ஆறா வடு – துரைரத்னம் தயாளன்

ஆறாவடு ஆறாவடு என்டு ஒரு புத்தகம் இப்ப கொஞ்சகாலமா இந்த பேஸ்புக்க திறந்தா பெடியளோட கதைச்சா என்டு இதே கதை தான் எங்க பாத்தாளும் .
சரி அப்பிடி என்னடா இருக்கு இதுல புதுசா, நாமளும் ரொம்ப பெரிய அறிவாளி மாதிரி காட்டிக்கலாம் தானே என்டு நினைச்சு ஒரு மாசமா ‘‘ பிரான்ஸ் லாச்சப்பல்ல இருக்கிற அறிவாலயம் பொத்தகசாலைக்கு ’’ கிழமைக்கு ஒருக்கா போயி அண்ணே ஆறாவடு வந்திட்டா அறாவடு வந்திட்டா என்டு கேட்டு அந்த ஆள ஒரு வழி பண்ண..அவரும் உந்த பெடியன் சயந்தனும் சோபாவும் ஒன்டு தான் தம்பி உதையேன் தேடித்தேடி படிக்கிறீர் எதுக்கும் நானும் முயற்சி செய்து பாக்கிறன் என்டு அவர எடுக்க வைக்கவே பெரியபாடு பட்டாச்சு.

ஒரு வழியா ஒரு மாசத்துக்கு பிறகு நேத்து அவர் கூபபிட்டு புத்தகத்த தந்தா விலை ‘‘ 9 euro ’’. அடபாவமே இதுக்கு என்னடா செய்ய அரசாங்கம் தார அகதிக் காசில இந்த மாசத்து செலவில 10 euro க்கு துண்டப் போட வேண்டியது தான் என்டு சொல்லிப் போட்டு ஆறாவடுவ எடுத்து கடையில வைச்சே முதல் பக்கத்த திறந்தது முதல் இருந்தா…..நடந்தா…… சாப்பிட்டா ….
என்டு ஒரு நாள் முழுக்க அதையே திருப்பி திருப்பி பாத்துக் கொண்டிருக்க ஒரு பெடியன் பாத்திட்டு அண்ணே உவர் என்ன இயக்கத்த நல்லா புகழ்ந்து எழுதியிருக்கிராராம் நானும் கேள்விப்பட்டன் அப்பிடியே என்டு கேக்க பொறுடாப்பா நானே இப்ப தான் படிக்கவே தொடங்கிருக்கன் பொறு பொறு என்டு அவனுக்கு ஒரு பதில சொல்லிப் போட்டு ………….
கடைசியா ரெயினுக்க இருந்து தனிய சிரிச்சப்போ பக்கத்து சீட்டுகார வெள்ளை இன பெண் ஒருத்தி என்ன ஒருக்கா மேலும் கீழுமா பாத்திட்டு அப்பிடியே ஒரு சொட்டு தள்ளி விலகி இருக்க ” என்ன பைத்தியம் என்டு நினைக்கிறாள் போல ” நினைச்சா நினைச்சிட்டு போ என்டு நான் பக்கத்த திருப்பிறதிலையே குறியா இருந்தன்.

கடைசியா படிச்சு முடிச்சதுக்கு பிறகு வீட்டில இருக்கிற இன்னொறு அறிவாளி கேட்டான் ஆறாவடு எப்பிடி மச்சி என்டு…

நாமலும் அறிவாளியாச்சா !! புத்தகம் பாடிக்கிறத விட படங்கள் பாக்கிறது தானே அதிகம் அந்தப் பழக்கத்தில
” உந்த நடிகர் ஒருத்தர் தசாவதாரம் என்டு ஒரு படம் எடுத்தாரே அத பாத்துப் போட்டு உவர் என்ன கடவுள் இருக்கென்டுராரா ! இல்ல
கடவுளே இல்லை என்டுராரா !
இருந்தா இருக்கு என்டு சொல்லனும், இல்லையா இல்ல என்டு சொல்லனும். அத விட்டுப் போட்டு உதென்ன கதை…..

ஒரு படத்துக்குள்ள பத்து தலைய வைச்சு ….அதுக்குள்ள நகைச்சுவை நக்கல் நெய்யாண்டி என்டு கலந்து கட்டி பத்தாதுக்கு கிழுகிழுப்பு காட்சி வேற. உவருக்கு என்ன பைத்தியமே பிடிச்சிருக்கு. காசு கொடுத்து படம் பாக்கவாரவன் எல்லாரையும் சந்தோசப்படுத்தோனும் என்டு படம் எடுக்க வெளிக்கிட்டா எப்பிடி !!!!!

இல்ல பாருங்கோ ஒரு படத்த எல்லாத் தரப்பும் பாக்கும் தானே ஆத்திகன் நாத்திகன் என்டு உந்த இரண்டும் கெட்டான் ஆக்களும் வருவீனம் தானே. அப்ப தானே படத்துக்கு நட்டமிருக்காது காசு பாக்கலாம். அப்ப அவர் என்ன செய்வார் ?

நல்ல காலம் நீலப்படம் பாக்கிறவங்களும் பாப்பாங்கள் தானே என்டு சகிலாவை நடிக்க வைக்காம விட்டாரே அந்தளவுக்கு ஒகே தான் என்டு நான் எனக்குள்ள எண்ணிக் கொண்டேன்.

இப்ப ஆறாவடு நண்பனோட கையில அவன் தனிய இருந்து சிரிக்க தொடங்கி ஒரு 30 நிமிசமாச்சு.