கேள்விகள்

ஆனையிறவுப் பெருவெளியைக் கடக்கின்ற போதெல்லாம் மேனி சிலிர்த்துப் போவதென்னவோ உண்மைதான். ‘ஆனையிறவுக்கு சேலைகள் கட்டி ஆனந்தம் பாடுங்கடி..” மோட்டார் சைக்கிளை ஓட்டிய நகுலன் சத்தம் போட்டு பாடினான். அற்புதமான குரல் அவனுக்கு.. நேற்று இரவு முழுதும் அவனது பாட்டுக்கச்சேரியுடன் தான் கழிந்தது. ‘கவனமடா.. பாத்துப்போ..” பின்னாலிருந்து சொன்ன எனக்கு லேசான பயமிருந்தது. கரை முழுவதும் மிதிவெடி கவனம் அறிவிப்புக்கள். ‘ஒல்லாந்தர், வெள்ளைக்காரன், சிங்களவன்,இந்தியன் எண்டு ஒரு முன்னு}று வருஷம் அந்நிய ஆதிக்கத்தில கிடந்த நிலம் இது.. இதுக்காக […]

அலை மீதேறிக் கரை தேடி 1

1997 மே 13 மதியம் மன்னாரின் இலுப்பைக் கடவைக் கடற்கரையோரமாக நடக்கிறேன். போட்டிருந்த செருப்பு புதைய, கால்களைத் தொடும் மணல் சுடுகிறது. அலைகளின் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது கடல். இன்று இரவு இந்தக் கடலின் அந்தக் கரை நோக்கிச் செல்லும் ஏதாவது ஒரு படகில் நான் வாந்தியெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். நாளைய இந்த நேரத்தில் ஏதாவது ஒரு அகதிகள் முகாமில் என் பெயரைப் பதிவெடுத்துக் கொண்டிருக்கக் கூடும். அல்லது ? நாச்சிக்குடா கடலில் இருந்து தமிழகம் […]

முகங்கள்

‘விழுந்தாலும் உயிர்ப்போம்’ எனத் தொடங்கி ‘எமைக் கழுவேற்ற நீளுமோ பிறர் கை’ என முடித்தான். பின்னாலிருந்து விசில் சத்தம் மாறி மாறி கேட்டது. அது அவனது நண்பர்கள். ‘அவ்வப்போது அடியுங்கடா விசில்’ என சொல்லியிருந்ததை மறக்க வில்லை அவர்கள். ‘இப்பொழுது சென்று தொகுப்பிரையில் வருவேன் என எச்சரிக்கிறேன்’ என சென்றமர்ந்தான். எல்லோரும் கை தட்டினார்கள். அதுவும் மூன்றாவது வரிசையிலிருந்த அவள் பலமாய்த் தட்டினாள். அவள் ஒவ்வொரு முறையும் தட்டுகிறாள் அவனையே பார்த்தபடி. இப்பொழுதும் அவனையே பார்த்தபடி.. ‘யாராக […]

வெட்கம் – (கெட்ட) கதை

இது ஒரு சிறுகதை (அப்பிடியா!) கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் எழுதி தினக்குரலில் வெளியானது. சிறுகதையென்றால் திடுக்கிடும் எதிர்பாராத முடிவுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாற்றி அது தன் பாட்டில் இயல்பாய்ச் சென்று முடியலாம் என ஒரு திடுக்கிடும் முடிவை நான் எடுத்து எழுதிய கதை.இரண்டு வருடங்களுக்கு முன் நிறைவைத் தந்த கதை இப்பொழுது நின்று திரும்பிப் பார்த்தால் திருந்துவதற்கும் முன்னேறுவதற்கும் இடம் உண்டு என்கிறது.இருப்பினும்.. இங்கே இட்டு வைக்கிறேன்.. ஆகக் குறைந்தது ஒரு ஆவணப்படுத்தலுக்காகவேனும்.. சற்றே […]