தொடர் தாக்குதல்கள்: இலங்கையில் – 1

நானும் அனந்தனும் சேயோனும் கொழும்பில் தாட்சாயினி வீட்டுக்கு போயிருந்தோம். சேயோன் கனடாவிலிருந்து வந்திருந்தான். படிக்கின்ற காலங்களில் முன் நெற்றியில் வந்து விழும் முடிகளை வாயிலிருந்து காற்றுக்கொண்டே ஊதிச் சரி செய்து வயிற்றெரிச்சல் தருகின்றவனை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.அகண்ட தமிழ்த்தனிநாடு எண்டுறது போல அவன்ரை நெற்றி மேலேறி தலையிலும் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்து இருந்திச்சு. பரம்பரை வழுக்கையெண்டும் தான் அதைப்பற்றி கவலைப்பட போறதில்லை எண்டும் சொன்னான்.தாட்சாயினி வீட்டை போய் இருக்கிறம். தாட்சாயினியின்ரை அம்மா அதில நான் ஒருத்தன் இருக்கிறதைப் பற்றி சட்டை செய்யாமல் அனந்தனைப்பாத்து அப்ப எப்பிடி அவுஸ்ரேலியா பிடிச்சிருக்கோ எண்டுறா.இது எனக்கு முதலாவது அற்றாக்.அனந்தன் அது நானில்லைங்கோ அது அவர் என்று என்னைக்காட்டி நெளியுறான்.சேயோன் சிரிசிரியெண்டு சிரிக்கிறான். எட நாசம் கட்டினது. என்ரை மூஞ்சையைப்பாத்தா வெளிநாட்டில இருந்து வந்தவன் மாதிரி தெரியேல்லையாம். நான் என்ன செய்யிறது.என்ரை கையில டிஜிற்றல் வீடியோ கமெராவும் இல்லை. அந்த முழங்காலுக்கு கீழே போடுற காற்சட்டையும் போடேல்லை. அப்ப நான் வெளிநாடு எண்டு கண்டு பிடிக்கிறது அவவுக்கு கஸ்ரமாத்தானே இருந்திருக்கும்.எண்டாலும் என்ரை முகம் கொழு கொழு மொழு மொழு எண்டு இல்லையாம். வெளிநாடுகளில இருந்து வாறவை அப்பிடித்தானாம் இருக்கிறவை.நான் என்னத்தை செய்ய? என்ரை முக விருத்தம் அப்பிடி!இப்ப நான் சோமிதரனோடை கிளிநொச்சிக்கு போறன். ஒரு பின்னேரப் பொழுது. கிளிநொச்சியில திட்டமிடல் செயலகத்தில க.வே பாலகுமாரனை சோமிதரன் ஏதோ ஊடக அலுவலாய்ச் சந்திச்சு கதைச்சுக் கொண்டிருந்தான். நான் அந்த இடங்களை சுத்திப் பாத்துக்கொண்டிருந்தன்.இப்ப பாலகுமாரன் என்னோடை கதைக்கேக்கை சொன்னார். நான் முதலில நினைச்சன் நீர் லோக்கல் ஆள் எண்டு.இது எனக்கு ரண்டாவது அற்றாக்.பிறகு சோமிதரன் சொன்னான். நீ கை இல்லாத கலர் பனியன் போட்டுக்கொண்டு வாறதுக்கு பதில் உப்பிடி வெள்ளைச் சேட்டோடை வந்தால் எப்பிடித் தெரியும் நீ வெளிநாடு என்று?எட! இது வேறையோ? நான் வெயிலுக்கு வெள்ளைச் சேட்டுத்தான் நல்லது எண்டு போட்டுக்கொண்டு போனனான்.இப்ப திரும்பவும் கொழும்பில! படிச்ச பள்ளிக்குடத்துக்கு போறம். நான் சேயோன் நிரஞ்சன் மற்றது ஜெயகாந்தன் ஜீவன். எல்லா ஆசிரியர்களையும் … [Read more...]

பாராளுமன்றில் நான்

கடந்த மாதத்தின் ஒரு வார இறுதியில் ஒஸ்ரேலிய பாராளுமன்றுக்கு சென்று பார்வையிட கூடிய வாய்ப்புக் கிடைத்தது. சிட்னியில் இருந்து கன்பெரா நோக்கிய 3 மணி நேரப் பயணம்! அதுவே மெல்பேணிலிருந்து 7 மணிநேரமாகையால் முதலில் சிட்னிக்கு விமானம் மூலம் சென்று அங்கிருக்கின்ற இரண்டு நண்பர்களோடு கன்பெரா நோக்கி புறப்பட்டேன்.கன்பெராவின் மிகச் சரியான வட்டமானதும் நீள் கோடுகளுமான வீதிகளுக்கால் சென்று பாராளுமன்றை அடைந்தோம். கன்பெராவின் வரைபடத்தினை நோக்கும் போது மிகத் தெளிவாகவே அது செயற்கையாக உருவாக்கப்பட்ட நகரம் என்பது விளங்குகிறது.இந்த வரை படத்தில் பாருங்கள். அதன் மையத்தில் இருக்கின்ற சிறிய வட்டத்தில் இருந்த குன்று ஒன்றை வெட்டி எடுத்து அங்கே பாராளுமன்றினை கட்டியிருக்கிறார்கள். சூழ இருக்கின்ற பெரிய வட்டங்களும் நீள் கோடுகளும் நகரின் பிரதான வீதிகள்.சாதாரணமாக உள்ளே அனுமதிக்கிறார்கள். இருப்பினும் உட்செல்லும் வழியூடாக உடல் scan செய்யப் படுகிறது. உள்ளே பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் இடங்களைப் பார்த்தோம்.இன்னுமொரு பகுதியில் சிறிய திரையரங்கில் பாராளுமன்றம் அமைக்கப்பட்ட வரலாறு கட்டட பணிகள் நடைபெற்ற நாட்கள் என்பவற்றை திரையில் காட்டுகிறார்கள்.பாராளுமன்றிற்கு மேலே சாதாரண தரை போல புல் வளர்க்கிறார்கள். அங்கிருந்து பார்க்கும் போது பழைய பாராளுமன்று தெரிகிறது.பாராளுமன்றத்திலிருந்து வெளியேறிய போது அதன் முன்பாக இருக்கின்ற சிறிய நீர்ச் சுனையில் கால் நனைத்தேன். அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவர் வந்து அதை நிறுத்தச் சொன்னார். காவல் அதிகாரிகள் இப்படித் தான். தங்களுடைய அதிகாரங்களை காட்டுகிறார்கள் என்று நினைத்த போது அவர் சொன்னார். அந்த நீர் அழுக்காக இருக்கிறதாம். காலில் தொற்றுக்கள் ஏற்பட கூடுமாம். ம்!!!!!என்ன அங்க நிக்கிறது!! போ போ.. படமெல்லாம் எடுக்க கூடாது!! இங்க நிக்க கூடாது!! இப்படியெல்லாம் சொல்லாத இவர்கள் எல்லாம் என்ன காவல் அதிகாரிகள்!! … [Read more...]

ஐரோப்பாவின் உயரத்தில்

Jungfraujoch!தமிழில் இந்த ஜேர்மன் வார்த்தையை எப்படி சரியாக உச்சரிப்பது என்று தெரியவில்லை. எனினும் கிட்டத்தட்ட அது ஜுன்ப்றோ என்னும் வார்த்தைக்கு நெருக்கமுள்ளதாக இருக்கலாம். இது போலவே Bahnhof என்னும் தொடரூந்து நிலையத்தினை குறிக்கும் ஜேர்மன் வார்த்தை, வாணப்பு என, யாரோ ஒரு அப்புவின் பெயரைச் சொல்வது போலவும் Sankt Gallen என்கிற இடத்தின் பெயர் செங்காலன் (யாரோ கரிகாலனின் தம்பி என்பது போல) என்றும் தான் எனக்கு அறிமுகமான சிலதிற் சிலவான ஜேர்மன் வார்த்தைகள் அறிமுகமாயின.மீண்டும் jungfraujochசுவிற்செர்லான்டில் இருக்கிறது ஐரோப்பாவின் உயரமாகிய இந்த வெள்ளிப் பனிமலை! அதன் உச்சியில் நிற்கின்ற போது உடலும் மனசும் சேர்ந்து இளகிப்போகின்றது.ஐரோப்பிய குளிர் நாடுகளிலும் வெயில் இப்படி வெட்டி எறிக்கும் என உணர்த்திய ஒரு summer காலத்தில் நான் jungfraujoch போனேன்.குறித்த ஓர் இடம் வரை சாதாரண தொடரூந்தில் பயணித்து பின்னர் விசேடமான தொடரூந்துகள் மூலம் பயணம் தொடர்ந்தது.மலைகளை சுற்றி சுற்றி ஏறாமல் அவற்றினை உள்ளாக ஊடறுத்து செல்லும் தொடரூந்தின் சில்லுகள் கூடிய உராய்விற்காக பற்சில்லுகளாக அமைக்கப்பட்டிருந்தன.அவ்வப்போது வண்டியை நிறுத்தி மலையின் உள்ளிருந்து வெளியே பார்க்க விடுகிறார்கள்.எங்கெங்கு நோக்கினும் வெண்பனி மலைகள் தான்!பயணத்தின் போதே வண்டி செல்லும் பாதை அமைக்கப்பட்ட வரலாற்றினை ஒளிப்படமாக காட்டுகிறார்கள்.முடிவில் உள்ளாக வந்து வெளியே தலைகாட்டுகிறது தொடரூந்து.பனிச்சறுக்கு, பார்வையிடும் இடங்கள் என பொழுது போக்கு மையங்களோடு விரிந்தது அந்தப் பனிப்பாலை வனம்!பனிமாளிகை என்னும் ஓர் இடம்!பனிக்கட்டியில் செதுக்கப்பட்ட உருவங்களை வைத்துப் பேணுகிறார்கள் அங்கு! நடந்து செல்லும் பாதை கூட பனிப் பளுங்கில் தான் இருந்தது.அந்த இடத்திற்கு வந்து போனதாய் சான்றிதழ் கூட தருகிறார்கள். ஆனால் காசு!ஏதோ புது உலகில் நிற்பது போன்ற உணர்வு அங்கு நின்ற ஒவ்வொரு கணமும் இருந்தது. … [Read more...]