ஞாபகிக்கையில் 1

நடந்த காலங்களில் வலியையும் இரவுகளில் கண்ணீரையும் தந்த சில சம்பவங்கள் பின்னர் காலக் கிடங்கில் ஆழ அமிழ்ந்து போய் விடுகின்றன. மீண்டும் எப்போதாவது சமயங்களில் ஞாபகிக்கும் போது வலி தந்த அதே சம்பவங்களே சிரிப்பையும் ஒரு வித சுய ஏளனத்தையும் தருகின்றன. அதிகாலை 6 மணிக்கு அவள் தன் வீட்டிலிருந்து புறப்படுவாள். அதனைத் தொடர்ந்து அவளைத் தொடர்ந்து அவனும்! எப்பொழுதுமே சந்திப்புக்கள் எதேச்சையாக அமைய வேண்டும் என்பதற்காக அவன் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வான். ‘என்ன அடிக்கடி […]

உயிராய்.. உணர்வாய்

பொதுவாவே எனக்கு கொஞ்சம் மென்மையான பாட்டுக்கள் கூடப் பிடிக்கும். துள்ளல் பாட்டுக்களை விட! போன கிழழை ஒரு பாட்டு ஒண்டு பாக்கவும் கேட்கவும் கிடைச்சது. அதிலை என்ன வித்தியாசம் எண்டால்.. அது ஒரு காதல் பாட்டுத்தான்.. ஆண் குரல் சிங்களத்திலையும் பெண் குரல் தமிழிலையும் இருக்கிறது தான். என்னவோ கேட்ட உடனை பிடிச்சிட்டுது எனக்கு. வீட்டிலை இப்ப அது தான் அடிக்கடி போற பாட்டு. சினிமா பாட்டெண்டால் சொல்லிட்டு விட்டிடலாம். எப்பிடியும் நீங்களும் கேப்பியள். இது கொஞ்சம் […]

திறந்த வெளிச் சிறை

ஏற்கனவே எனது பதிவொன்றில் என்னைக் கவர்ந்த இவ்வொளிப்படம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பில் யாழ்ப்பாணத்தின் நிலையை துல்லியமாக இப்படம் உணர்த்துகிறது. ராணுவ முட்கம்பி வேலிகள், சுருள் கம்பிப் பாதுகாப்பு என்பவற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் குறியீடுகள் என கருதக்கூடிய யாழ் நூல் நிலையம் (இதுவே 81 இல் எரிக்கப்பட்டது) தந்தை செல்வா நினைவுத்தூபி மற்றும் துரையப்பா விளையாட்டரங்கம் என்பன தெரிகின்றன. சுற்றி வர ராணுவ வேலி! நடுவில் யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறைக்கூடமாக! படப் பதிவு […]

சுதந்திர வேட்கையும் 800 டொலரும்

மெல்பேர்ணில் பகுதி நேரமாக வாரத்தில் இரண்டு நாட்கள் Fuel station ஒன்றில் வேலை செய்கிறேன். ஒரு பகலும் மற்றுமொரு இரவுமாக எனது கடமை நேரம் இருக்கும். பகல் வேளைகளில் வேலை செய்வதும் நேரம் போவதும் பெரிதாக தோற்றுவதில்லை. ஆனால் இரவு இருக்கிறதே.. நேரம் அதன் அரைவாசி வேகத்தில் நகர்வது போல இருக்கும். 12 மணியாச்சா? 2 மணியாச்சா? 4 மணியாச்சா.. ம்.. இன்னும் 2 மணிநேரம் தான் என அடிக்கடி எண்ணிக் கொண்டே நேரம் கழியும். பொதுவாக […]