ஐரோப்பாவின் உயரத்தில்

Jungfraujoch!

தமிழில் இந்த ஜேர்மன் வார்த்தையை எப்படி சரியாக உச்சரிப்பது என்று தெரியவில்லை. எனினும் கிட்டத்தட்ட அது ஜுன்ப்றோ என்னும் வார்த்தைக்கு நெருக்கமுள்ளதாக இருக்கலாம்.

இது போலவே Bahnhof என்னும் தொடரூந்து நிலையத்தினை குறிக்கும் ஜேர்மன் வார்த்தை, வாணப்பு என, யாரோ ஒரு அப்புவின் பெயரைச் சொல்வது போலவும் Sankt Gallen என்கிற இடத்தின் பெயர் செங்காலன் (யாரோ கரிகாலனின் தம்பி என்பது போல) என்றும் தான் எனக்கு அறிமுகமான சிலதிற் சிலவான ஜேர்மன் வார்த்தைகள் அறிமுகமாயின.

மீண்டும் jungfraujoch

சுவிற்செர்லான்டில் இருக்கிறது ஐரோப்பாவின் உயரமாகிய இந்த வெள்ளிப் பனிமலை! அதன் உச்சியில் நிற்கின்ற போது உடலும் மனசும் சேர்ந்து இளகிப்போகின்றது.

ஐரோப்பிய குளிர் நாடுகளிலும் வெயில் இப்படி வெட்டி எறிக்கும் என உணர்த்திய ஒரு summer காலத்தில் நான் jungfraujoch போனேன்.


Image hosted by Photobucket.com

குறித்த ஓர் இடம் வரை சாதாரண தொடரூந்தில் பயணித்து பின்னர் விசேடமான தொடரூந்துகள் மூலம் பயணம் தொடர்ந்தது.

மலைகளை சுற்றி சுற்றி ஏறாமல் அவற்றினை உள்ளாக ஊடறுத்து செல்லும் தொடரூந்தின் சில்லுகள் கூடிய உராய்விற்காக பற்சில்லுகளாக அமைக்கப்பட்டிருந்தன.

அவ்வப்போது வண்டியை நிறுத்தி மலையின் உள்ளிருந்து வெளியே பார்க்க விடுகிறார்கள்.

எங்கெங்கு நோக்கினும் வெண்பனி மலைகள் தான்!

பயணத்தின் போதே வண்டி செல்லும் பாதை அமைக்கப்பட்ட வரலாற்றினை ஒளிப்படமாக காட்டுகிறார்கள்.

முடிவில் உள்ளாக வந்து வெளியே தலைகாட்டுகிறது தொடரூந்து.
பனிச்சறுக்கு, பார்வையிடும் இடங்கள் என பொழுது போக்கு மையங்களோடு விரிந்தது அந்தப் பனிப்பாலை வனம்!

பனிமாளிகை என்னும் ஓர் இடம்!

பனிக்கட்டியில் செதுக்கப்பட்ட உருவங்களை வைத்துப் பேணுகிறார்கள் அங்கு! நடந்து செல்லும் பாதை கூட பனிப் பளுங்கில் தான் இருந்தது.


Image hosted by Photobucket.com

அந்த இடத்திற்கு வந்து போனதாய் சான்றிதழ் கூட தருகிறார்கள். ஆனால் காசு!

ஏதோ புது உலகில் நிற்பது போன்ற உணர்வு அங்கு நின்ற ஒவ்வொரு கணமும் இருந்தது.

14 Comments

  1. எழுதிக்கொள்வது: முத்து

    சயந்தன்,
    படங்கள் மிக அருமை.
    Jungfraujoch – யுங்ஃப்ரவ்யோஹ்
    Bahnhof – பானாஃப் – Main Railway Station

    21.49 17.3.2005

  2. எழுதிக்கொள்வது: முத்து

    சயந்தன்,
    படங்கள் மிக அருமை.
    Jungfraujoch – யுங்ஃப்ரவ்யோஹ்
    Bahnhof – பானாஃப் – Main Railway Station

    21.49 17.3.2005

  3. சயந்தன்,
    படங்கள் மிக அருமை.
    Jungfraujoch – யுங்ஃப்ரவ்யோஹ்
    Bahnhof – பானாஃப் – Main Railway Station

  4. சயந்தன்,
    படங்கள் மிக அருமை.
    Jungfraujoch – யுங்ஃப்ரவ்யோஹ்
    Bahnhof – பானாஃப் – Main Railway Station

  5. எழுதிக்கொள்வது: வசந்தன்

    ச்சூ… நல்லாயிருக்கு.
    வசந்தன்

    10.22 18.3.2005

  6. எழுதிக்கொள்வது: வசந்தன்

    ச்சூ… நல்லாயிருக்கு.
    வசந்தன்

    10.22 18.3.2005

  7. எழுதிக்கொள்வது: Thadcha

    என்ன சயந்தன் பயணக் கட்டுரைகள் எழுத தொடங்கியாச்சா? வாழ்த்துக்கள்

    14.35 18.3.2005

  8. எழுதிக்கொள்வது: Thadcha

    என்ன சயந்தன் பயணக் கட்டுரைகள் எழுத தொடங்கியாச்சா? வாழ்த்துக்கள்

    14.35 18.3.2005

  9. எழுதிக்கொள்வது: அல்வாசிட்டி.விஜய்

    அருமையான படங்கள். நன்றி சயந்தன்

    11.45 18.3.2005

  10. எழுதிக்கொள்வது: அல்வாசிட்டி.விஜய்

    அருமையான படங்கள். நன்றி சயந்தன்

    11.45 18.3.2005

  11. சயந்தன்
    யேர்மனியச் சொற்கள் பல எமது தமிழ்ச்சொற்களோடு ஒற்றுமைப் படுவதைக் கண்டிருக்கிறேன்.
    உதாரணமாக
    எங்கள் பாட்டாக்காள் தோளில் போட்டது – சால்வை
    இங்கு குளிருக்கு கழுத்தில் சுற்றுவது – ஷால்

    ஊருலா – Urlaub
    இப்படிப் பல.

    படங்கள் நன்றாயுள்ளன.

  12. சயந்தன்
    யேர்மனியச் சொற்கள் பல எமது தமிழ்ச்சொற்களோடு ஒற்றுமைப் படுவதைக் கண்டிருக்கிறேன்.
    உதாரணமாக
    எங்கள் பாட்டாக்காள் தோளில் போட்டது – சால்வை
    இங்கு குளிருக்கு கழுத்தில் சுற்றுவது – ஷால்

    ஊருலா – Urlaub
    இப்படிப் பல.

    படங்கள் நன்றாயுள்ளன.

  13. எழுதிக்கொள்வது: தர்சினி

    கொசுறு தகவல்: Jungfraujoch என்றால் தமிழில் கன்னி! இப்படி ஒரு ராசியும் இருக்கிறது. – நன்றி

    9.15 19.3.2005

  14. எழுதிக்கொள்வது: தர்சினி

    கொசுறு தகவல்: Jungfraujoch என்றால் தமிழில் கன்னி! இப்படி ஒரு ராசியும் இருக்கிறது. – நன்றி

    9.15 19.3.2005

Comments are closed.