அஷேரா! புனைவெனும் பொய் – நந்தா கந்தசாமி

ஒரு எழுத்து அது ஒரு நாவலாக இருந்தாலென்ன அல்லது அது ஒரு வெறும் கடதாசி எழுத்தாக இருந்தாலென்ன, புனைவெனிலும் அது உண்மைக்கு மிக அருகாக போகுமெனில் அது ஒரு மேன் இலக்கியம் ஆகின்றது . நான் “அஷேராவை” வாசிச்சு நொந்து போனேன். சயந்தனின் “அஷேரா” நாவலில் முதல் பக்கதில் தமிழீழ விடுதலை அமைப்புக்களை , தமிழீழ விடுதலை இயக்கத்தில்(TELO) இருந்து அட்டவணை படுத்திய சயந்தன், EROS, EPRLF, PLOTE மற்றும் தமிழீழ விடுதலை இராணுவத்தின்(TELA) பின் ஆறாவது […]

அஷேரா! ‘இருள்’ என்ற வார்த்தையின் அர்த்தம் – சுபா

‘ஏரி பெரிய இருள்ப் படுக்கையைப் போல விரிந்துகொண்டே போனது…’. மனதின் ஒவ்வொரு இருள் படுக்கையாக உரித்து உரித்து எடுத்து, சில நாட்களுக்கு ஆப்கானின் வரண்ட மலைகளாக நிச்சலனத்துடன் வெறித்து மட்டுமே நிற்க வைத்தது அஷேரா எனும் ஆழமான நாவல். காமமும், கோபமும் உயிர்க்குணங்கள். பிரிக்க முடியாதவை. இருள் போர்த்தியவை. காமத்திற்கு இருட்டின் மறைப்பும், கோபத்திற்கு இருண்ட மனம் அல்லது இருண்ட செய்கை மீதான ரௌத்திரமும் தேவைப்படுகிறது. இவை உந்துதலை (Drive) அடிப்படையாகக் கொண்டவை. போர் கூட அவ்வாறே. […]

‘அஷேராவின்’ புனைவுத் தளத்தை விரிவாக்கத் தூண்டும் வாசகப்பணி இது – அசுரா

நாவலின் ஆசிரியரின் குறிப்பு எனும் இறுதிப்பகுதியும், அதுவே இந்தப் புனைவின் ‘ஆசிரியரான’ சயந்தனின் குரலாகவும் கருதி, இப்பிரதியின் பின்னல்களை அவிழ்க்க வேண்டியதான ஒரு வாசிப்பு அனுபவத்தை என்னால் உணரமுடிகிறது. இலக்கியப் படைப்பாளிகளை, தத்துவ சிந்தனையாளர்களை, வரலாற்று ஆய்வாளர்களை ஆசிரியர்கள், ஆசான்கள், எனும் பொருள்பட அழைப்பதன் உட்பொருள் என்ன? இவர்களும் தமது சுயமான தத்துவ சிந்தனைகளூடாகவும், சுயமான இலக்கியப் புனைவுகளூடாகவும் வெளிப்படுத்தும் சம்பவங்களை வாசகர்கள் புதிதாகத் தேடிக்கண்டடையும்போது, அவர்கள் ஆசிரியர்களாகவும், ஆசான்களாகவும் வாசக மனங்களில் உணரப்படுகிறார்கள். ஆயினும் நிறுவனக் […]

மனப்பிறழ்வின் நாட்குறிப்பேடு அஷேரா – தி.லலிதகோபன்

அறிமுகம் சயந்தன் கதிர் என்று அழைக்கப்படும் சயந்தன் அவர்களின் மூன்றாவது நாவல் பிரதி அல்லது ஆதிரைக்கு பின்னரான பிரசவம் என்றோ இந்த அறிமுகத்தினை சுருக்கமாக நான் கடந்து விடலாம். ஆனால் அதற்கு அப்பாலும் சில செய்திகளை சொல்லித்தான் ஆக வேண்டியுள்ளது. முதன்முதலாக “ஆதிரை” என்ற பெயரினை முகநூலின் மூலமாக கேள்வியுற்றதன் பின்னர் நான் அந்த நூலினை வாசிப்புக்காக தேட முற்பட்டதன் காரணம் “ஆதிரை” என்ற பெயர் என்னுள் ஏற்படுத்தியிருந்த மயக்கமே. இதை பிரமிள் அவர்களின் மொழிதலில் குறிப்பிடுவதானால் […]