comment 0

ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்

19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது. நேர்காணல் : கருணாகரன் 1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன? அது எப்ப வருது? அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று பெயர். எழுதிக்கொண்டிருந்த காலம் முழுவதும் பெரிய மன அழுத்தத்தைத் தந்த நாவல் ஆதிரை. அந்த நாவல் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத்தானே கொண்டிழுத்துக்கொண்டுபோனபோது ஒரு கையாலாகாதவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்., மனம் சலிச்சு, இதிலிருந்து வெளியேறி விடவேண்டுமென்று நொந்துகொண்டிருந்தேன். அதுவொரு அலைக்கழிப்பான காலம். அதை எழுதிமுடித்து அது வெளியாகிவிட்ட பிறகும் கூட, துயரப்படும் ஒரு மாந்தர் கூட்டத்தைக் கைவிட்டுவந்த ஓர் உணர்வுதான் இருக்கிறது. இதை மறுபடியும் எழுதித்தான் கடக்கவேண்டும்போலிருக்கிறது. உண்மையைச் சொன்னால் மனது ஒரு கொண்டாட்டத்தை விரும்புகிறது. ஆறாவடு எள்ளலும் துள்ளலுமாக எழுதப்பட்ட ஒரு நாவல். இப்பொழுது யோசித்தால் ஒரு துயரக்கதையை பகிடியும்…

comment 0

காஸா! படுகொலை நாட்களின் குறிப்புகள்

Rasha N. AbuShaaban இங்கிலாந்தின் Aberdeen பல்கலைக்கழக முதுநிலைப்பட்டம் பெற்றவர். பலஸ்தீன சிவில் சமூக அமைப்புக்களிலும் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திச் செயற்திட்டங்களிலும் பணியாற்றியவர். தற்போது சர்வதேச அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றார். உரிமைகளை உறுதிசெய்வதும், அதிகாரங்களைக் கையளிப்பதுவுமே, பெண்கள் குழந்தைகள், இளைஞர்கள் உள்ளடங்கலான அமைதிமிக்க பலஸ்தீன சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான திறவுகோல்கள் என்பது இவருடைய நம்பிக்கை. தற்பொழுது ஆக்கிரமிப்பு யுத்தம் நடைபெறும் காஸாவிலிருந்து இக்குறிப்புக்களை alochonaa.com இணையத்தளத்திற்காக எழுதுகின்றார். தமிழில் மொழிபெயர்ப்பு : சயந்தன் Gaza, July 9, 2014 பாதுகாப்புமுனை, (“Protective Edge”)இஸ்ரேல்அறிவித்த புதிய யுத்தம், இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பித்தது. மூன்று இஸ்ரேலியக் குடியேறிகள் கடத்தப்பட்டு வெஸ்ட்பாங்கில் சடலங்களாக மீட்கப்பட்ட நாள் முதலாகத் தொடர்ந்த அச்சுறுத்தல் இன்று வெடித்தது. இக்கொலைகளுக்கான மறுப்பையோ உரிமைகோரலையோ இதுவரை யாரும் வெளிப்படுத்தவில்லையென்ற போதும் இது ஹமாஸ் அமைப்பின் கைங்கரியம் என்பதே இஸ்ரேலின் உறுதியான நம்பிக்கை. குடியேறிகள் கடத்தப்பட்ட சில மணித்தியாலங்களிலேயே வெஸ்ட்பாங்கிலுள்ள ஹமாஸ் உறுப்பினர்களின்…

comment 0

கருப்பையா பெருமாள்

கதாசரியர்கள் தங்கள் அனுபவங்களை ஆசைகளை நிராசைகளை வாழ்வனுபவங்களை தனது பாத்திரங்களின் வாயிலாக வாசகனின் வாசகஉலகிற்கு கடத்துவதே முதலான வேலை. அப்படி கடத்தப்படும் விஷயங்கள் வாசகனுக்கு விருப்பமாக இருந்தால் அந்த நாவல் வாசகனை ஈர்த்துவிடும்.சிலநேரம் வாசகனின் வாழ்வனுபவங்களின் சிறு தெரிப்பு படிக்கும் கதை மாந்தரின் அனுபவங்களோடு ஒன்றியிருந்தால் அந்த நாவல் நமது மனதிற்கு நெருக்கமாக மாறிவிடுவதை அவதானிக்கலாம். பள்ளி நாட்களில் கற்பனை மனவோட்டத்தால் சாண்டில்யனின் ஜலதீபம் யவனராணி நா.பாவின் மணிபல்லவம் பிடித்தது.கல்லூரி புகுமுக வகுப்பில் ஜெகசிற்பியன் அகிலன் பிடிக்க ஆரம்பித்தது.பட்டவகுப்பில் இந்திய பொதுவுடமை கட்சி உறுப்பினன் ஆனபின்பு மணிக்கொடி கால ஆசிரியர்களும் ஜெயகாந்தனும் நெருக்கமானார்கள். அஞ்சல்துறை பணியில் சேர்ந்தபின் பாலகுமாரன் சிவசங்கரி அனுராதா ரமணன் ஹெப்சிபா ராகிரங்கராசன் சுஜாதா போன்றவர்கள் பிடித்துப்போனார்கள். சமீபத்தில் நான் படித்த நாவல் சயந்தன் அவர்களின் ஆதிரை. நாவலாசிரியரின் சில அனுபவங்கள் எனது சொந்த அனுபவங்களின் அடையாளங்களை கொண்டிருப்பதால் எனது மனதிற்கு நெருக்கமாகிவிட்டது.மலையக தமிழர்களின் வாழ்வு துயரங்களையும் சந்தோசங்களையும்…

comment 0

மணிமாறன்

அனைத்தையும் அழித்தொழித்தாகி விட்டது. அரை நூற்றாண்டு கால யுத்தத்தின் கடைசித் துளிகளில் எதை பெற்றது, எதை இழந்தது இந்த இனம். துட்டகை முனுவிற்கும், எல்லாளனுக்கும் துவைந்த யுத்தத்தின் சத்தங்களால் திகைத்திருந்த நிலத்தின் இனியான கதை என்னவாகப் போகிறது. உலகின் காணச் சகியாத காட்சிகளையெல்லாம் வர்ணமேற்றி காட்சி உருவைப் பெரிதினும், பெரிதாக்கி முள்ளி வாய்க்காலின் கம்பி வேலிகளைப் பிடித்தபடி வெறித்திருக்கும் இந்த தமிழ்க்குடிமகளின் கண்களுக்குள் பொதிந்திருக்கும் கேள்விகளை நாம் எப்படி எதிர் கொள்வோம். அரசியல் பிழைத்தோர் அணுகுவதைப் போலன்றி தன் இணத்தின் துயரங்களையும் அதன் சமரசமற்ற யுத்தத்தையும் ஒரு முறை சொல்லிப் பார்த்தால் என்ன? எல்லாம் முடிந்தா விட்டது. இனியான வாழ்வின் துயரப்பெருங்கடலை நீந்திக் கடந்திட நம்பிக்கைத் தெப்பங்கள் தென்படவில்லையா? போர் என்றாலும், காதல் எனினும் கசப்பென்றாலும், எதுவாயினும் இனியான வாழ்க்கையை அவரவர்கள் தான் வாழ்ந்தாக வேண்டும். கலைஞன் கண்ணுறுகிறான் நம்பிக்கைப் பிடிகயிறுகள் காற்றில் ஊஞ்சலாடுகிறது. இது அவனை வண்ணி நிலத்திற்கும், வளைகுடா…