அஷேரா! நீரோட்ட ஆழம் – கஜுரி புவிராசா
துரோகங்களால் இன்று இந்த நிமிஷம் வரை வதைபட்டுக்கொண்டிருக்கிறது ஒரு இனம்… அதன் இன்னல்களை பட்ட வதைகளை சிந்திய சிவப்புத் துளிகளை தெறித்த நிணக்குழம்புகளை எல்லாம் எதிர்காலத்திற்கு கடத்தியாக வேண்டியது காலத்தினது மட்டுமல்ல ஒவ்வொருவருடைய கடப்பாடும்.. காயங்கண்ட சிம்மங்களோ புலிகளோ நாவால் அந்த காயத்தை வருடி வருடி வலி மிகச்செய்து தான் காயமாற்ற விளையும்…சில வன்மங்களும் அப்படித்தான்… சில நூல்களை மட்டும் தான் ஆத்மார்த்தமாக ஒரே மூச்சில் வாசித்து அப்பாடா என்று எமக்கே ஒரு ஆன்ம திருப்தியைக் கொடுக்கவியலும். […]