குற்ற உணர்வின் பிரேத பரிசோதனை: யதார்த்தன்

நான் போரினை உணரத்தொடங்கும் போது போர் முடியத்தொடங்கி விட்டது. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கிபிர் சத்தமும் உறுமி கேட்ட செவிப்பறைகளை கொண்ட இறுதித்தலை முறையாக நாங்கள் நிற்கின்றோம். தோற்ற தரப்புகளும் வென்ற தரப்பும் எஞ்சிய தர்ம அதர்மங்களை பங்கு போட்டு இன்னும் முடியவில்லை. ஒட்டு மொத்த மானுட இருப்பையும் போர்கள் மாற்றியமைத்தன . ஈழம் அதற்கு விதி விலக்கல்ல. மக்கள் தோற்ற தரப்பிற்கும் வென்ற தரப்புக்கும் இடையே முப்பது வருடங்களாக மாற்றப்படாத அதே முகங்களுடன் இன்னும் பொலிவிழந்து கிடக்கின்றார்கள். கொள்ளைகள் கற்பிதங்கள் எல்லாம் மேற்புல் மேயும் நம்பிக்கையீனம் கொண்ட மிருகங்களாகவே நிற்கின்றன. போராடியவர்களில் ஒரு தரப்பு உடல் உளம் இரண்டும் விதம் விதமாய் சிதைக்கப்பட்டு போர் மிருகத்தின் பல்லிடுக்குகளில் இருந்து நழுவி வீழ்ந்து கிடக்கின்றார்கள். யாரும் கடந்த காலத்தை ஞாபப்படுத்த தயாராக இல்லை , மறக்கவும் தான். தோற்று போனவர்களின் பிணங்களை வாசனை திரவியமிட்டு அரசியல் நடக்கின்றது . பிணங்களின் உள்ளே தேசத்தின் குற்றங்களும் காழ்புகளும் , தர்மமும் , அதர்மமும் , அறமும் , கொண்டாட்டமும் சீழ் பூசிக்கிடக்கின்றன. விட்ட பிழைகளையும் தீர்வுகளையும் உயிருள்ள வெற்று மூளைகளுள் தேடுகின்றது மனிதம் . இன்னும் அவை கடந்த காலத்தின் இடைவெளியில் நசுங்கி கிடப்பதை ஒரு சிலரே உணர்கின்றனர். போருக்கு பிந்திய இலக்கியங்கள் இன்று மெல்ல மெல்ல நம் பிணங்களை பிரேத பரிசோதனை செய்ய ஆரம்பித்து விட்டன. ஆறிப்போன வடுக்களுக்கு பின்னால் இன்னும் கட்டிபோய் கிடக்கும் சீழ்குப்பிகளை மெல்லம்மெல்ல உடைத்து பேனாக்கள் எழுத தொடங்குகின்றன. இவ்விடத்தில் தான் சயந்தனின் ஆறாவடுவும் நிற்கின்றது. விடுதலை போராட்டத்தின் நேரடி சாட்சிகளில் பலதும் ஊமையாகி விட்டன. ஏனையவை தமக்கென தரப்புகளை தெரிவுசெய்து கொண்டிருக்கின்றன. போர்கால மற்றும் போருக்கு பிந்திய இலக்கியங்களில் பெரும்பாலானவை தரப்புகளை உன்னதமாக்கும் நுண்ணரசியலையே பேசுகின்றன, தனிமனித அறவுணர்வும் நேர்மையும் சோரம் போன இலக்கியங்களை சகட்டு மேனிக்கு கொண்டாடி தள்ளுகின்றது நம் சமூகம். ஆனால் அடிப்படை மனிதத்துவம் வாய்க்கப்பட்ட படைப்பாளிகள் மேற் சொன்ன மாசுக்களை நீக்கி விட்டு மேலெழுகின்றனர். சயந்தனை நான் இவ்வகையாறாக்குள் நிறுத்துகின்றேன் ஆறாவடு பற்றி கதைக்க முதல் அண்மையில் வாசித்த இரண்டு போருக்கு பின்னரான … [Read more...]

அருமையான வாசிப்பனுபவம் : ´ஆறாவடு´

நேற்று வாசித்து முடித்த அருமையானதொரு புத்தகம் இது. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம் பெயர் தமிழரான சயந்தன் எழுதி இருக்கிறார். நீர்க்கொழும்பில் இருந்து இத்தாலி நாட்டிற்குப் படகுப் பயணம் மேற்கொள்ளும் ஒரு போராளியின் முந்நிகழ்வு (பிளாஷ் பேக்) நினைவாக கதை விரிகிறது. அவர் இயக்கத்தில் சேர்வது ஒரு சுவாரசியமான கதை. தான் வாங்கிய சோலாபுரி செருப்பை ஒருவன் திருடிவிடுகிறான். அவன் இலங்கையில் மையமிட்டுள்ள இந்திய ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவன். அவனுடன் ஏற்பட்ட தகராறு இவரை பெரும் சோதனைக்கு ஆளாக்கிவிடுகிறது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அவரை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற உந்துகிறது. மேம்போக்காகப் பார்த்தால் ஒரு செருப்புக்கான சண்டை காரணம் போலத் தோன்றும், ஆனால் நாம் எதிர்பாராத சில சிறிய நிகழ்வுகள் கூட நம் வாழ்கைப் பாதையின் போக்கை மாற்றிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகப் பட்டது. இந்திய அமைதிப் படைகளின் அட்டூழியம் குறித்து அரசியல் மேடைகளில் கேட்டிருக்கிறேன், புலம் பெயர் தமிழ் நண்பர்களிடம் அவர்களது அனுபவங்கள் வாயிலாக சில விடையங்களை அறிந்து கொண்டிருக்கிறேன், சில புத்தகங்களில் தரவுகளாக வாசித்திருக்கிறேன். ஆனால் இப்புத்தகத்தில் வரும் நிகழ்வுகளை உள்வாங்கி கற்பனைகளில் காட்சிப் படுத்திப் பார்க்கும் பொழுது, அட்டூழியம் என்கிற சொல்லாடலின் மெய்யாழம் புரிந்தது. தொடர் சம்பவங்களின் வரலாற்றுத் தரவுகளை வாசித்துத் தெரிந்து கொள்வது என்பது வேறு.அது வெறும் தகவல்தான். ஆனால் அன்றாட வாழ்வில் ஏற்படும் சம்பவங்களின் ஆழமான விவரணை உணர்வுகளை உலுக்கிச் செல்லும் வல்லமை உடையது. கல்லூரி பயிலும் வரை போர் என்றால், சின்ன வயதில் டிடி தொலைகாட்சியில் பார்த்த மகாபாரதக் காட்சி கண்முன் விரியும். இல்லையேல் பீரங்கிகள், துப்பாகிகள் இருமருங்கிலும் முழங்கும் காட்சிகள் தெரியும். ஆனால் போர் மூலமாக சாதாரண மக்களின் சமூக வாழ்வு எவ்வாறு பாதிக்கப் படும் என்பதை சிண்ட்லர் லிஸ்ட், பியானிஸ்ட் போன்ற படங்களைப் பார்த்த பொழுதுதான் முதன் முதலாகப் புரிந்து கொள்ள முடிந்தது. பாய்ந்து வரும் குண்டுகள் கூட ஒரு நொடியில் உயிரை மாய்த்து விடும். ஆனால் போர் நடக்கும்பொழுதும், போர் முடிந்த பிறகும் அதனால் பாதிப்புக்குள்ளான சமூகம் தான் உண்மையான தாக்கத்தை உள்வாங்கி அதிக காலம் அல்லல்படுவது. பள்ளியில் வரலாற்றுப் புத்தகத்தில் உலகப் போர் … [Read more...]

ஆறாவடு – யோ.கர்ணன்

அடிப்படையில் அ(இ)ந்த நாவல் விடுதலைப்புலியுறுப்பினராக இல்லாத ஒருவரினால், விடுதலைப்புலிகள் பற்றி அறிந்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது. பெரும்பாலான ஈழத்து நாவல்களிற்கேயுரித்தான விபரிப்புக் குறைபாடு, பாத்திர உருவாக்க பலவீனங்களுடன் நாவலிருந்தாலும், அது வாசிப்புச் சுவாரஸ்யமுள்ள நாவல்தான். அதிலெல்லாம் சந்தேகமில்லை. ஆனால், பிரச்சனையென்னவென்றால், நாவலின் ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய உயிர்ப்பு அதிலிருக்கவில்லை. என்னைக் கேட்டால் சயந்தன் வேறு களங்களை நாவலாக்கியிருக்கலாம் என்றுதான் சொல்வேன். ஏனெனில் அந்த விடயத்தில் அவரால் வெற்றியடைய முடியவில்லை. (புலியெதிர்ப்பு மிகச்சிறந்த சந்தை வாய்ப்பைக் கொண்டிருப்பதாக யமுனா குறிப்பிட்டிருந்தார். உண்மையில் பங்குச்சந்தையில் எதனது பங்கு உச்சவிலையிலிருக்கிறதென்பதற்கு இது உதாரணமாகயிருக்கும்) ஆறாவடு விடுதலைப்புலிகள் பற்றிய வாழ்க்கையை அசலாகப் பதிவுசெய்யவில்லை. சற்றே கறாராக இருந்தாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. விடுதலைப்புலிகள் பற்றிய விபரிப்புக்களில் கிட்டத்தட்ட தென்னிந்தியத் திரைப்படங்களைத்தானது நினைவுபடுத்தியது. அதில் சித்தரிக்கப்பட்டதல்ல விடுதலைப்புலிகளின் வாழ்க்கை. தவிரவும், அதில் குறிப்பிடப்படதெதுவுமே விடுதலைப்புலிகள் மீதான ஆழமான விமர்சனங்கள் கிடையாது. அவையெல்லாம் புலிகளின் சாதாரண முகங்கள். அந்த முகங்கள் மீது சனங்களிற்கு ஆழமான விமர்சனங்களெதுவுமேயிருந்திருக்கவில்லை. செல்லக் கோபங்களுடன் சனங்கள் அனுசரித்துச் செல்லும் விடயங்களவை. விடுதலைப்புலிகள் குறித்து வெளிநாட்டிலிருந்து ஆய்வுசெய்பவர்களே சுமத்தவல்லதான மென்போக்கான விமர்சனங்கள். அதாவது விடுதலைப்புலிகள் மீதான பிம்பங்களை உடையவிடாத மனமொன்றின் பதிவுகள். http://yokarnan.com/?p=363#.UGLqA_PTwe8.facebook … [Read more...]

வதைகளின் கதைப்பாடல் – ம.மணிமாறன்

துடிப்படங்கிய உடல்களைப் புரட்டித் தேடுகிறது கரும்பச்சை சூடிய சிங்களச்சிப்பாயின்  துவக்கு. புகை படர்ந்த பெருவெளிக்குள் துழாவித்திரிகிற அவனின் கண்களுக்குள் உறைந்திருக்கிற வன்மத்திற்கு ஓராயிரம் ஆண்டின் வரலாற்று ரேகை படிந்திருக்கிறது. தன்னுள் திளைக்கும் கொடுரத்தினை விதைத்தது புத்தபிக்கு மஹானாமாவின் சிங்கள காவியமான மகாவம்சம் என்பதை அந்த வீரன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை. வரலாற்றுப் பிரக்ஞையற்ற அவனது மூளை போர்க்கருவிகளால் வடிவமைக்கப்பட்டது. பேரினவாத காற்றைக் குடித்து பெருத்த சிங்களச் சிப்பாய் தான் தேடிய உயிர் அடங்கிய உடலைக்கண்டடைந்த மணித்துளியை வரலாறு கனத்த மௌனத்துடன்தான் பதிவு செய்கிறது. சிதிலமடையாத எண் 001 குறிப்பிடப்பட்ட அடையாள அட்டைக்கருகில் திறந்து கிடக்கும் சிங்கப்பூர் லோஷன் பாட்டிலில் இருந்து கிளம்பிய திராட்சை வாசனையால் நிறைந்திருந்தது அக்குறு நிலம். தன் உடலைப்புரட்டுகிற சிப்பாய் பிறப்பதற்கு முன்னான ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்திலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் துவங்கியிருந்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன். முப்பதாண்டுகள் வீரச்சமருக்கு ஒப்புக்கொடுத்திருந்த உடலது. பேரினவாதம் காத்திருந்த நிமிடத்திற்குப் பிறகான நாட்கள் யாவும் தலைகீழாக மாறத்தொடங்கின. முள்ளிவாய்க்கால் எனும் பெயர்ச்சொல் வலி, வேதனை, துயரம்..துரோகம் என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. போருக்கான சாத்தியங்களை முற்றாக துடைத்தழிக்கத் துவங்கியிருக்கிறது பௌத்த பேரினவாதி அரசு. போர்க்கருவிகளுடன் மானுடவியல் ஆய்வாளாகளும் களம் புகுந்துள்ளனர். ஆதாரங்களை உருமாற்றி வேறு ஒன்றாக்கிடும் வித்தையைக் குடித்திருந்த ஆய்வாளர்களின் நிலமாகிவிட்டது தமிழ் நிலம். கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து வரலாற்று ஆதாரம் என நம்பச் செய்திருக்கின்றனர். பிரபாகரனின் மரணத்திற்குப் பிறகான பதினாறாம் நாளில் இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பாக போதிமரக்கன்றை இலங்கைத் தீவிற்கு கொண்டுவந்த பேரரசர் அசோகரின் மகள் சுங்கமித்திரையின் சிலையை மகிந்தாவின் மனைவி யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பதும், போதிமரக்கன்றொன்றை ராஜபக்ஷே சாஞ்சி புத்த மடாலயத்திற்கு கொண்டு வருவதும் தனித்து திட்டமிட்டு நிறைவேற்றப்படுகிற அரசியல் குயுக்திகள் அன்றி வேறென்ன.. யாவற்றையும் எப்படி எதிர்கொள்வது என்ற பதட்டத்தில் தமிழர்கள் முள்வேலிக்கம்பிகளுக்குள் வீழ்ந்திருக்க எழுதிக்கடப்பதைத் தவிர என்செய்வது … [Read more...]