சமகால இலக்கியக் குறிப்புகள்

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல என்ற ஜெயமோகனது கூற்று எனக்கு அதிர்ச்சியை அளிக்கவில்லை. ஒருவேளை, அவர் அது இனப்படுகொலையே என்றிருப்பாரானால் மாத்திரமே, “இல்லையே.. இவர் இதைச் சொல்வது தப்பாச்சே.. ஏதேனும் hidden agenda இருக்குமோ ” என்று யோசித்திருப்பேன். மற்றும்படி இலங்கையில் இனப்படுகொலை நடக்கவேயில்லை என்று கோத்தபாய ராஜபக்ச சொன்னபோது எப்படிக் கடந்துபோனேனோ அப்படித்தான் கடந்துபோனேன். தவிரவும், ஈழத்தமிழர்களுக்கான ஒரு தீர்வு தமிழகத்தில் இருந்து ஒரு போதும் வராது என்று தீர்க்கமாக நம்புகிறவனாகவும் நானிருப்பதால், ஜெயமோகனது இக்கூற்றுக்கு ஐந்து சதப் பெறுமதியைக் கூட அளிக்க முடியவில்லை. நாளைக்கே இதைச் சீமான் சொன்னாலும் இதே நிலையிலேயே தொடர்வேன். ஏனெனில் இதுவும் அதுவும் ஈழத்தமிழர்களுடைய அரசியல் பயணத்தில் ஒரு சிறு சலசலப்பைக் கூட ஏற்படுத்தப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். நிற்க, ஜெயமோகனது இந்த இனப்படுகொலை தொடர்பான கூற்று, மற்றும் இந்திய இராணுவத்தினர் ஈழத்தில் மனிதாபிமானத்தோடுதான் நடந்துகொண்டார்கள், மற்றதெல்லாம் புலிகளின் பிரச்சார நுட்பம் என ஒரு ஜெனரல் சொன்னார் என்ற முன்னைய கருத்து, ஆயுத விடுதலைப் போருக்கு எதிரான அவரது கருத்து நிலை என அனைத்துமே மையம் கொண்ட மனநிலையானது ஓர் இந்தியப் பெரும் தேசிய மனநிலையாகும். இந்தியா என்கின்ற ஒற்றை அரசின் (state) ஒருமைப்பாட்டையும், உறுதித்தன்மையையும் கட்டுக்குலையாமல் பேணுவதற்கு, இந்திய ஒருமைப்பாட்டை நேசிக்கும் மனங்களைத் தொடர்ந்தும் அதே மாயையில் வைத்திருப்பதற்கு, ஈழம் பற்றி, காஷ்மீர் பற்றியெல்லாம் இப்படியான கருத்துக்களை உருவாக்குவதும், பரப்புவதும் அவர்களுக்கு நிபந்தனையாகிறது. அதைத்தான் அவர்கள் காலங்காலமாகச் செய்து வருகிறார்கள். அது ஜெயமோகன் மட்டுமல்ல, இலக்கியம், எழுத்தென்ற இந்தப் பரப்பிலேயே வேறும் பலரும் இருக்கிறார்கள் என்பது எந்தளவிற்கு உண்மையோ, அவர்களோடு நம்மிற் பலர் வலு கூலாகக் குலாவுகிறார்கள் என்பதும் உண்மை. 0 0 0 தீபன் திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் ஒரு கேள்விக்கு, இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே என ஷோபா சக்தி அளித்த பதில், சுவிற்சர்லாந்துப் பத்திரிகையொன்றில் கவனப்படுத்தப்பட்டு வெளியாகியிருந்தது. அதைப்பற்றி அக்காலத்தில் இளவேனிலோடு உரையாடியிருக்கிறேன். ஒரு சர்வதேச மேடையை அழுத்தமான ஒரு பதிலுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் என்று … [Read more...]

குழை வண்டிலில் வந்தவர் யார்..?

“தம்பி ஒரு கொமிக் சொல்லுறன். எலக்ஷென் நடந்ததெல்லே, முல்லைத்தீவுப் பக்கமா வெத்திலையில வோட்டுக்கேட்ட அரசாங்கக்கட்சி ஆளொருவர், எலக்ஷனுக்கு ரண்டு மூண்டு நாளுக்கு முதல், வீட்டு வசதிகள் சரியாக் கிடைக்காத கொஞ்ச சனத்துக்கு கூரைத் தகரங்களை அன்பளிப்பாக் கொடுத்து, வீட்டுக்குப் போடுங்கோ என்று சொன்னவராம். சனமும், நீங்கள் தெய்வமய்யா என்று கும்பிட்டு வாங்கிக்கொண்டு போச்சினமாம். ஆனால் எலக்ஷனில ஆள் தோத்திட்டார். கூரைத்தகடு வாங்கின ஆக்களின்ரை வோட்டு விழுந்ததே சந்தேகமாம். ஆள் கொஞ்சம் கோபத்தோட போய், நீங்களெல்லாம் என்ன மனிசர். பல்லை இளிச்சு வாங்கிக்கொண்டுபோயிற்று கழுத்தை அறுத்திட்டியளே என்று திட்டினாராம். சனம் ஒண்டும் விளங்காமல், ஐயா நீங்கதானே வீட்டுக்குப் போடச்சொன்னியள் என்று இழுத்திச்சினமாம்...” இந்தக்கதையை எனக்குச் சொன்னவர் எனது பெரியப்பா. இன்னும் இரண்டு வருடத்தில் எழுபது வயதாகிறது. தச்சுவேலை செய்கிறார். கோப்பிச வேலைகளில் (கூரை வேலைகள்) ஸ்பெஷலிஸ்ற். மேற் சொன்ன கதை நிச்சயமாக ஒரு புனைவுதான். நிச்சயமாக பெரியப்பாவே புனைந்திருப்பார். எங்கள் வீட்டில் நாங்கள் இரண்டு பேர்தான் புனைவாளர்கள். அந்நேரத்தில் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் கொண்டிருந்தவரும் அவரே. (சென்ற வருடம் அ.இரவி அண்ணா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் அப்பாவிடம் – சயந்தன் எழுதுறதுகளை வாசித்திருக்கிறியளா என்று கேட்டார். அப்பா தலையைச் சொறிந்து கொண்டே, என்னமோ எழுதுறான்தான். சந்தோசம்தான். ஆனால் வாசிக்கிறதில்லை என்றார். திடீரென்று இரவியண்ணை நீங்களும் ஒரு மனிசரோ என்று பொரிந்துதள்ளத்தொடங்க அப்பா திகைத்துப் போய்விட்டார். அப்படி அப்பா டோஸ் வாங்கிக்கொண்டிருந்தபோது பக்கத்தில் நின்ற வெர்ஜினியாவை காணவேயில்லை. அடுத்தது தனக்குத்தான் என்றோ என்னவோ ஓடி ஓளிந்துவிட்டார். மறுநாள் காலை இரவியண்ணை போனபிறகு, அப்பா சொன்னார். “இப்பிடி ஆக்களைக்கூட்டிக்கொண்டு வந்து பேச்சு வாங்கித்தராதை... ”) பெரியப்பாவைப்போல நிறையக்கதைகளைப் புனையும், மனிதர்களை கிராமங்கள் தமக்குள் வைத்திருக்கின்றன. அவற்றை புளுகுகள் என்று கடந்துபோய்விட முடியுமென்று தோன்றவில்லை. எதிர்காலத்தினுடைய நாட்டார் கிராமியக் கதைகள் இவைகளாகத்தான் இருக்குமோ என யோசிக்கின்றேன். எப்படியாவது இவை தமக்குரிய இடத்தை எடுத்துக்கொள்ளும். ஊரில் இன்னொரு சுவாரசியமான மனிதர் இருக்கிறார். சீனியர் என்று பெயர். ஒருமுறை … [Read more...]

திருத்தியெழுதப்பட்ட கதைகள்

பிரதீபா (சக்திவேல்) என்றொரு நண்பி கொழும்பில் இருந்தார். அப்பொழுது நாங்கள் உயிர்ப்பு என்றொரு இதழை வெளியிட்டுப் பழகினோம். அதற்கொரு ஆக்கம் கேட்டபோதுதான் சோமிதரன் தன் வாழ்நாள் எழுத்துக்களை ஒரு பைலில் இட்டு “என் கண்ணையே உன்கிட்ட ஒப்படைக்கிறேன்” என்ற ரேஞ்சில் தந்திருந்தார். பிறகது தொலைந்து போய்விட்டது என்று மூன்று வார்த்தைகளில் நான் கடந்து போவது அவருக்கு கடுப்பை ஏற்படுத்தலாம். விதி வலியது கொழும்பு பாடசாலையில் வெளியான ஆண்டு மலரிலேயே கண்கெட்ட பிறகும் சூரியநமஸ்காரம் செய்யலாம் என்று அரசியல் கட்டுரைகள் எழுதத்தொடங்கியிருந்தேன். அதற்குச் சற்று நாட்களின் முன்னர்தான் சந்திரிகா மீது குண்டுத்தாக்குதல் நடந்து அவர் கண் இழந்திருந்தார். இப்பொழுது சமாதானம் மெலிதாக அரும்பியிருந்தது. ரணில் பதவியேற்றிருந்தார். ஆகவே ஓர் அரசியல் “ஆய்” வாளனான எனக்கும் நிறைய வேலை இருந்தது. சமாதானம் நிலைக்குமா, சர்வதேசம் ஏமாற்றுமா, தலைவர் பிரபாகரன் ஏமாறுவாரா என்றெல்லாம் மூளையைப் போட்டுக் கசக்கி ஒரு வாய்வுக் கட்டுரை எழுதியிருந்தேன். இதழின் டம்மியை புரூப் பார்ப்பதற்காக பிரதீபாவிடம் கொடுத்திருந்தேன். அவர் ஓகே செய்தபிறகு இதழ் அச்சுக்குப் போனது. எனது கட்டுரையில் ரணில் அரசமைத்ததன் பின்னணியில் என்றவாறாக ஒரு வசனம் இடம் பெற்றிருந்தது. அது டம்மி இதழில் - ரணில் அர சமைத்ததன் பின்னணியில் என்றவாறாக அர முதலாவது வரியில் முடிந்தும் அடுத்தவரியில் சமைத்ததன் என்றும் ஆரம்பித்தது. பிரதீபாவிற்கு இங்கே தான் டவுட் ஆரம்பமாகியது. “சமைத்ததன்” பின்னணியில் என்பது சரியாக டைப் செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் கருதினார். ஆனால் “அர” என்று டைப் செய்யப்பட்டிருப்பதில் என்னவோ தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும் அவர் நம்பினார். சமைத்ததன் பின்னணியையும் அர வையும் போட்டுக்குழப்பி கடைசியில் கண்கள் பிரகாசிக்க அவர் ஒரு முடிவினை எடுத்தபோது “அர” என்பது என்னவாயிருந்திருக்க வேண்டும் என்பதை அவர் கண்டுபிடித்தார். அச்சாகிய இதழில் எனது கட்டுரையில் இடையில் இப்படியொரு வசனம் சம்பந்தமே இல்லாமல் வந்தது. ரணில் அரிசி சமைத்ததன் பின்னணியில், புலிகள் சமாதானத்தின் மீதான தமது ஆர்வத்தை வெளிக்காட்டியுள்ளார்கள். நல்லவேளையாக, டம்மி இதழில் சமாதானத்தின், சமா எங்காவது விடுபட்டிருந்தால் பிரதீபா திருத்தியபிறகு கட்டுரை வரிகள் இப்படியிருந்திருக்கலாம். ரணில் … [Read more...]

தமன்னாவும் ஒரு ஆபிரிக்க இளைஞனும்

சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் வேலை விசா என்று செற்றில் ஆகிவிட்டவர்கள் கூட பிள்ளைகளின் ‘படிப்பிற்காக‘ என்று அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அண்மையில் கனடா சென்று வந்த நண்பர் ஒருவரிடம் சனமெல்லாம் கனடா கனடா என்று ஓடுகிறார்களே அப்படி என்னதான் அங்கே இருக்கென்று கேட்டேன். அவர் பதிலுக்கு அங்கு இடியப்பம் ஐந்து சதங்களுக்கு வாங்கலாம் என்றார். போலந்து சிறையில் அடைக்கப்பட்ட நண்பர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவினை இலக்கு வைத்து இலங்கையிலிருந்து புறப்பட்டபோது சுவிஸில் அவருக்கு விமான நிலைய மாறும் வழியினை ஏற்பாடு செய்திருந்தார்கள். சூரிச் விமான நிலையத்தில் இறங்கி அடுத்த விமானத்திற்கு காத்திருந்தபோது என்னவோ இசகு பிசகாகி பொலீஸாரிடம் சிக்கிக் கொண்டுவிட கனடா போகும் கனவை அப்போதைக்கு வெளியே நிறைந்திருந்த பனியில் புதைத்து விட்டு விமான நிலையத்தில் வைத்து சுவிஸில் தஞ்சம் கோரினார் நண்பர். அப்பொழுது அவருக்கு பத்தில வியாழன் நடந்து கொண்டிருந்ததாம். அது எப்பொழுதும் பதிய விட்டுக் கிளப்பும் என்பதால் - இப்பொழுது சுவிஸ் முகாமில் பதிய விட்டு பின்னர் கனடாவிற்கு கிளப்பும் என்று அவர் நம்பியிருந்தார். நண்பரது கனவுகள் முழுவதும் கனடாவினால் நிறைந்திருந்தது. எல்லாவற்றையும் கனடாவோடு ஒப்பிட்டே அவர் பேசினார். இங்கே குளிர், மைனஸ் பத்துக்களில் போனால், இதென்ன குளிர் அங்கே மைனஸ் நாற்பது வரை போகுமாம் என்பார். குளிர்காலப் பயணங்களில் காரில் தண்ணீர் போத்தலைத் திறந்து குடித்தால், இப்படியெல்லாம் கனடாவில் குடித்துவிட முடியாது. தண்ணீர் ஐஸ் கட்டியாக இருக்கும் என்பார். ஒருநாள் - தெரியுமோ கனடாவில் வின்ரரில் வெளியில் ஒண்டுக்குப் போவதென்றால் முறித்து முறித்துத்தான் எறியவேண்டியிருக்கும் என்றார். கனடாக்காரர் யாராவதுதான் இதன் சாத்தியத்தை விளக்க வேண்டும். சுவிஸில் அவரது வழக்கு விசாரிக்கப்படாமலேயே காலம் இழுவுண்டது. சுவிஸில் விசா அற்றவர்கள் வேலையொன்றை நினைத்தும் பார்க்க … [Read more...]