ஆறா வடு – அ.முத்துலிங்கம்

அன்புள்ள சயந்தனுக்கு, வணக்கம். உங்கள் ’ஆறாவடு’ நாவலை வாசித்து இன்புற்றேன். ஓர் இரவிலே படித்து முடித்துவிட்டு உடனேயே எழுதுகிறேன். உங்கள் முதல் நாவலே இப்படி அமைந்திருப்பதால் இனி வரும் நாவல்கள் எல்லாம் இன்னும் சிறப்பாக அ்மையும் என எதிர்பார்க்கலாம். நாவலிலே eve teasing பகுதியும் அதன் தண்டனையும் வந்த இடத்தைப் படித்து சிரித்துவிட்டேன். சலிக்காத நடையும் நுட்பமான அவதானிப்புகளும் கொண்ட நாவல். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.