நஞ்சுண்ட காடு

ஈழப்போரிலக்கியத்தில்  புலிப்போராளிகளின் படைப்புக்கள் ஈழப்போரிலக்கியங்களை ஈழத்தின் சகல இயக்கங்கள் சார்ந்தும், மூன்று பெரும்பாகத்தினுள் குறிப்பிடமுடியும். 1. போராளிகள் , களமாடும் சமகாலத்திலேயே எழுதிய படைப்புக்கள் 2. போராட்டத்தின் நேரடிப்பங்காளர்களாக அல்லாத அதனுடைய ஆதரவாளர்களால் எழுதப்பட்ட படைப்புக்கள். 3. போராட்ட அமைப்புக்களிலிருந்து விலகிய பின்னர் அதிருப்தியடைந்த அல்லது அதிருப்தியடைந்த பின்னர் விலகியவர்களால் எழுதப்பட்ட படைப்புக்கள், இங்கே, நஞ்சுண்டகாடு நாவலுக்கு நெருக்கமான பரப்பாக, களத்திலாடும் போதே போராளிகளால் எழுதப்பட்ட நாவல்களை மேலும் குறுக்கி புலிப்போராளிகளால் எழுதப்பட்ட ஒருசில நாவல்கள் பற்றிய குறிப்புக்களோடு நஞ்சுண்டகாடு நாவலுக்குள் நுழைகின்றேன். புலிகள் இயக்கப்போராளிகளால் சிறுகதைகள், கவிதைகள் பலநூற்றுக்கணக்கில் எழுதப்பட்டிருந்தபோதும், நாவல்கள் சொற்ப அளவிலேயே எழுதப்பட்டுள்ளன. அவற்றை எழுதுவதற்கான, நேரமும் பொழுதும் யுத்தத்தையே தம்முடைய பிரதான இலக்காகக் கொண்டவர்களுக்கு வாய்த்திருக்காது என்பதையும் இங்கே மனம்கொள்ள வேண்டும். அவ்வாறாக எழுதப்பட்ட சில நாவல்கள்.. 1. பாலகணேசன் எழுதிய விடியலுக்கு முந்தைய மரணங்கள், 1986 இல் இது புலிகளால் வெளியிடப்பட்டது, ஈழத்தின் முதலாவது யுத்த நாவலும் கூட. கொக்கிளாய் ராணுவ முகாமினைத் தாக்கியழித்த நடவடிக்கையினை இலக்கிய அழகியலோடு இந்நாவல் பதிவுசெய்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. 2. மலரவனின் போருலா, 1993ல் வெளியிடப்பட்டது. இதுவும் மாங்குள ராணுவமுகாம் தகர்ப்பையும் அதில் பங்குபற்றிய போராளிகளின் அனுபவங்களையும் மனவிசாரணைகளையும் பதிவு செய்த ஒரு படைப்பு. 3. போராளியாகவிருந்த தமிழ்க்கவி எழுதிய இருள் இனி விலகும் 2004இல் வெளியானது. யாழ்ப்பாணம் இலங்கைப் படையினரால் கைப்பற்றபட்ட பின்னர் அங்கு அனுப்பப்படுகின்ற பிஸ்ரல் குழு என்று அறியப்படுகின்ற பெண் போராளிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, அவர்கள் யாழ்ப்பாணத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள், சிப்பாய்களை நேராகச் சந்திக்கும் தருணங்கள், சண்டைகள், அடைந்த சாவுகளென அந்தக் குரூப் மறுபடியும் வன்னிக்க மீள்வதுவரை இது பதிவு செய்துள்ளது. 4. இதைவிட மருத்துவப்போராளியாகவிருந்த தூயவன் 3 நாவல்களை எழுதியுள்ளதாக அறியமுடிகிற போதும், வேறு தகவல்களைப் பெறமுடியவில்லை. 5. இறுதியாக … [Read more...]

ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்

தமிழ்கவி அம்மாவிற்கு இப்பொழுது வயது 64. அவர் எனது சிறுவயதுகளில் புலிகளின் குரல் வானொலியூடாக குரல்வழியில் அறிமுகமாயிருந்தார். வானொலி நாடகங்களில் வட்டாரப்பேச்சு வழக்கில், ‘அப்பிடியாமோ’ ‘மெய்யாமோ’ என்ற அவரது வார்த்தைகள் நினைவில் நிற்கின்றன. நாட்டார் பாடல்கள் பற்றிய நிகழ்ச்சிகளும் செய்திருந்தார். தமிழ்கவி அம்மாவை இதுவரை நான் நேரிற் சந்தித்துப் பேசியதில்லை. ஒருமுறை நேரிற் கண்டிருக்கிறேன். 2005இல் கிளிநொச்சி திருநகரில் அமைந்திருந் த.தே.தொ அலுவலகத்திற்கு நானும் சோமிதரனும் ஒருதடவை போயிருந்தோம். தவபாலன், கருணாகரன் ஆகியோரோடுதான் உரையாடல். அப்பொழுது வீதி வாயிலில் மடித்த இரட்டைப்பின்னலோடும், புலிச் சீருடையோடும் மோட்டர்சைக்கிளிலிருந்து (MD 90?) இறங்கி வந்தார் தமிழ்கவி. அங்குநின்ற ஒன்றிரண்டு பெண்போராளிகளை “என்னடி பிள்ளைகள்..” என்று விளித்துச் சிரித்தபடி வந்ததாக நினைவு. (அப்பெண்போராளிகளில் இசைப்பிரியாவும் ஒருவராயிருந்தார் என்பது துயர நினைவு) புலம்பெயர்ந்த பிறகு, தொலைக்காட்சிகளிலும் தமிழ்கவி அம்மாவைக் கண்டேன். அம்பலம் என்றொரு நிகழ்ச்சி செய்தார். வேலிக்கதியாலில் குழை பறித்துக்கொண்டோ, அல்லது கோடாரியால் விறகு கொத்திக்கொண்டோ.. “பின்ன உவன் மகிந்தவுக்கு உது தெரியாதாமோ” எனத்தொடங்குகிறமாதியான நாட்டு நடப்பு உரையாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அதன்பிறகு 2009 மார்ச்சில், இறுதிக்காலத்தில் யுத்தகளத்திலிருந்து வெளியான காணொளி ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை. 0 0 0 ஊழிக்காலம் நாவலை நான் படித்து முடித்தபோது, மிகச்சரியாகச் சொன்னால், ஓரிடத்தில் தரித்து நிற்கமுடியாமல், உயிர்ப் பயத்தோடு ஓடி அலைந்த ஒருவன் கடைசியாக சகல நம்பிக்கைகளையும் தின்னக்கொடுத்துவிட்டு நடப்பது நடக்கட்டும் என்ற மாதிரயான மனநிலையில் ஒரு மரநிழலில் குந்தியிருந்த்தைப்போல உணர்ந்தேன். அத்தனை அலைக்கழிவு நாவலில்.. ஊழிக்காலம் 2008இற்கும் 2009இற்கும் இடையிலான குறுகிய காலமொன்றில் நடந்த நீண்டபயணத்தின் கதை. அறுபது வயதில் உள்ள ஒரு தாய்/பேத்தியார் தனது பிள்ளைகளோடும் பேரப்பிள்ளைகளோடும், தெருவில் பொங்கி வழிந்து துரத்திய தீக்குழம்பின் முன்னால், அத் தீ நாக்குகளில் அகப்பட்டுவிடக்கூடாது என்ற பரிதவிப்போடு ஓடுகிற கதை. அப்படி ஓடுகிறவர், ஈழப்போரில் தன்னையும் ஒருவிதத்தில் இணைத்துக்கொண்டிருந்தார் என்பது … [Read more...]