திறந்த வெளிச் சிறை

ஏற்கனவே எனது பதிவொன்றில் என்னைக் கவர்ந்த இவ்வொளிப்படம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சிங்கள ராணுவ ஆக்கிரமிப்பில் யாழ்ப்பாணத்தின் நிலையை துல்லியமாக இப்படம் உணர்த்துகிறது. ராணுவ முட்கம்பி வேலிகள், சுருள் கம்பிப் பாதுகாப்பு என்பவற்றுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தின் குறியீடுகள் என கருதக்கூடிய யாழ் நூல் நிலையம் (இதுவே 81 இல் எரிக்கப்பட்டது) தந்தை செல்வா நினைவுத்தூபி மற்றும் துரையப்பா விளையாட்டரங்கம் என்பன தெரிகின்றன. சுற்றி வர ராணுவ வேலி! நடுவில் யாழ்ப்பாணம் ஒரு திறந்த வெளிச் சிறைக்கூடமாக! படப் பதிவு […]

கடலின் பசு

பாக்கு நீரிணை கடற்பரப்பு, மன்னார் வளைகுடா மற்றும் ஹவாய்த் தீவுகளில் மட்டுமே வாழ்கின்ற அருகி வருகின்ற ஒரு உயிரினம் இக் கடற்பசு. ஈழக் கடலின் தனித்துவமான பெரிய உயிரினங்களில் ஒன்றான இது Dugong எனப்படுகிறது. தாவர உண்ணி என்பதனாலேயே அதிகம் பவளப் பாறைகள் மற்றும் தாவரங்கள் நிறைந்த ஈழத்தின் மேற்குக் கடல் பகுதியில் இவ்வுயிரினம் வாழ்கிறது. ஆகக் கூடியதாக 3 மீற்றர் நீளமும் 400 கிலோ நிறையும் உள்ள கடற்பசு கிட்டத் தட்ட தரை விலங்கான யானையின் […]

மீண்டும் வணக்கம்

ஒரு சில கால இடைவெளியின் பின்னர் மீண்டும் வந்துவிட்டேன். யாழ் தந்த வீட்டில் போட்டது போட்டபடி இருக்க கொஞ்சம் ஜிலு ஜிலுப்பாய் ஒரு வீடு கட்டி வந்தாச்சு. ( இங்கே மெல்பேர்ணில் வசிக்கும் வீட்டினையும் மாற்றியாச்சு). இனித் தொடர்ந்து எழுதுவதற்கு முன்பாக ஒரு படம்! புது வீட்டில் படங்கள் எல்லாம் சரியாக வருகிறதா என பரிசோதிக்க இது. ஒஸ்ரேலிய பழங்குடியினர் சிட்னியில் எடுக்கப்பட்டது. பிற்குறிப்பு: தமிழில் பின்னூட்டம் தொடர்பாக எல்லா இடத்திலும் சொன்னது மாதிரி முயற்சித்து விட்டேன். […]

கண் கெட்ட பின்னும் சூரிய நமஸ்காரம்

அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு கிழக்கு பிரச்சனைக்கு தீர்வு காணும் தனது முயற்சிகளுக்கு தடங்கலாக இருந்து வருவதாக இலங்கை ஜனாதிபதி அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்ததாக சற்று முன்னர் சக்தி வானொலி சொல்லியது. அது இப்பொழுதுதான் அவருக்கு தெரிந்ததா என்ற கேள்வியும் இப்போதாவது தெரிந்ததே என்ற எண்ணமும் ஒருங்கே உண்டாகின்றன.சக்தி சொல்லியதை வைத்துப் பார்த்தால் நமது அதிபர் சற்றுக் கடுமையாகத் தான் கருத்து வெளியிட்டிருக்கிறார் போல தெரிகிறது. அரசாங்கத்தில் இருக்கும் சில சக்திகள் வடக்கு […]