வைதேகி

ஆதிரை என்கின்ற இத்திமரத்துக்காரி ஈழத்தில் இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் என்ற நீண்ட பயணத்தின் பிறகு, அதைப்பற்றிய முனைப்பான பிரதிகள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும், போராட்டத்தில் எழுத்தாளர்களின் தன்னிலையையும் தன் உணர்வுகளையும் பிரதிபலிக்கத்தக்கவாறே, எழுத்துவடிவம் பெறுகின்றன. ஒரு வகையில் அவை அரசியல் பிரச்சாரத்திற்கு இலக்கிய வடிவம் கொடுக்க முயல்கின்றன. சயந்தனின் ஆதிரையோ, ஓர் ஒற்றைக் குரலாக, ஒற்றை உண்மையை மட்டும் வாசகருக்குக் காட்டாமல், ஆசிரியரின் குரலுக்கு அப்பால் சென்றும் பல குரல்களை கேட்க முடிகின்ற, பிரதியில் கூற எத்தனிக்கும் உண்மையைத் தாண்டியும் மேலதிக உண்மையைப் பெறுவதற்கான வாசக சாத்தியங்களைக் கொண்டிருக்கின்ற ஒரு இலக்கியப் பிரதியாக வெளியாகியிருக்கின்றது. தன் இருப்பிற்காகப் போராடிக்கொண்டிருக்கும் தனித்துவிடப்பட்ட இனமொன்றின், கடை நிலை மாந்தர்களைப் பற்றியும், போராட்டத்தின் மேன்மைகள், கீழ்மைகள் யாவற்றையும் எழுத்தாளரின் அக, புற உணர்வுகளோடு அருமையாக வெளிப்படுத்தி நிற்கிறது இந்நாவல். மக்களின் அனுபவங்களை நேர்த்தியான கதைகளாகத் தொகுப்பதன் மூலம் நாவலுக்கான ஒரு வடிவம் நெய்யப்பட்டிருப்பினும்கூட, வாசகர்களே நிரப்புவதற்கான இடைவெளிகளும் உண்டு. நிறைய இடங்களில் அது வாசகர்களிடம் ’வேலை வாங்குகிறது’ நாவலின் தொடக்கத்தில் தனி அத்தியாயமாக வரும் லெட்சுமணன் என்ற பாத்திரத்திற்கு முடிவில் என்ன நடந்திருக்குமென்பதை, வாசகரே தன்னுடைய கற்பனையாலும், ஊகத்தினாலும் நிரப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதி அத்தியாயத்தில் மட்டுமே வருகின்ற ஆதிரையின் சொல்லப்படாத வாழ்வை, ஒரு தனி நாவலாகவே வாசகர்களால் கற்பனையில் சிருஷ்டித்துக்கொள்ளமுடியும். இவ்வாறான சாத்தியங்கள் நாவலோடு தனித்துவமான ஒரு நெருக்கத்தை வாசகர்களோடு ஏற்படுத்துகின்றன. ஈழப்போர் என்ற தரிசனத்தை, அந்தப்போரின் நேரடி வீச்சுக்குள் வாழ்ந்த சாதாரண அடித்தட்டு மக்களின் பார்வையில் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்படுத்தி எல்லாக்கோணத்திலிருந்தும் அணுகும் சுதந்திரத்தை ஆதிரை உருவாக்கி அளிக்கின்றது. வெறும் அனுபவங்களை எழுதிவிடாது, படைப்பாற்றல் மூலம், அனுபவங்களுக்கிடையிலான சங்கிலித் தொடரை சாதுரியமாக உருவாக்கி, இலக்கியப் பிரதிக்கான அழகியலை சயந்தன் படைத்திருக்கின்றார். ஈழப்போர் பற்றிய தர்க்கங்களை, விடைகாணவியலாத வினாக்களை ஆதிரையின் … [Read more...]

சுரேஷ் பிரதீப்

பல நூற்றாண்டுகளாக போரினைக் கண்டிராத நிலத்தின் குழந்தைகள் கூட போர் குறித்த மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தங்களுடைய குழந்தைமையைக் கடந்து இளமையை அடைவதில்லை. கதைகளாக விளையாட்டுகளாக திரைப்படங்களாக போரினை கற்பனித்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். நம் கற்பனை செய்யும் போரில் வெற்றியும் தோல்வியும் இருந்திருக்கும். தொழில்நுட்பங்களும் சாகசங்களும் மரணங்களும் இருந்திருக்கும். ஆனால் அப்போர்  தொடங்கி  முடிவடைந்திருக்கும். போருக்கு முன்பான தயாரிப்புகளையோ போருக்குப் பிந்தைய நிலைகளையோ நாம் கற்பனை செய்திருக்கமாட்டோம். போர் களங்களில் மட்டும் நடப்பதாக எண்ணிக் கொண்டு இருந்திருப்போம். போரும் வாழ்வும் நாவலைப் படித்தபோது போர் குறித்த இத்தகைய மனச்சித்திரங்கள் கலையத் தொடங்கின. போர் வேறு வகையானதாக முன் ஊகங்களுக்கு வாய்ப்பற்றதாக தென்படத் தொடங்கியது. ஆனால் அந்த நாவலிலும் களம் என்ற ஒன்று உண்டு. அதில்தான் போர் நிகழ்கிறது. ஒரு வகையில் ஒரு கழுகினைப் போல உச்சி மரக்கிளையில் அமர்ந்து கொண்டும் அவ்வப்போது களத்தில் ஊடுருவிப் பறந்தும் அப்போரினை நாம் காண டால்ஸ்டாய் நம்மை அனுமதிக்கிறார். ஆனால் சயந்தனின் ஆதிரை நாவலில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெறுகிறது. ஆனால் சயந்தன் நம்மை எக்களத்துக்கும் கூட்டிச் செல்லவில்லை. பிரம்மாண்டமான படை நகர்வுகளும் வியூக வகுப்புகளும் உணர்ச்சிகரமான உரைகளும் கூர்மையான தத்துவ விவாதங்களும் இந்த நாவலில் இல்லை. ஆனால் ஒரு போரின் நடுவே வாழ நேரும் மனிதர்கள் சந்திக்க நேரும் திகிலையும் வெறுமையையும்  நாவல் கொடுப்பதே இதன் முதன்மையான வெற்றி எனச்சொல்லலாம். ஒரு எதார்த்தவாத செவ்வியல் படைப்பு தமிழில் எழுதப்பட்ட முன்னோடி எதார்த்தவாதப் படைப்புகளின்(ஆழிசூல் உலகு,மணற்கடிகை) அதே வகையான நேரடிக் கதைகூறல் முறையையும் நுணுக்கமான தகவல் விவரணைகளையும் கொண்ட புனைவாக ஆதிரை தன்னை வகுத்துக் கொள்கிறது. நாற்பதாண்டு காலம் மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்வினை வலுவாகச் சித்தரித்துச் செல்கிறது. அந்த சித்தரிப்பினூடாக ஒரு பெரும் போரினை சென்ற நூற்றாண்டில் தொடங்கி இந்த நூற்றாண்டு வரைத் தொடர்ந்த ஒரு பேரழிவினை ஆதிரை விரித்துக் காட்டியிருப்பதே இதனை முதன்மைப் புனைவாக மாற்றியிருக்கிறது. ஈழம் குறித்து தமிழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் கொந்தளிப்பான சித்திரம் உண்மையில் இலங்கையில் நடந்தவற்றை அறிந்து … [Read more...]

இனியன்

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாகக் கோத்தகிரியில் குழந்தைகள் நிகழ்விற்காகத் தங்கியிருந்த போது புத்தகம் ஒன்றை வாசிக்க எடுத்துத் துவங்கி, முதல் பத்தியினைப் படித்துவிட்டு இத்தனை வலிகள் மிகுந்த எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்தால் நிச்சயம் நிகழ்விழும் பயணத்திலும் ஈடுபாடுச் செலுத்திட முடியாது என்பதால் மூடி வைத்து விட்டுத் தொடவேயில்லை. பிறகு மீண்டும் சென்னை வந்த பிறகு எவ்வளவு விரைவாக முடித்திட வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடித்திட வேண்டும் என்கிற முனைப்பில் துவங்கினால் சில பக்கங்களைக் கடந்திட முடியாமல் அப்படியே போட்டுவிட்டு அழுதும் அமைதியாய் இருந்தும் உணர்வுகளைக் கடந்து மெதுமெதுவாய் இருதினங்களுக்கு முந்தைய நள்ளிரவில் முழுவதுமாக முடித்தேன் அந்த 664 பக்க நாவலை. ஏற்கனவே பலமுறை பலயிடங்களில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டிய தேவை இருக்கிறது. “2௦ம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போர்கள் சார்ந்த இலக்கியங்கள் உலகளவில் பெரும் தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தின. அவற்றையெல்லாம் விட மிஞ்சி நிற்கப் போவது 21ம் நூற்றாண்டில் படைக்கப்பட்டுக் கொடிருக்கக் கூடிய ஈழத்து இலக்கியங்கள் தான். அதுவும் முதல் 3௦ வருடங்கள் மட்டுமே. அதன் பிறகு வரிசையில் ஈராக், சிரியா, ரோஹிங்கியா என வரிசையில் காத்துக் கிடக்கின்றன.” அந்த வகையில் கவனிக்கப்பட வேண்டிய ஈழத்து இலக்கிய வரிசையில் முக்கிய இடம் பிடித்திருப்பது சயந்தனின் ஆதிரை. 1977 நிகழ்த்தப்பட்ட இனகலவரத்தில் பாதிப்புகுள்ளானக் குடும்பம் ஒன்று ஈழத்தில் புலம் பெயர்வதில் துவங்குகிற கதைகளம். 2009 இன அழிப்பைக் கடந்து 2015 மக்களின் பன்பாட்டு அடையாள அழிப்பு என்கிற பெருந்துயர்மிகுப் பயணத்தில் வந்து முடிகிறது. முப்பது ஆண்டுகால இப்பெரும் பயணத்தில் ஒரு நிலபரப்பின் பன்முகத்தன்மை, இயற்கை வளம், காடு, கடல், மக்களின் இனவேற்றுமை, சாதிய ஒடுக்குதல்கள், வர்க்க முரண்கள், இனக்கலவரங்கள், போராட்டம், போராட்ட வாழ்வியலின் உள்முரண்கள், சிதைவுகள், நம்பிக்கைகள் துரோகங்கள், வலிகள், விமர்சனங்கள், வதைமுகாம்கள், அடையாள அழிப்பு எனப் பலவற்றைப் பதிவு செய்திருக்கிறது புத்தகம். சமகால ஈழத்துப் படைப்புகள் வாசிக்கிற போது புலிகளுக்கான ஆதரவு நிலைப்பாடு அல்லது எதிர் நிலைப்பாடு என்கிற அரசியல் புள்ளிகளில் இருந்து மட்டுமே எழுதப் … [Read more...]

ஜிஃப்ரி ஹாஸன்

ஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின் போராட்டமும் தமிழர் வாழ்வும் பற்றி பல நாவல்கள் வெளிவந்து விட்டன. ஷோபா சக்தியின் BOX கதைப்புத்தகம், குணா கவியழகனின் விடமேறிய கனவு, சாத்திரியின் ஆயுத எழுத்து, சயந்தனின் ஆதிரை போன்றன இந்தவகையில் குறிப்பிடத்தக்க நாவல்கள். ஆதிரை வடபுல சாமான்ய தமிழ்ச்சனங்களினது வாழ்வு ஈழப்போரால் எப்படிச் சிதைந்தது என்பதை மிக அழுத்தமாக தனிமனிதர்கள், குடும்பங்கள், கிராமங்கள் என ஆழமாக ஊடுறுவி சரளமான புனைவு மொழியில் எடுத்துக் கூறுகிறது.  மலையக மக்களினதும் ஒரு குறிப்பிட்ட காலகட்ட அவலம் சிதைந்த சித்திரமாக நாவலுக்குள் ஊடுறுவிச் செல்கிறது. வடபுல எழுத்தாளர்களின் ஈழப் போராட்ட நாவல்களில் போராட்டத் தீயின் கொடு நாக்கு எப்படி அப்பாவி மலையகச் சனங்களையும் தீண்டியது என்பதை மனச்சாட்சியோடு இந்நாவல்தான் பதிவு செய்கிறது. 1983 இனப்படுகொலையில் மலையகத் தமிழ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அது பற்றி முழுமையாகப் பதிவுசெய்யும் ஒரு மலையக நாவலே தெளிவத்தை ஜோசப்பின் நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983. அதைத் தவிர்த்து இலங்கை இனப் பிரச்சினையின் மலையகப் பரிமாணம் பற்றி பேசும் மலையகத்துக்கு வெளியிலிருந்து வந்த நாவலென்றால் அது ஆதிரைதான். ஈழப் போராட்ட கால வரலாற்று நாவல் என்ற வகையில் சயந்தன் பாதிக்கப்பட்ட எல்லாத் தரப்பாருக்கும் நாவலில் முகமும், குரலும் வழங்கி இருக்கிறார். புலிகளின் போராட்டம் குறித்து சனங்களுக்குள்ளிருந்து எழுந்த மாற்றுக் குரல்களுக்கும் ஒரு இடம் வழங்குகிறார். சந்திரா போன்ற கதாபாத்திரங்கள் இத்தகைய மாற்றுக் கருத்துகளுக்கான குரலை உயர்த்துகின்றனர். பாரபட்சமற்றவனாக ஒரு வரலாற்றாசிரியன் இருக்க வேண்டும். வரலாற்றுப் புனைவை எழுதும் ஒரு படைப்பாளியும் பாரபட்சத்திலிருந்து விடுபட்டவனாகவே இருக்க வேண்டும். முஸ்லிம் ஊர்காவல் படை பற்றிய அணுக்கமான வரலாற்றுப் புரிதல் சயந்தனிடம் இல்லாமல் இருப்பதனால் அதை அவர் நாவலில் தவிர்த்திருக்கலாம். ஆயினும் அது ஒரு பெரிய விசயமாக நாவலில் இடம்பெறுவதுமில்லைதான். தமிழ் (இந்து) சமூக அமைப்பில் “அனைவரும் சமமே“ என்ற கோட்பாடு இல்லை. சாதிரீதியாக பிளவுண்ட சமூக அமைப்பையே தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது. அது மிகத் தீவிரமானது. சாதியை முன்னிறுத்தி தங்களை மிகத் தீவிரமாக கூறுபடுத்திக்கொண்டது. அது சமூகத்தில் தாழ்ந்த சாதி மட்டத்தில் இருப்பவர்களைத் தீண்டத் … [Read more...]