ஆதிரை – உள்ளும் புறமும்
ஆதிரைக்கான எனது தேடல் மிக நெடிது. இந்த புத்தகம் குறித்தான சில குறிப்புக்களை முக நூலில் படித்த காலத்திலிருந்து கிடத்தட்ட ஐந்து வருடங்களின் பின்னரே இந்த புத்தத்தினை வாசிக்க கிடைத்தது தம்பி ஜெனோஜனின் புண்ணியத்தினால். ஒரு நூல் அல்லது நாவலுக்கான பீடிகை இன்றி அதாவது முன்னுரை, முடிவுரை, பதிப்புரை போன்ற இன்னோரன்ன உரைகளின்றி அமைந்திருப்பது அதனுடைய புறச்சிறப்பு. அதற்க்கு பீடிகைகள் எதுவும் தேவையில்லைதான். ஏனெனில் அங்கே வரும் பாத்திரங்களும், சம்பவங்களும் நாம் அறியாததோ அல்லது அனுபவப்படாதவையோ அன்று. […]