போர் ஒரு பொழுதுபோக்கு அல்ல

சயந்தனின் ஆதிரை படித்தேன். தமிழீழப் போராட்டத்தின் துவக்கப் புள்ளியான 1977 கலவரம் துவங்கி 2009 இறுதிப் போர் முடிந்து நிவாரணப் பணிகளுக்கான குழு அமைதல் வரையிலான பரந்த வரலாற்றுப் புதினம். தமிழ் ஈழம் குறித்த தெளிவு இல்லாதவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல். காஷ்மீர் பிரச்சினையோ ஈழப் பிரச்சினையோ…

அல்லற்பட்ட ஓர் இனத்தின் துயர்

ஆதிரையைப் படிக்கத் தொடங்கிய போதே, போர் பற்றிய லட்சியவாதக் கற்பனைகள் எல்லாம் உடைந்து விட்டன. தியாகம் ,லட்சியம், கனவு என்பதைத் தாண்டி போர் என்பது ஒடுக்கப்படுகின்ற மக்களின் விடுதலைக்கும், உரிமைக்குமான வேட்கையே என்பது விளங்கியது. போர் எவ்வாறு மனிதர்களுடைய சமநிலையை, வாழ்வாதாரத்தை, நம்பிக்கைகளை,தன்மானத்தை எல்லாம் குலைத்துப் போடுகிறது?எது மக்களை…

ஆதிரை என்கின்ற இத்திமரத்துக்காரி

ஈழத்தில் இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டம் என்ற நீண்ட பயணத்தின் பிறகு, அதைப்பற்றிய முனைப்பான பிரதிகள் தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவை பெரும்பாலும், போராட்டத்தில் எழுத்தாளர்களின் தன்னிலையையும் தன் உணர்வுகளையும் பிரதிபலிக்கத்தக்கவாறே, எழுத்துவடிவம் பெறுகின்றன. ஒரு வகையில் அவை அரசியல் பிரச்சாரத்திற்கு இலக்கிய வடிவம் கொடுக்க முயல்கின்றன. சயந்தனின் ஆதிரையோ, ஓர் ஒற்றைக்…

காட்டின் பச்சை மணத்தில் இருந்து வெடிப்பின் கந்தக மணம் வரை

பல நூற்றாண்டுகளாக போரினைக் கண்டிராத நிலத்தின் குழந்தைகள் கூட போர் குறித்த மனச்சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளாமல் தங்களுடைய குழந்தைமையைக் கடந்து இளமையை அடைவதில்லை. கதைகளாக விளையாட்டுகளாக திரைப்படங்களாக போரினை கற்பனித்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். நம் கற்பனை செய்யும் போரில் வெற்றியும் தோல்வியும் இருந்திருக்கும். தொழில்நுட்பங்களும் சாகசங்களும்…

ஒரு நிலப்பரப்பின் முப்பதாண்டுகால வரலாறு

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாகக் கோத்தகிரியில் குழந்தைகள் நிகழ்விற்காகத் தங்கியிருந்த போது புத்தகம் ஒன்றை வாசிக்க எடுத்துத் துவங்கி, முதல் பத்தியினைப் படித்துவிட்டு இத்தனை வலிகள் மிகுந்த எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்தால் நிச்சயம் நிகழ்விழும் பயணத்திலும் ஈடுபாடுச் செலுத்திட முடியாது என்பதால் மூடி வைத்து விட்டுத் தொடவேயில்லை. பிறகு…

ஜிஃப்ரி ஹாஸன்

ஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின் போராட்டமும் தமிழர் வாழ்வும் பற்றி பல நாவல்கள் வெளிவந்து விட்டன. ஷோபா சக்தியின் BOX கதைப்புத்தகம், குணா கவியழகனின் விடமேறிய கனவு, சாத்திரியின் ஆயுத எழுத்து, சயந்தனின் ஆதிரை போன்றன இந்தவகையில் குறிப்பிடத்தக்க நாவல்கள். ஆதிரை வடபுல சாமான்ய தமிழ்ச்சனங்களினது வாழ்வு ஈழப்போரால் எப்படிச் சிதைந்தது என்பதை மிக…

ஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்

1977 தொடக்கம் 2009 வரையான காலத்தை பேசும் ஒரு நாவல். விமர்சனம் அல்லது கருத்துரை என்பதற்கு அப்பால் சயந்தனின் இந்த ஆர்வம் அல்லது முயற்சியை வரவேற்பதுடன் பாராட்டியும் ஆகவேண்டிய கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன். மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சயந்தன். படைப்பியற்றுறையில் சயந்தன் தனித்துவமான ஒரு கதைசொல்லியாக…

மருது

எழுத்தாளர் சயந்தன் அவர்களுக்கு, நான் கடந்த முறை எழுதிய போது அடுத்த முறை தமிழில் எழுதுவதாக சொல்லி இருந்தேன். ஆனால் அதற்குள் இரண்டு வருடம் ஓடி விடும் என்று நினைக்க வில்லை. சோதி மலர் போல ஒரு பெண்ணை இதுவரை படித்த எந்த புத்தகத்திலும் சந்திக்க வில்லை. சந்திரா…

ப்ரகாஷ் சிவா

சயந்தன் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒரு இளைஞர், இவரின் பெயரற்றது என்ற சிறுகதை தொகுதியை படித்து முடித்த உடனேயே யோசிக்காமல் ஆதிரையை வாங்கினேன். 1977லில் ஆரம்பமாகும் இந்த நிஜங்களின் தொகுப்பு மூன்று தலைமுறைகளை கடந்து 2013 இல் முடிவடைகிறது. இதுவரை இலங்கையை நேரடியாக அறியாத, ஊடகங்களில்,…

ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்

19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது. நேர்காணல் : கருணாகரன் 1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன? அது எப்ப வருது? அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று…