாழ்த்துகள் சயந்தன். சயந்தனின் எள்ளல் தொனியிலான சிறுகதைகள்/ கட்டுரைகள் ஏலவே எனக்கு அவரது இணையப்பக்கமூடாக அறிமுகம். அவரது "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" மற்றும் "ரமில் ரைகர்ஸ் ப்ரீடம் பைற்ரர்ஸ்" போன்ற சிறுகதைகளில் நிஜங்களை எள்ளி நகையாடி கதை சொல்லும் பாணி எனக்கு மிகப் … [Read more...]
ஆறா வடு – பொ.கருணாகரமூர்த்தி
சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் மேற்கொண்டு பிரதி பற்றிய விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று இருந்தேன். என்இயல்பான மெத்தனத்தால் இப்போதுதான் நாவல் எனக்குக் கிடைத்தது. (நான் கேட்டதால் சயந்தனே எனக்கொருபிரதியை அனுப்பிவைத்தார்.) என் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் வீண்போகவில்லை. அத்தனை நம்பிக்கை தருகிறது பிரதி. (பதிவான சில குறிப்புகள்போல) ‘எமக்குத்தெரியாத என்னத்தை இவர் புதிதாகச் சொல்லிவிட்டார்’ என்றகோணத்தில் பிரதியை அணுகுவது சரியல்ல. நாவல்கள் நம் அறிவைப் பெருக்குவதற்காகப் படிக்கப்படுவனவும் அல்ல. இது ஒரு அனுபவப்பகிர்வு. ஆசிரியனின் அனுபவத்தினதும் ஆவேசங்களினதும் கனவுகளினதும் ஒரு கலவை. … [Read more...]
ஆறாவடு, ரஃபேல் உரை – காணொளி

04 மார்ச் 2012 அன்று கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற “ஆறாவடு” நாவல் விமர்சன அரங்கில், ரஃபேல் ஆற்றிய விமர்சன உரையின் முழுமையான காணொளி வடிவம். நிகழ்விற்கு எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் தலைமையேற்றிருந்தார். Audio Quality: Good - Video Quality: Poor … [Read more...]
ஆறா வடு – ரமணீதரன் கந்தையா
1. புலிசார்பு, சிங்கம் சாய்வு என்றில்லாமல் எல்லாவற்றையும் நுள்ளியிருக்கிற புதினம்.... 2. எள்ளல் + துள்ளல் நடை [ஷோபா சக்தியிடம் இதே நளினமும் திறமையும் உண்டு; சொல்லப்போனால், முத்துலிங்கத்திடம் உண்டு (துள்ளல் தவிர்த்து... மயிலாப்பூர்மிடில்கிளாஸுக்கான வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்க்காத மசாலாவுடன்); யோகநாதன் முரளியிடம் உண்டு... ஆனால், ஷோபாசக்தி+யோ.கர்ணன் இடம் சார்பும் சாய்வும் தெளிவாகத் தெரிந்து, சில வாசகர்களை முழுமையாகச் சேராமல் தள்ளி நிற்கச் செய்யும். முத்துலிங்கத்திடம் எப்போதும் சொந்தப்பெருமையின் சாயலே வெளிப்படும். சயந்தனிடம் இச்சார்தல் சாய்தல் இல்லையென்றில்லை; ஆனால், துருத்திக்கொண்டு தெரிவதுபோல, சுயசாய்வின் எள்ளல் சிறிதாக்கப்படுவதில்லை.]..... 3. வாசகர்களுக்கு விளக்கவுரை சொல்வதுபோல, "இப்படியாகப் போனது. அதனால், இவ்வண்ணம் நடந்தது. … [Read more...]