All posts filed under “பயணம்

comment 0

ஸ்பெயின் ஒரு பயணம்

சுவிற்சர்லாந்தின் மத்தியிலிருந்து ஜெனிவா வழியூடாக பிரான்ஸைக் குறுக்கறுத்து அத்திலாந்திக் கடலோரத்தில் ஸ்பெயினின் சன் செபஸ்ரியான் நகருக்கு , சுமார் 1300 கிலோமீற்றர்கள் என்றும் சென்று சேர 13 மணித்தியாலங்களென்றும் நவி காட்டினாலும் வழிநெடுக சுச்சா சிச்சா முச்சா மற்றும் கபே கோலா தே இவற்றோடு கொண்டுபோன புளிச்சாதம் என 17 மணித்தியாலங்கள் எடுத்தது. அன்றிரவு ரைட் சகோதரர்கள் கனவில் வந்து எங்கட மூஞ்சையப்பாத்தா என்ன வேலை வெட்டியில்லாத கேனைப்பயல்கள் என எழுதியிருக்கா என்றுவிட்டுப் போனார்கள். சுவிற்சர்லாந்தில் வதிகிற மற்றைய தேசியக்காரர் அண்டைநாடுகளுக்குச் செல்வதற்கான விசா அனுமதி முறை கடந்த டிசம்பரில் நீக்கப்பட்டது. எல்லைகளில் ஏனென்றும் கேட்கிறார்கள் இல்லை. பிரான்ஸ் – சுவிஸ் எல்லையில் ஒரு பேருக்காவது வரியல்கள் பொலிசார் நிற்கிறார்கள். பிரான்சில் இருந்து ஸ்பெயினுக்குள் நுழைந்தோம் என்பதை நவி சொல்லித்தான் தெரிந்தோம். ஐரோப்பா ஒன்றாகிவிடும்போலத்தான் தெரிகிறது. பிரான்ஸ் ஆகட்டும் ஜெர்மன் ஆகட்டும் தமிழை வைத்தே வழிகேட்ட தமிழை வைத்தே சாப்பாட்டுக்கடை எங்கென்று…

comments 8

SuperCup க்கு தமிழ் என்ன இலங்கையில் 3A

மோட்டச்சைக்கிளில் (அதை மோட்டச்சைக்கிள் என்று சொல்லலாமோ தெரியாது. சோமிதரன் தான் கொண்டு வந்திருந்தான். TVS 50 ரகம் போல வேறொன்று. லைசென்ஸ் தேவையில்லையென்ற படியால் இறங்கி ஏறும் சோதனைச்சாவடிகளில் அந்த வண்டிதான் சரியான தெரிவு என அவன் சொன்னான்.) நானும் சோமிதரனும் நாவற்குழி பாலத்தை தாண்டுகிறோம். பாலத்தில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சைக்கிள் மோட்டர்சைக்கிள் தவிர்ந்த வாகனங்களுக்கு அந்த வீதி மூடப்பட்டிருந்தது. அந்தப்பாலத்தினை என்னால் எண்டைக்கும் மறக்க முடியாது. 95 இன் இடம் பெயர்வில் பாலத்தில் ஏறுவது ஆபத்தென எண்ணி அருகே நீர் நிலைக்குள் நெஞ்சு முட்டும் தண்ணிக்குள்ளால் நடந்த ஞாபகங்கள் அந்தப் பாலத்தை கடக்கும் பொழுதுகளில் வரும். கைதடி தாண்டி, சாவகச்சேரி தாண்டி, கொடிகாமம் தாண்டி எழுது மட்டுவாள் வீதியில் ஏற இப்போது நான் ஓட்டத்துடங்கினேன். எழுதுமட்டுவாளிலிருந்து நாகர்கோயில் செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்தினில்த்தான் நாங்கள் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தோம். தற்போது அது உயர்பாதுகாப்பு வலயம். எழுதுமட்டுவாளின் வீதிகள்…

comments 14

என்னத்தை சொல்ல – இலங்கையில் 3

‘உவரோடை எதுக்கு அடிக்கடி தனகுறாய்’ எண்டு அம்மம்மா கேட்டா. ‘தனகேல்லையம்மம்மா, அவர் சொல்லுறதுகளுக்கு பின்னூட்டம் குடுக்கிறன் என்றன் நான். அம்மம்மாவுக்கு பின்னூட்டம் எண்டால் என்னெண்டு விளங்கேல்லைப் போலை. ‘என்ன விண்ணானக் கதை கதைச்சுக் கொண்டிருக்கிறாய் எண்டா அவ. எண்டாலும் நான் அவரோடை தனகுப்படுறது அவவுக்கு பிடிக்கவில்லை. ஆனா உண்மையா நான் அவரோடை தனகுப்படேல்லை. அவருக்கும் எனக்கும் சாதாரண சம்பாசனைதான் நடந்திச்சு. எண்டாலும் அவர் ஒண்டு சொல்லுறதும் அதுக்கு நான் நக்கலா அல்லது கொஞ்சம் குத்தலா பதில் சொல்லறதும் எங்களுக்குள்ளை நடந்து கொண்டிருக்க, அதை அம்மம்மா நானும் அவரும் தனகுப்படுறம் எண்டு விளங்கி கொண்டாவோ தெரியேல்லை. அந்த அவர் லண்டனில இருந்து இரண்டு சின்னப்பெடியள் மற்றும் மனைவியோடை வந்திருந்தவர். 2002 இலிருந்து ஒவ்வொரு விடுமுறைக்கும் இலங்கைக்கு வந்து போறவர். அதுக்கு முதல் ரண்டு மூண்டு வருசம் இந்தியாக்கு வந்து போனவராம். ஏனெண்டால் 2002 க்கு பிறகு தானே இலங்கையில் சண்டை நிண்டது. அதுக்கு…

comments 16

அசைலம் அடிக்கேல்லையோ- இலங்கையில் -2

அந்த ஆச்சி கிட்டடியில சாகப்போற மாதிரி, எனக்கு தெரியேல்லை. ஆனாலும் அம்மா சொன்னா. “நீ அடுத்த முறைக்கு வரேக்கை மனுசி இருக்குதோ இல்லையோ தெரியாது. எதுக்கும் ஒருக்கா போய்ப்பாத்திட்டு வா.” பரவாயில்லை. மனுசி திடகாத்திரமாத்தான் இருந்தது. என்னைக் கண்டவுடனை அடையாளம் கண்டுகொண்டிச்சு. “வாப்பு. என்னப்பு சரியா இளைச்சு போட்டாய்? சரியான சாப்பாடு இல்லைப்போல?” நான் மெல்லிசா சிரிச்சு வைச்சன். “எப்பிடி இருக்கிறியள்” எண்டு கேட்டன். “முந்தி மாதிரி ஓடியாடி வேலையள் செய்ய முடியேல்லை. எண்டாலும் பரவாயில்லை. ஏதோ இருக்கிறன். கடவுள் எப்ப என்னை எடுக்கப்போறாரோ தெரியேல்லை.” எண்டு அவ சொன்னா. எனக்கெண்டால் இப்ப கடவுள் எடுக்க மாட்டார் எண்டு தான் தோன்றிச்சு. மனிசி நிறைய கதைச்சது. கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தது. இருந்தாப்போல கேட்டுது. “அப்ப உனக்கு அங்கை காட் கிடைச்சிட்டுதோ?” யாழ்ப்பாணத்தில இப்ப வெளிநாடு சம்பந்தப்பட்ட பொதுவான பேசுபொருள் இது தான் என்றாலும் செத்தாலும் செத்துப்போடும் போய்ப்பாத்து விட்டு வா…