ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்

19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது. நேர்காணல் : கருணாகரன் 1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன? அது எப்ப வருது? அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று பெயர். எழுதிக்கொண்டிருந்த காலம் முழுவதும் பெரிய மன அழுத்தத்தைத் தந்த நாவல் ஆதிரை. அந்த நாவல் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத்தானே கொண்டிழுத்துக்கொண்டுபோனபோது ஒரு கையாலாகாதவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்., மனம் சலிச்சு, இதிலிருந்து வெளியேறி விடவேண்டுமென்று நொந்துகொண்டிருந்தேன். அதுவொரு அலைக்கழிப்பான காலம். அதை எழுதிமுடித்து அது வெளியாகிவிட்ட பிறகும் கூட, துயரப்படும் ஒரு மாந்தர் கூட்டத்தைக் கைவிட்டுவந்த ஓர் உணர்வுதான் இருக்கிறது. இதை மறுபடியும் எழுதித்தான் கடக்கவேண்டும்போலிருக்கிறது. உண்மையைச் சொன்னால் மனது ஒரு கொண்டாட்டத்தை விரும்புகிறது. ஆறாவடு எள்ளலும் துள்ளலுமாக எழுதப்பட்ட ஒரு நாவல். இப்பொழுது யோசித்தால் ஒரு துயரக்கதையை பகிடியும் பம்பலுமாக எப்பிடிச் சொல்லியிருக்க முடியும் என்று தோன்றுகிறது. அதனால் அந்த மொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அவுஸ்ரேலியாவின் மெல்பேண் நகரிலிருந்த ஒரு பல்கலைக்கழகம், ஒரு பெற்றோல் ஸ்ரேஷன், ஒரு மக்டோனால்ட்ஸ் உணவகம், ஒரு மாணவர் விடுதி இவற்றைச் சுற்றுகின்ற ஒரு குறுநாவலாக அது உருவாகியிருக்கிறது. கலையாடியை ஆண் மனமும், பெண் உடலும் என்றவாறாகக் குறுக்கிச் சொல்லலாம். 2. இப்படி வெவ்வேறு தளங்களில் புதிய வாழ்க்கையை எழுதுவது அவசியமே. ஆனால், புதிய நாவலில் “ஆண்மனமும் பெண் உடலும் பேசப்படுகின்றன” என்று சொல்கிறீங்கள். இதில் நீங்கள் குறிப்பிடும் பெண் உடல் என்பது தமிழ்ப் பெண்ணை மையப்படுத்துகிறதா? தவிர, பெண்ணுடலை எந்த வகையில் வைத்து நோக்குகிறீங்கள்? கலையாடியில் ஓர் ஆண்மனம், பெண்ணைப் புரிந்துகொண்டிருக்கிற அரசியல்தான் பேசப்பட்டிருக்கிறது, பெண்ணை வெறும் உடலாக நோக்குவதும், அதனை ஒரு சொத்து என்று கருதி அதில் தனது உரிமையை நிறுவும் அதிகாரமும், பெண்ணின் ஆன்மாவை எதிர்கொள்ளும் துணிச்சலற்று, தோல்வியை மறைக்க அவளின் உடலில் கட்டவிழ்க்கும் வன்முறையும்தான் ஓர் இழை என்றால் அதற்குச் சமாந்தரமாக மறு இழையில் இவற்றையெல்லாம் கேலியாக்கி எள்ளி நகையாடும் பெண் உணர்வும், சமயங்களில் … [Read more...]

நேர்காணல் – அம்ருதா மாத இதழ்

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் சயந்தன் தமிழில் எழுதும் முக்கிய படைப்பாளி. “ஆறாவடு“ நாவலின் மூலமாக தமிழ்ப்பரப்பில் கூடுதல் கவனத்தைப் பெற்றவர். “பெயரற்றது“ இவருடைய சிறுகதைகளின் தொகுதி. இப்பொழுது வந்திருப்பது “ஆதிரை“. வந்த சில வாரங்களிலேயே அதிகமான உரையாடல்களை “ஆதிரை“ உண்டாக்கியுள்ளது. ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் என்ற தளத்தில் கட்டமைந்திருக்கும் ஆதிரை எழுப்புகின்ற கேள்விகள் பல கோணங்களில் ஆயிரமாயிரம். “யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன்“ என்று கூறும் சயந்தன் யாழ்ப்பாணம், சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்து போர்க்கால வாழ்வின் வழியே இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர். பின்னர், வன்னியிலிருந்து மீண்டு புலம்பெயர்ந்தவர். சயந்தனுடனான இந்த நேர்காணல் இணைய உரையாடலின் வழியாக நிகழ்த்தப்பட்டது. - கருணாகரன் ஆறாவடுவுக்குப் பிறகு ஆதிரை. எப்படி உணர்கிறீர்கள்? ஆறாவடு எழுதிமுடித்தபோதிருந்த நிறைவு இப்போது ஆதிரையிலும் இருக்கிறது. ஆனால் ஆறாவடு மீது இப்போது நிறைவில்லை. இதுவே ஆதிரைக்கும் நிகழக்கூடும். ஆதிரை கொண்டிருக்கும் கலையும் அரசியலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? மனதில் உருவாகிய வெளிப்பாடா? 2009இல் யுத்தம் முடிந்து 4 வருடங்களிற்குப் பின்னர் வன்னியில் என்னோடு கூடப்படித்த ஒருவனைச் சந்திக்கச் சென்றேன். படிக்கின்ற காலத்தில் அவனுடைய அம்மா அப்பம், போண்டா, சூசியம் முதலான உணவுப் பண்டகளைத் தயாரித்து பள்ளிக்குட வாசலில் வைத்து விற்பதற்காக எடுத்துவருவார். பாட இடைவேளைகளின் போது அம்மாவிற்கு உதவியாக அவன் நிற்பான். போர் அந்த நண்பனுடைய ஒரு காலைக் கவ்விக் கொண்டுபோயிருந்தது. இப்பொழுது அவன் ஒரு பலசரக்குக் கடை வைத்திருந்தான். வெறுமையாகக் கழிந்த நமக்கிடையிலான உரையாடலின் ஏதோ ஒரு கட்டத்தில் வெளிநாடுகளில் எப்படி வதிவிட உரிமைகளைப் பெறமுடியும் என்பதைப் போன்ற அவனுடைய இயல்பான ஒரு கேள்விக்கு யுத்தத்தைக் காரணம்காட்டித்தான் என்று சட்டென்று சொல்லிவிட்ட அடுத்த நொடியிலேயே அவனுடைய கண்களை எதிர்கொள்ளும் தைரியத்தை நான் இழந்துவிட்டிருந்தேன். ஆதிரைக்கான முதற்புள்ளி அப்பொழுதே உருவாகியிருக்க … [Read more...]

தமிழகத்தையும் ஈழத்தையும் இணைப்பது எது எனக் கேட்டால்..? -தீராநதி

போருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சாத்தியாமான எல்லா எல்லைகளையும் தொட்டு விடும் துடிப்பு அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தனது ‘ஆறாவடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகமாகியிருப்பவர் சயந்தன். நாவல் வெளி வந்த மிகக்குறுகிய காலத்திலேயே புகலிடத்திலும், இலங்கையிலும் விவாதிக்கப்படும் முன்னணி படைப்பாளியாகியிருக்கிறார். “கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன.” என்று சொல்லும் சயந்தன் இப்போது சுவிஸ்சில் வாழ்கிறார். மனதுக்குப் பட்டதை பளிச்சென்று பேசிவிடும் சயந்தனின் நேர்காணல்...... தீராநதி: உங்களுடைய ஆறாவடு நாவலுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது? சயந்தன்: நாவல் வெளியான நாளிலிருந்து, அங்கீகாரமும் நிராகரிப்பும் மாறி மாறி வந்தபடியிருந்தன. ஆறாவடு எனது முதல் படைப்பு, முதற் படைப்பொன்றின் படைப்பாளி என்ற வகையில் அங்கீகாரங்களும் எனக்கு நெருக்கமான எழுத்துக்களைப் படைத்த எழுத்தாளர்களது பாராட்டுக்களும் ஒரு வித கிளர்ச்சியைத் தந்தன என்பதை மறைக்க முடியாது. விமர்சனங்கள் என்ற வகையில், அது விமர்சகர்களது இலக்கிய அழகியல் கொள்கைகள், அவர்களது வாசிப்புச் சார்ந்த எதிர்பார்ப்புக்கள், வாசிப்புச் சார்ந்த அனுபவங்கள், படைப்பாக்கம் மீதான தேடல்கள் மேலும் அவர்களது அரசியல் பார்வைகள் கூட தீர்மானிக்கின்றன என்பதை அறிந்தேயிருந்தேன். என்னுடையதற்கு மாற்றாக முற்றிலும் மாறுபட்ட எதிர்நிலைப் பார்வையொன்றை ஒருவர் கொண்டிருக்க முடியும் என்ற உண்மையை ஏற்றுக் கொள்வதோடு விமர்சனத்திற்கும் எனக்குமான உறவு முடிந்து விடவேண்டுமென்பதே எனது விருப்பம். மட்டுமல்லாது நாவல் மீதான எதிர் நிலைப் பார்வைகளை ஒளித்தும் மறைத்தும் வைக்காதிருத்தல், அவற்றிற்கான வெளிகளை உருவாக்குதல் என்பவற்றிலும் ஆர்வம் கொண்டிருக்கிறேன்.இன்னொரு நிலையில் நாவல் மீதான அங்கீகாரங்களும் நிராகரிப்புக்களும் தமக்குள் உரையாட ஆரம்பித்தன. அவற்றைக் கூர்மையாக அவதானிக்கத்தொடங்கினேன். ஒரு படைப்பாளியாக பயன்தரு விடயமாக அவ்வுரையாடல்கள் அமைந்தன. அவ்வாறான உரையாடல்களிலிருந்தே கற்கவும் முடிந்தது. தீராநதி: ஆறாவடு என்பது யுத்தம் ஏற்படுத்திய வடுதான் இல்லையா? அது உங்களுக்குள் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது. நீங்கள் எப்போது இடம் … [Read more...]

பிரபாகரனுக்கு இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை – விகடன்

''இத்ரிஸ் என்கிற எரித் திரியக் கிழவனுக்கு 30 வருடங்களுக்கு முன்னர் கருமையும் திரண்ட தோள்களும் உருக்குலையாத கட்டான உடலும் வாய்த்துஇருந்தது. இப்போதுபோன்று இடுங்கிய கண்களும் ஒடுங்கிய கன்னங்களும் கோடுகளாகச் சுருங்கிய தோல்களும் இருக்க வில்லை. அகன்ற நெற்றியும் தலையோட் டினை ஒட்டிச் சுருள் சுருளாயிருந்த தலை மயிரும் அவனுக்கு இருந்தன. எப்போதும் எதையோ சொல்லத் துடிப்பதுபோலத் தடித்த உதடுகளை அவன் கொண்டு இருந் தான். உறுதியான கரங்கள் எத்தியோப்பியப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகளைத் தாங்கி இருந்தன. இருண்ட வானத்தில் இரண்டு சூரியன்களைப் போன்ற பிரகாசமான கண்கள் அவனுக்கு இருந்தன. அவற்றில் சதா காலத்துக்கும் ஒரேயரு கனவு மீதம் இருந்தது. அது தனி எரித்திரிய விடுதலை தேசம்!'' - தனது 'ஆறாவடு’ நாவலின் இறுதி அத்தியாயத்தை இப்படி ஆரம்பிக்கிறார் சயந்தன். 50 ஆண்டுகளாக ஈழத்தில் நடைபெறும் இன ஒடுக்குமுறை, 30 ஆண்டு கால ஆயுத யுத்தம் என நாடுநாடாக நிழல் தேடி ஓடிய ஈழ மக்களின் ஓட்டத்தையும் அதன் கொடும் வலியையும் மக்களின் பார்வையில் இருந்து தனது நாவலில் பதிவுசெய்திருக்கும் சயந்தன், அண்மையில் தனது நாவல் வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்தார். அவருடன் உரையாடியதில் இருந்து... ''இடப்பெயர்வுதான் ஈழ மக்கள் சந்தித்த இரண்டாவது பெரும் யுத்தம். ஒரு பக்கம் இனவாத அரசு, இன்னொரு பக்கம் ஊரைவிட்டுத் துரத்தும் இடப்பெயர்வுகள் என இயற்கையோடு மோதிய உயிர் விளை யாட்டு அது. அப்படித்தான் எங்களின் இடப்பெயர்வும் நடந்தது. எனக்கு மூன்று வயதாக இருந்தபோது, 1983-ல் அப்பா சவுதி அரேபியாவுக்கு இடம்பெயர்ந்தார். 1995-ல் நடந்த மாபெரும் இடப்பெயர் வில் நானும் அம்மாவும் தங்கையும் யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவில் காடு கள் சூழ்ந்த தேவிபுரம் எனும் கிராமத்துக்கு இடம்பெயர்ந்தோம். மூன்று வருடங் களுக்குப் பிறகு 'வெற்றி நிச்சயம்’ என்ற பெயரில் வன்னி மீது இலங்கை ராணுவம் பெரும் எடுப்பில் போர் தொடுத்தது. மீண்டும் உயிர் வாழ்க்கை நிச்சயமற்ற தாகியபோது, மன்னாரில் இலுப்பைக்கடவை என்னும் இடத்தில் இருந்து படகில் ராமேஸ்வரம் வந்தோம். சற்றே பெரிய மீன்பிடி வள்ளத்தில் சுமார் 40 பேர் பயணித்தோம். வெறும் 18 மைல் இடை வெளியில் இந்தியாவும் இலங்கையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், அகதிகளுக்கு அந்தத் தூரம் கொடும் அமைதி சூழ்ந்த பெருந்தூரம். வாழ்தலுக்கான … [Read more...]