S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.
தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுகொள்ளப்படாமல் இருப்பது மனதுக்குப் பாரமாய் இருந்தது. ஈழத்திற்காக ஒரு கவிதை புனைந்தாலோ, அல்லது திரைப்படத்தில் நடித்தாலோ, தூக்கித் தோளில் வைத்துக் கொண்டாடும் நாம் அந்த மனிதரை எதற்காக கைவிட்டோமோ தெரியவில்லை. ஒரு வேளை அதற்கான காரணமாய் அவரே கூறுவது போல I worked with PLOTE என்ற ஒரு வசனம் இருந்திருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்தும் அவர் கூறுவதை அவதானிக்க வேண்டும். When I heard they were killing their own people, I left PLOTE.
1953 இல் அவுஸ்ரேலிய மெல்பேர்ண் பல்கலைக் கழகத்தில் (Melbourne University) தனது B.Arch பட்டப்படிப்பினை முடித்த டேவிட் ஐயா தொடர்ந்து லண்டனிலும் நைஜீரியாவிலும் நகரத் திட்டமிடல் (Town Planning) கற்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார். 3 வருடங்கள், கென்யா நாட்டின் மொம்பாசா (Mombasa) நகரத்திட்டமிடலில் பிரதான பங்கு வகித்திருக்கின்றார். (Chief Architect) .1983 இல், கொழும்பில் போராளிகள் குறித்த தகவல் கொடுக்கத் தவறியமைக்காக சிங்கள அரசால் கைது செய்யப்பட்டு பனாங்கொட இராணுவ முகாமிலும், பின்னர் வெலிக்கடைச் சிறையிலும் அடைக்கப்பட்டிருக்கிறார். 25 மற்றும் 27 யூலைகளில் நிகழ்ந்த வெலிக்கடைப் படுகொலைகள் சம்பவத்தின் வாழும் சாட்சிகளில் இவரும் ஒருவர். பின்னர் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்டு 26.09.1983 அன்று நடந்த சிறையுடைப்பில் தப்பித்து, 27 நாட்கள் வன்னிக் காடுகளில் தலைமறைவாகி 20.10.1983 அன்று தமிழ்நாட்டினுள் தஞ்சம் புகுந்தார்.
தனது நூலெங்கும் தமிழீழம் என்னும் நாட்டிற்காக தான் திட்டமிட்டிருந்த கனவுகளை டேவிட் ஐயா சொல்லிச் செல்கின்றார். தனது ஆரம்ப காலங்கள், இலங்கையின் அப்போதைய அரசியல் நிலைகள், வெலிக்கடைச் சிறை நினைவுகள், தனது தமிழக அனுபவங்கள் என பலதினதும் கூட்டாக அது அமைந்திருக்கிறது. ஆங்காங்கே தீவிரமாக ஈழத்தையும், இஸ்ரேலையும் சாதகமாக ஒப்பிடுகிறார். 1962 இல் இரண்டு வார காலம் இஸ்ரேல் நாட்டில் தங்கியிருந்தமையையும் Exodus என்னும் நூல் குறித்தும் சிலாகித்துச் சொல்கின்றார். I wanted to build Tamil Eelam like Israel. Now I hate the Israelis. They are slaves to America.
திரு டேவிட் ஐயா தனது நூலில் தனது தமிழக அகதி வாழ்வின் அனுபவங்கள் குறித்து எழுதியதை முடிந்தவரை மொழி பெயர்த்திருக்கின்றேன். 1983 இல் கதாநாயகர்கள் போல தாம் வரவேற்கப்பட்டதாகக் கூறும் அவர் தற்போதையை நிலை குறித்து இங்கு எழுதியிருக்கின்றார். இனி அவர்….
தமிழகத்தில் எனது அகதி வாழ்வின் அனுபவங்கள் பற்றி நான் சிலவற்றைக் கூற வேண்டும். தமிழ் நாடு முழுவதும் அதிகளவான ஈழத் தமிழ் அகதிகள் பரந்திருக்கிறார்கள். நான் வந்ததன் பிற்பாடு, அகதிகளின் தொகை எழுபதினாயிரமாக அரசாங்க முகாம்களிலும், ஒரு லட்சமாக வெளியிடங்களிலும் அதிகரித்தது. இப்போது முகாம்களில் அதே எழுபதினாயிரமாகவும் வெளியிடங்களில் முப்பதினாயிரமாகவும் உள்ளது. 1983 இல் நாம் மிக மரியாதைக் குரியவர்களாக வரவேற்கப் பட்டோம்.
ஆயினும் ரஜீவ் காந்தி கொலையின் பின், முழுமையாக எனச் சொல்ல முடியாவிட்டாலும், தமிழக மக்களால் கூட நாம் வெறுக்கப் படுகின்ற ஒரு நிலை தோற்றம் பெற்றது.
எனது இரண்டு சொந்த அனுபவங்களை இங்கு நான் சொல்ல முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழ் அகதிகள் அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டது. நான் திருமங்கலம் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்குள்ள இனஸ்பெக்டர் – அவர் பெயர் பூங்காவனம் எனச் சிலர் சொன்னார்கள் – என்னை ஒரு நாயைப் பார்ப்பது போல ஏளனமாய்ப் பார்த்தார். எந்த விதமான கேள்விகளும் இல்லை. நடுங்கும் என் கைகளிலிருந்து ஆவணங்களைப் பறித்தெடுத்துக் கொண்டார்.
நான் நரைத்து விட்ட தலையுடனும் தாடியுடனும் எழுபதை நெருங்கும் வயதில் இருந்தேன். அவரைக் கோபமூட்டும் எதனையும் செய்யவும் இல்லை. எனினும் இனஸ்பெக்டர் எனது ஆவணங்களைக் கிழித்து ஜன்னல் வழியாக வெளியே எறிந்து கத்தினார்
போ.. போய் எடுத்திட்டு வா
நான் போய் எடுத்து வரவேண்டியிருந்தது. ஏனெனில் அந்த ஆவணங்கள் இல்லாது நான் தமிழ் நாட்டில் வாழ முடியாது.
இப்போது ஈழத் தமிழ் அகதிகள் குடிவரவுத் திணைக்களத்தில் கூட பதிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நாம் பொலிஸ் நிலையத்திலிருந்தும், வங்கியிலிருந்தும், வீட்டுச் சொந்தக் காரர்களிடமிருந்தும் கடிதம் பெற்றுச் சென்று குடிவரவுத் திணைக்களத்தில் நமது பதிவைப் புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தடவை நான் இத் திணைக்களத்திற்கு சென்றிருந்தேன். அப்போது 76 வயது எனக்கு. கூடவே உடல் நடுக்க வியாதியும் வேறு. நான் நீண்ட நேரமாகக் காத்திருந்தேன். எனக்கு முன்னால் நின்றவர் தனது அலுவலை முடித்து விட்டுச் சென்ற பின் நான் அதிகாரியை நோக்கிச் சென்றேன். ஆயினும் அவர் என்னைக் காத்திருக்கச் சொல்லி விட்டு மற்றவர்களை அழைத்தார். ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் நான் – ஒரு காலத்தில் இந்த உலகம் முழுவதையும் கால்களால் அளந்தவன் – நடுங்கும் என் உடலோடு நிற்க வேண்டியிருந்தது.
நான் எனது குடையையும் பையையும் எடுத்து வெளியேறி விட்டேன். பின்னர் குடிவரவுத் திணைக்கள பிரதான அதிகாரியொருவருக்கு என்னுடைய விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்றினை அனுப்பியதையடுத்து என்னை அழைத்த அவர் நடந்த சம்பவத்திற்கு வருந்தியதுடன் எதிர்காலத்தில் இவ்வாறு நடக்காதெனவும் உறுதியளித்தார்.
எனது சிக்கல் தீர்ந்து விட்டது. ஆயினும் இன்னமும் ஈழத் தமிழர்கள் குடிவரவுத் திணைக்களங்களில் தமது நேரங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்த வரை இங்கே நேரம் பெறுமதியற்றது. அமெரிக்க டொலர்களே பெறுமதி மிக்கன.
இதே நூலில் பிறிதொரு இடத்தில் பத்து ரூபாய் லஞ்சம் கொடுப்பதற்கு அந்த நேரத்தில் தன்னிடம் பணம் இல்லாது தவித்ததையும் பின்னர் வேறொரு இளைஞன் உதவி புரிந்ததையும் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு காலத்தில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, யப்பான், தாய்லாந்து என உலகம் சுற்றிய ஒரு பொறியியலாளன், கென்யா நாட்டின் நகரொன்றை திட்டமிட்டு அமைத்த குழுவின் தலைவன், ஈழத்திற்கான திட்டமிடல் கனவுகளோடு திரிந்தவன் இன்று ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து வயிற்றைக் கழுவுகிறான் என்பது எவ்வளவு சோகம்?
30 responses to “தமிழகத்தில் ஈழ அகதிகள்”
சயந்தன்!
இவரைப் பற்றிச் சிலவருடங்களுக்கு முன் “குமுதம்” ரிப்போட்டர் ஒரு கட்டுரை எழுதியதாக ஞாபகம்.
ஆம் ஓர் சிறந்த கல்விமானாகவும்; ஈழத்தில் கட்டுமானத்தை கனவிலும் சுமப்பவராகவும் அந்தக் கட்டுரை சுட்டியிருந்தது.
மீண்டும் தந்ததற்கு நன்றி!

//1983 இல் கதாநாயகர்கள் போல தாம் வரவேற்கப்பட்டதாகக் கூறும் அவர் //
எனக்கு தெரிந்த அளவு அதற்கு மேலே….. அவர் ஒரு பிரத்தியகமான கட்டிட கலைஞர்(archi- tech) பட்டதாரி
//1983 இல் கதாநாயகர்கள் போல தாம் வரவேற்கப்பட்டதாகக் கூறும் அவர் //
எனக்கு தெரிந்த அளவு அதற்கு மேலே….. அவர் ஒரு பிரத்தியகமான கட்டிட கலைஞர்(archi- tech) பட்டதாரி
காந்தீயம்
காந்தீயம்
சயந்தன்,டேவிட் ஐயா ஒரு பெரும் இயகத்தைக் கட்டி வளர்த்தவர்.அவரிடம் அரசியல் நேரடியாகக் கற்றவர்கள் பலர்.இன்றைய தலைவர்களுக்கு முன்பே அவர் அந்த அமைப்பை நிறுவித் தன்னாலா பணிகளைச் செய்தவர்.இறுதியில் அவர் என்ன சொல்கிறார் என்று கீழ் வரும் அவரது எழுத்தில் படியுங்கள்.
“1984 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் திரு.சந்திரகாசனின்(செல்வநாயகத்தின் புத்திரர்)தனிப்பட்ட அரசியல் முயற்சிகளைப் பற்றியும்,அவருடைய வெளிநாட்டுப் பணச் சேகரிப்புகளைப் பற்றியும் ஈழ இளைஞர்கள் மத்தியில் இவரால் உருவாக்கப்படும் குழப்பங்கள் பற்றியும்,ஈழத் தமிழ் மக்களுக்கு இவரால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கை கொடுக்கும் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டேன்…
…விடுதலைப் புலிகளை விமர்சித்ததை அடுத்து என்னை மதியிழந்த கிழட்டுக் கட்டை என்றதும்,சந்திரகாசனை விமர்சித்ததையடுத்து தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தமது எழிச்சி ஏட்டில் என்னைப் பிற்போக்குச் சக்தி,”காக்கை வன்னியன்” என்று வர்ணித்ததையும் அறிவேன்…
நாம் மனம் தளர வில்லை.உண்மைக்கும்,நேர்மைக்கும்,மனிதாபிமானத்துக்கும்,சனநாயகத்துக்கும் வேறொரு கழகத்தைக் கட்டியெழுப்பி ஈழவிடுதலைக்கு உழைப்போம் என்ற உறுதி மொழியைத் தமிழ் மக்களுக்குக் கொடுக்கிறோம்”.-ச.அ.டேவிட்.
இப்படித்தான் அவரது நிலைமை உருவாகியது.இறுதியில் நடந்ததென்னவோ!

விடுதலைப் புலிகளை விமர்சித்ததை அடுத்து என்னை மதியிழந்த கிழட்டுக் கட்டை என்றதும்,சந்திரகாசனை விமர்சித்ததையடுத்து தமிழீழ விடுதலை இயக்கம்(ரெலோ) தமது எழிச்சி ஏட்டில் என்னைப் பிற்போக்குச் சக்தி,”காக்கை வன்னியன்” என்று வர்ணித்ததையும் அறிவேன்…
புளொட்டிலிருந்து விலகிய பின்னர் அவர்கள் கூட இவரை கொல்லத் திரிந்தனர். ஒரு தடவை உயிர் தப்பியும் இருக்கின்றார். அண்மைக் காலமாக ஈழப்போரில் புலிகளின் தவிர்க்க வியலாத இடத்தை தான் ஏற்றுக் கொள்வதாக தனது பேட்டிகளில் கூறுகிறார்..

எண்பதுகளில் தமிழகத்தில் நடந்த ஈழத்தமிழர் கருத்தரங்குகளில் அவரைக் காண முடியும். காந்தியம் என்ற அமைப்பை வைத்து நடத்திக் கொண்டிருந்த அவர் அப்பொழுது காந்தியக் கொள்கைகளின் மேல் அதிக நாட்டம் கொண்டிருந்தார். இந்தியாவின் உதவியுடன் அமைதியான வழியில் சுதந்திரத்தையோ அல்லது சுய நிர்ணய உரிமையையோ ஈழத்தமிழர் வென்றெடுக்க முடியும் அன்று நம்பினார்.
சென்னையிலிருந்து அரு. கோபாலன் நடத்தி வந்த எழுகதிர் என்ற இதழில் காந்திய வழியைப் பற்றித் தொடர் கட்டுரை எழுதி வந்தார். இந்திய இராணுவ நுழைவுக்குப் பின் அவர் காந்தியத்தைக் கைவிட்டாரா என்று தெரியாது. பின்னால் ஈ.வே.ஆனைமுத்து நடத்தி வந்த Periyar Era என்ற இதழில் வந்த இக்கட்டுரைகளில் காந்திய வழிமுறைகளில் நம்பிக்கையின்மை தெரிந்தது. ப்ளாட் போன்ற போராளி இயக்கங்கள் மற்றும் சந்திரகாசன் ஆகியோரின் மேல் அவருக்கு இருந்த ஏமாற்றத்தையும் படித்ததாக நினைவு.
அவர் மட்டுமல்லாமல் எண்ணற்ற ஈழத் தலைவர்களும், அகதிகளும் அவமானப் படுத்தப் படுமளவுக்கு போராளி இயக்கங்களைப் பற்றிய பொய்ப்பிரச்சாரங்கள் திட்டமிட்டு நடத்தப் பட்டது. இராஜீவ் காந்தி கொலை அதற்கு இன்னும் சாதகமாக அமைந்தது. ஆனால் உண்மையில் தமிழ் நாட்டில் சமூக விரோதச் செயல்களிலும், தெரு வன்முறைகளிலும் ஈடுபட்டு குற்றஞ்சாட்டப்பட்ட டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் இன்னும் இரத்தினக் கம்பள வரவேற்புடன் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்துப் பத்திரிகையின் ஒவ்வொரு விழாவிலும் அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கேட்டால் இலங்கை அரசில் மந்திரி என்பார்கள்.
நன்றி – சொ. சங்கரபாண்டி

வாசிக்கும்போது மிக வருத்தமாக இருந்தது சயந்தன். எல்லாம் சரியாக இருந்திருப்பின் இத்தகையோர் மதிக்கத்தகு இடங்களில் இருந்திருக்கக்கூடும். அகதி என்று அலைவதற்கு விதிக்கப்பட்டதன் பின் அவமானங்கள்தானே மிச்சம். பதினேழு ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வருபவர் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இவர் எங்கிருக்கிறார்… சந்திக்க முடியுமா என்று எனக்கு முடிந்தால் தனிமடலிடுங்கள். நன்றி.
He is writing on Periyar Era for last seven years.
எஸ். ஏ. டேவிட்
//புளொட்டிலிருந்து விலகிய பின்னர் அவர்கள் கூட இவரை கொல்லத் திரிந்தனர். ஒரு தடவை உயிர் தப்பியும் இருக்கின்றார்.//
ஆம். தனது நூலில் இதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார். உமாமகேஸ்வரனால் தான் தேடப்பட்டதாகவும் ஒரு முறை வாகனத்தில் கடத்திச் செல்லப்படுகையில் தனக்கு அறிமுகமான சாரதியினால் சென்னையில் வீடுதலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
//அண்மைக் காலமாக ஈழப்போரில் புலிகளின் தவிர்க்க வியலாத இடத்தை தான் ஏற்றுக் கொள்வதாக தனது பேட்டிகளில் கூறுகிறார்..//
விடுதலைப் புலிகளின் இராணுவப் பலத் தேவையை பல இடங்களில் சொல்கின்றார். புலத்தில் வசிக்கும் மக்கள் புலிகளைப் பொருளாதார ரீதியாகப் பலப் படுத்த வேண்டுமெனவும் எழுதகிறார்.ஈழத்தில் இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப் பட வேண்டுமெனவும் குறித்துள்ளார்.
Every Eelam tamil man or women from the age of 18 t 45 must take millitary training and be a member of the tamil eelam army ready to defend tamil eelam.
கட்டுரைக்கு நன்றி. ஒரு தகவலுக்காக.. மட்டக்களப்பிலிருந்து சிறையுடைத்தவர்களை தமிழகத்திற்கு பத்திரமாக அழைத்து வந்தவர்களில் மாமனிதர் சிவராமின் பங்கும் பிரதானமானது.
I included the link to David ayya’s photo in a previous comment. However it did not work out as I intened
http://bp1.blogger.com/_OBFBfYawg8g/RdPvwTSjtCI/AAAAAAAAAA0/NxbkpMFiM6A/s1600-h/cda1.jpg
நாவலர் பண்ணையை வைத்து நிர்வாகித்தவரும் இதே டேவிட் அவர்கள்தான்.
நாவலர் பண்ணை குறித்து வ.ந.கிரிதரன் எழுதியதை இங்கே சென்று வாசிக்கலாம்.
http://www.geotamil.com/pathivukal/Navalarfarm.html
I included the link to David ayya’s photo in a previous comment. However it did not work out as I intened
அந்த படத்தை இங்கே அழுத்தி பார்க்கவும்
சின்னக் குட்டியண்ணை சிரமம் பாராமல் உதவினதுக்கு நன்றி.. மற்றும் எல்லாருக்கும் நன்றி.. தமிழ்நதி தனிமடலில் தொடர்ப விபரங்கள் அனுப்பகிறேன்.
சயந்தன்!
வாசித்து விட்டுப் பேசாமற் போக முடியவில்லை. ஈழ விடுதலைப் போராட்டம் திசைமாறிப் பயணிக்க வைத்த பெருஞ் சூறைக் காற்றில் சின்னாபின்னாமாகிப் போன சிந்தனையாளர்களில் டேவிட் ஐயாவும் ஒருவர்…ம் எனும் பெருமூச்சொன்றே இன்றுவரை எஞ்சுகிறது..
இவரை போன்றவர்களை வாழவைக்க புலம்பெயர்ந்த புடுங்கிகள் என்னா பண்ணினார்கள். நொட்டை சொல்ல மட்டும் வருதுங்கோ ஈன ஜென்மங்கோ
நண்பர்களே!
இக் குறிப்பை எழுதுவதா இல்லையான என பல தடவைகள் நினைத்தேன்…
எழுதுவது நல்லது என்பதால் எழுதுகின்றேன்….
முதலில் இவர் போன்றவர்களை இப்படியாவது நினைவு கூறுவது நல்லது….
அதற்கு நன்றிகள்….
மற்றுது இவ்வாறு அவரை நினைப்பதற்கான காரணம் என்ன என்பதுதான் இக் குறிப்பிற்கான எனது காரணம்….
இவர் புலிகளின் தவிர்க்கமுடியாத இருப்பை அவசியத்தை ஏற்றுக்கொண்டதா?
அல்லது தமிழ் பேசும் மனிதர்கள் அதாவது பதினாறு வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆயுதப்பயிற்சி பெறவேண்டும் எனக் கூறயதாலா?
நண்பர்களே இங்கு தான் எனது விமர்சனம் உள்ளது….
புலிகளும் புலி ஆதரவாளர்களும் மற்றும் புலி எதிர்ப்பாளர்களும்…
தமக்கு யார் சாதகமான கருத்துக்களை முன்வைக்கின்றனரோ….அவர்களை முதன்மைபடுத்துவர்….
தம்முடன் முரண்படுகின்றவர்களை எதிரிகள் அல்லது துரோகிகள் ஆக்கிவிடுவர்….
சிவராமும் துரோகியாக இருந்து மாமனிதரானவர்…..
இதேபோல் பல மனிதர்கள் மனிதர்களின் உண்மையான விடுதலையை நேசித்தவர்கள் பல இயக்கங்களிலிருந்து அதன் ஆதிகாரத்துவப் போக்கையும் மனித உரிமை மீறல்களையும் கண்டு பொறுக்கமுடியாமல் அதற்கு எதிராக ஒன்றும் செய்யமுடியாமல்…(கருணாவைப் போன்றவர்கள் அல்ல) அமைதியாக வாழ்கின்றனர்….இவர்கள் புலிகளின் செயற்பாடுகளுக்கும் கருத்துக்களுக்கும் எதிரானவர்கள் என்பதால் துரோகிகள் என்ற பட்டங்களுடன் வாழ்கின்றனர்…
டேவிட் ஐயா அவர்களை மதிக்கும் அதேNவைள அவருடைய புலிகள் மற்றும் ஆயுத பயிற்சி தொடர்பான கருத்துக்களுடன் உடன்படமுடியாது என்பதை கூறவிரும்பகின்றேன்….
இவ்வாறு ஒருவரை மதிப்பது வேறு அவருடன் முரண்படுவது என்பது வேறு….அனைத்து மனித நலன் சார்ந்தாக இருக்கவேண்டும்…..துரதிர்ஸ்டவசமாக இவ்வாறான ஒரு கலாசாரம் நம்மிடையே இல்லை என்பது மனவருத்தத்திறிகுரியது…
நன்றி
மீராபராதி
1980ம் ஆண்டு காந்திய அமைப்பின் தொடர்பு எங்களுக்கு கிடைத்தது. காந்திய வழிப்பட்ட சிந்தனைகள் மீது அப்போது எங்களுக்கு அவ்வளவு மரியாதை கிடையாது. எனினும் டேவிட் ஐயாவின் வழிகாட்டலில் செயல்பட்ட காந்திய அமைப்பினரின் செயல்பாடுகளும், வேலைத் திட்டங்களும், மலையக மக்கள் மீது குறிப்பாக அவர்களின் கல்வி, சமூக ,பொருளாதார மேம்பாடுகளில் கொண்டிருந்த அக்கறை எம்மை அதன்பால் ஈர்த்தது. அதனோடு இணைந்து செயல்படத் தொடங்கினோம்……: //துடைப்பான்.
http://inioru.com/?p=3812
Hi
kindly help me to find his book. I would be really happy to read his insights.
Elil
அண்ணா நகர் கம்பர் குடியிருப்பு பகுதியில் டேவிட் அய்யா அவர்கள் வசித்து வந்த பொழுது அவரை சந்தித்திருக்கிறேன் பிரமித்திருக்கிறேன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் இவர் தலைமையிலேயே வடிவமைக்கப்பட்டது என்பதும் பெருமைக்குரியது, அவர் ஒரு பத்துக்கு பத்து அறையில் அடைபட்டுக்கிடந்த காலம் மிகவும் வருத்தத்துக்குரியது, இயக்கங்களின் தலைமைகளினால் சிறுமைப்படுத்த பட்டிருந்தாலும் எல்லா இயக்கங்களில் இருந்து நிராயுதபாணிகளாக தெருக்களில் அலைந்த அனைத்து போராளிகளாலும் போற்றப்பட்டார் என்பதே உண்மை. டேவிட் அய்யா காலமாகிவிட்டதாக தோழர் லீமா தொலைபேசியில் ஒரு நாடு இரவில் சொன்னார் உண்மை பொய் தெரியாது, தோழர் குடித்திருந்தார், டேவிட் அய்யா கூட மரணிக்கும் மெலிந்து தருவாயில் இருந்தார்..!!
டேவிட் ஐயாவை நான் நேரடியாகச் சந்திக்கா விட்டாலும் அவரைச் சந்திக்க காத்திருந்தோம் ..ஆரமபத்தில் சில வகுப்புக்கள் காந்தியத்தினூடாக , டாக்டர் ராயசுந்தர்ம் , டேவிட் ஐயா , சந்ததியார் பொண்றொர் எடுத்தார்கள் புளட் இயக்கத்திற்கு .. சந்ததியார் டேவிட் ஐயாவின் வகுப்பு அடுத்த நாள் நடை பெற இருந்தது …டாக்டரும் டேவிட் ஐயாவும் கைது செய்யப் பட்டவுடன் வகுப்புக்கள் நிற்பாட்டப் பட்டு சந்ததியாரும் , உடன்டியாக வகுப்புக்களை நிற்பாட்டச் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறி விட்டார்.. டேவிட் ஐயா நினைத்திருந்தால் மிகவும் செல்வந்தராக வாழ்ந்திருக்க முடியும் …
அப்படியாக தன் வாழ்நாளை இயக்கத்திற்காக அற்பணித்தவ்ர் , சத்ந்தியார் புளட்டில் இருந்து பிரிந்த கால கட்டங்களில் இயக்கத்தை விட்டு வெளியேறினார் … அவரை நான் ஒருக்காலுலம் சந்திக்காவிட்டாலும் எல்லோரும் மறந்து விட்டோம் ..மிகவும் கவலையாக உள்ளது அவரது அரசியல் கருத்து மார்க்சீயக் கண்ணோட்டமாக இல்லாவிட்டாலும் நேர்மையானவராக , இடதுசாரிகளுடன் இணைந்து செயற்பட்டார் ..சந்ததியாருடன் இணைந்து இருந்தார்… என்றும் மறக்க முடியாத ஒரு மாமனிதர் …நான் சந்ததியாரையும் சந்திக்கவில்லை.. அன்று இரவு அங்கு வந்து போனார் ஆனால் சந்ததியார் என்று தெரியாது….இந்த வகுப்பை நடாத்திய கட்டை சேவியர் என்னும் Father Xavior புலிகளின் பாடசாலைகளுக்கு உளவியல் வகுப்பெடுத்தார் 2 வருடத்தின் முன் …
டேவிட் ஐயா இப்போது அண்ணா நகரில்தான் இருக்கிறார். periyar era வில் எழுதிக் கொண்டு இருக்கிறார். நேரடியாக நான் பார்க்கவில்லை.வயதின் காரணமாக மிகவும் தளர்ந்து போயுள்ளதாக பார்த்தவர்கள் சொன்னார்கள்.
kindly help me to find his book.