ஒபரேசன் பூமாலை – அந்த நாள் நினைவுகள்

அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு.1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bharat-rakshak என்னும் இந்திய இராணுவத்தின் இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் தமிழ் வடிவம் இது.இக் கட்டுரையின் இடையில் வரும் இப்பந்தியினை வாசித்து விட்டு முழுவதையும் படியுங்கள்.கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது. இது இலங்கையில் வாழும் தமிழ் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்த கவலையை இந்தியாவில் ஏற்படுத்தியது. உண்மையில் அது இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக இருந்தாலும் கூட யாழ்ப்பாணத்தில் நடக்கும் சம்பவங்கள் இலங்கைத் தமிழரை தமது சகோதரர்களாகக் கருதும் தமிழக மக்களிடையே கொந்தளிப்பையும் உணர்வுப் பெருக்கையும் அதிகரித்து விட்டிருந்தது. சட்டங்களும் நீதிகளும் எதுவாக இருப்பினும் அந்த நேரத்தில் வெறுமனமே பார்த்துக் கொண்டிருப்பதில்லை என்ற முடிவை இந்திய அரசு எடுத்தது.நாள்: யூன் 3 1987இடம்: இந்திய விமானப் படையின் மிராஜ் ரக விமானங்கள் தரித்து நின்ற, மிக முக்கிய தளங்களில் ஒன்றான க்வாலியருக்கு (Gwalior) அருகில் மகாராஜ்பூர் விமானப் படை நிலையம்.நேரம்: காலை 5.30,No 7 படைத்தொகுதியின் (The Battle Axes) கட்டளையிடும் அதிகாரி அஜித் பவ்னானி (Wing Commander Ajit Bhavnani) அந்த மிக முக்கிய செய்தியை பெற்றுக் கொண்ட போது வெளிச்சம் இன்னும் முற்றாகப் பரவியிருக்கவில்லை. செய்தியில் தேவையான நபர்களுடன் சில விமானங்களை நாட்டின் தெற்கே, பெங்களூரின் ஹால் (Hal) விமான நிலையத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லும் படி அறிவுறுத்தப் பட்டிருந்தது.மதியத்திற்கு சற்று முன்னர் 11.30க்கு பவ்னானி தன் மிராஜ் 2000 இலும், கூடவே 5 சிறப்பு … [Read more...]

தமிழகத்தில் ஈழ அகதிகள்

S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுகொள்ளப்படாமல் இருப்பது மனதுக்குப் பாரமாய் இருந்தது. ஈழத்திற்காக ஒரு கவிதை புனைந்தாலோ, அல்லது திரைப்படத்தில் நடித்தாலோ, தூக்கித் தோளில் வைத்துக் கொண்டாடும் நாம் அந்த மனிதரை எதற்காக கைவிட்டோமோ தெரியவில்லை. ஒரு வேளை அதற்கான காரணமாய் அவரே கூறுவது போல I worked with PLOTE என்ற ஒரு வசனம் இருந்திருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்தும் அவர் கூறுவதை அவதானிக்க வேண்டும். When I heard they were killing their own people, I left PLOTE. 1953 இல் அவுஸ்ரேலிய மெல்பேர்ண் பல்கலைக் கழகத்தில் (Melbourne University) தனது B.Arch பட்டப்படிப்பினை முடித்த டேவிட் ஐயா தொடர்ந்து லண்டனிலும் நைஜீரியாவிலும் நகரத் திட்டமிடல் (Town Planning) கற்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார். 3 வருடங்கள், கென்யா நாட்டின் மொம்பாசா (Mombasa) நகரத்திட்டமிடலில் பிரதான பங்கு வகித்திருக்கின்றார். (Chief Architect) .1983 இல், கொழும்பில் போராளிகள் குறித்த தகவல் கொடுக்கத் தவறியமைக்காக சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு பனாங்கொட இராணுவ முகாமிலும், பின்னர் வெலிக்கடைச் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். 25 மற்றும் 27 யூலைகளில் நிகழ்ந்த வெலிக்கடைப் படுகொலைகள் சம்பவத்தின் வாழும் சாட்சிகளில் இவரும் ஒருவர். பின்னர் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டு 26.09.1983 அன்று நடந்த சிறையுடைப்பில் தப்பித்து, 27 நாட்கள் வன்னிக் காடுகளில் தலைமறைவாகி 20.10.1983 அன்று தமிழ்நாட்டினுள் தஞ்சம் புகுந்தார். தனது நூலெங்கும் தமிழீழம் என்னும் நாட்டிற்காக தான் திட்டமிட்டிருந்த கனவுகளை டேவிட் ஐயா சொல்லிச் செல்கின்றார். தனது ஆரம்ப காலங்கள், இலங்கையின் … [Read more...]

ஈழம் குறித்து ஜெயலலிதா..

சற்று முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் செல்வி ஜெயலலிதாவின் செவ்வியில் ரவி பெர்ணாட் வைகோ திருமா ஆகியோரின் தமிழ் உணர்வுகள் குறித்து குறிப்பிட்டு ஈழப்பிரச்சனையில் ஜெயலலிதாவின் நிலை குறித்துக் கேட்டார். அதற்கான ஜெயாவின் முழுமையான பதில் கீழே..ஈழம் என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். ஈழம் என்பது ஒரு concept, ஒரு லட்சியம், ஒரு கனவு, ஒரு குறிக்கோள். ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு கனவு காண்கிறார்கள். அவர்களைத்தான் நீங்கள் ஈழத்தமிழர்கள் என்று குறிப்பிடுகிறீர்கள். அதையே நான் இலங்கைத் தமிழர்கள் என்று சொல்கின்றேன். அவ்வளவுதான் வேறுபாடு. ஆனால் நான் இலங்கைத்தமிழர்கள் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஈழத்தை அடைய வேண்டும் என்று ஒரு தொகுதியில் இருக்கின்றவர்களைத்தான் இன்று ஈழத்தமிழர்கள் என்று சொல்கின்றோம். ஆனால் வேறு பகுதிகளிலும் தோட்டத்தொழிலாளர்களாக பணி புரியும் மலையக பகுதிகளில் வாழ்கின்ற தமிழர்களும் இருக்கின்றார்கள். அவர்களையும் இணைத்து தான் நான் சொல்கின்றேன். ஆகவே நான் ஒட்டு மொத்தமாக இலங்கைத்தமிழர்கள் என்று சொல்கின்றேன். என்னுடைய கொள்கையில் ஆரம்பத்திலிருந்து இன்று வரை எந்த மாறுபாடும் இல்லை. இலங்கைத்தமிழர்கள் மதிப்போடும் மரியாதையோடும் பாதுகாப்போடும் அங்கே வாழ்க்கையை நடாத்த வேண்டும். அதற்கான ஒரு உகந்த சூழ்நிலையை இலங்கை அரசு ஏற்படுத்த வேண்டும். இலங்கைத்தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதில் இரண்டாம் கருத்துக்கே இடமில்லை. இது தான் என்னுடைய கொள்கை. … [Read more...]

தமிழீழம்-தமிழகம்-இயக்குனர் சீமான்

அண்மையில் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இயக்குனர்களான சீமான், தங்கர் பச்சான், சேரன் ஆகியோரின் கலந்துரையாடல் நிகழ்வொன்றில் இயக்குனர் சீமான் தெரிவித்த கருத்துக்கள் இவை. தமிழக அரச இயந்திரத்தின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாடுகளை சாடும் இவர் அண்மையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடைபெற்ற கொலைகள் தொடர்பாகவும் தன் எண்ணத்தை பதிந்திருக்கின்றார்.நன்றி TTN, வன்னியன் … [Read more...]