மூன்றாவது ஈழப்போரின் பத்தாண்டுகள்

சித்திரை பத்தொன்பது! மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்து 10 வருடங்களாகிறது.

1995 சித்திரை பத்தொன்பதாம் திகதி திருகோணமலைத் துறைமுகத்தில் கரும்புலித் தாக்குதல் மூலம் ரணசுறு, சூரயா என்ற இரண்டு கப்பல்கள் தகர்க்கப்படுவதோடு மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகிறது.

94 இன் இறுதியில் ஆட்சிக்கு வந்த சந்திரிகா இரண்டாம் கட்ட ஈழப்போரை நிறுத்தி சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும் வரை எல்லாம் சரியாகத் தான் இருந்தது.

ஆனால் பேச்சுவார்த்தையின் நகர்வினூடே அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படத்தொடங்கியது.

யாழ்ப்பாணத்தில் வந்து இறங்கிய ஹெலிகளில் எந்த விதமான அதிகாரங்களுமற்ற பிரமுகர்கள் வந்து இறங்கினார்கள். பேச்சுவார்த்தைகளின் முடிவில் முடிவெதனையும் எடுக்க முடியாதவர்களாக, அனைத்தையும் அரச தலைமைக்கு அறிவிக்கிறோம் என ஏறிச் சென்றார்கள்.

மீண்டும் வந்தார்கள். மீண்டும் சென்றார்கள். பேச்சு வார்த்தை என்ற பெயரில் இந்தக் கூத்து தொடர்ந்தது.

பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போதும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் அப்படியே தான் இருந்தன. யாழ்ப்பாணத்திற்கான பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை முழுவதுமாக நீக்கப்படாமல் அப்படியே தான் இருந்தது. இன்னமும் ஆபத்து நிறைந்த கிளாலி கடனீரேரியூடாகத் தான் மக்கள் பயணம் செய்தனர்.

இவ்வாறான மக்களின் அடிப்படை பிரச்சனைகளே முதலில் தீர்க்கப்பட வேண்டியவை என புலிகள் தரப்பு வற்புறுத்திய போதும் அரசு அதனை அசட்டை செய்தது.

பொருளாதார தடைகளை நீக்கி, மக்களின் பயணத்திற்கு ஏதுவாக பூநகரி இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினரை சற்று பின்னகர்த்துமாறு புலிகள் கோரிக்கை முன்வைத்தனர்.(இந்த இராணுவ முகாமை யுத்தம் தொடங்கிய பின்னர் தாமாகவே ராணுவத்தினர் கைவிட்டு சென்று விட்டனர்.)

அரசு அதனை நிராகரித்தது. பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதாக புலிகள் அறிவிக்க மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.

மூன்றாம் கட்ட ஈழப்போரின் ஆரம்பத்தில் தமிழர்கள் சந்தித்த இழப்புக்கள் அதிகமானவை. ஒரு இரவில் 5 லட்சம் மக்கள் தம் வேரிலிருந்து பிடுங்கியெறியப்பட்டது இக்காலத்தில்த் தான்.

இராணுவ படையெடுப்புகளுக்கும், குண்டு வீச்சுக்களுக்கும் அஞ்சி இருக்க இடம் இல்லாமல் வீதிகளிலும், மரநிழல்களிலும், கோயில்களிலும், காடுகளிலும் அவர்கள் தஞ்சம் புகுந்திருந்தமை இக்காலத்தில்த்தான்.

அதே வேளை யாழ்ப்பாண இழப்பு உட்பட ஆரம்ப பின்னடைவுகளிற்கு பின்னர் போரியல் உலகம் வியக்கும் தொடர் வெற்றிகளை புலிகள் பெற்றுக் கொண்டதும் இக்காலத்தில் தான்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக தொடர் சண்டையில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணத்திற்கான பாதை திறக்கும் யுத்தம் என்ற பெயரில் தமிழர் வாழ்விடங்களை அழித்து முன்னேறியிருந்த இராணுவத்தினரை (தெற்காசியாவில் அண்மைக்காலங்களில் அதிக நாள் நடந்த சண்டை அது) இரண்டு நாட்களில் விரட்டி அடித்து அவர்களது பழைய நிலைக்கு அனுப்பிய அதியுச்ச வியப்புச் சமர் இக்காலகட்டத்தில் தான் நிகழ்ந்தது.

ஆனையிறவென்கின்ற யாராலும் அசைக்க முடியாதென அமெரிக்க ராணுவ தளபதிகளே சொன்ன நிலத்தை வென்றெடுத்ததும் இதே ஈழப்போரில்த்தான்.

புலிகளைப் பொறுத்தவரை தமது இராணுவ கட்டமைப்பிலும் பல உயரங்களை இக்காலத்தில் தொட்டிருக்கிறார்கள்.

விமான எதிர்ப்பு பீரங்கி படையணி என்னும் கட்டமைப்பின் ஊடாக ஏவுகணைப் பயன்பாட்டினை புலிகள் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். அப்பாவி மக்களின் அழிவுக்கும் புலிகளின் இழப்புக்களுக்கும் காரணமாயிருந்த விமான குண்டு வீச்சுக்கள் ஓரளவுக்கு தடுக்கப்பட்டன. அதன் பின்னரே ஈழ வான் பரப்பில் சிங்கள அரச விமானங்களின் பறப்புக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.

96 இல் முல்லைத் தீவு ராணுவ முகாம் தாக்குதலோடு நீண்ட தூர எறிகணைகளான ஆட்லறிகளை கைப்பற்றியதன் ஊடாக இன்னொரு படிநிலையில் கால் பதித்தார்கள்.

இன்றைக்கு அரச மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகின்ற விமானப்படை தோற்றமும் இதே காலத்தில் தான் நிகழ்ந்தது. (நேற்றும் கிளாலி கடற்பரப்புக்கு மேலாக விமானமொன்று வன்னிப்பகுதிக்கு சென்று மறைந்ததாக இராணுவ தரப்பு சொல்கிறது.)

மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பிக்க முன்பு சந்திரிகா அரசு என்ன செய்ததோ அதனையே இப்பொழுதும் செய்கிறது. அதே இழுத்தடிப்பு.. அதே காலங்கடத்தல்..

ஆனால் புறச் சூழ்நிலை மாறியிருக்கிறது. இப்பொழுது உலக நாடுகளிடம் புலிகள் தொடர்பான நன்மதிப்பும், வரவேற்பும் கிடைத்திருக்கிறது. அதனை மிகச் சரியாக புலிகளும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

புலிகளைச் சீண்டி யுத்தத்திற்குள் இழுக்க திட்டமிட்டே அரச இராணுவம் முயல்கின்ற போதும் பொறுமை காக்கின்ற புலிகளின் இயல்பு ஆச்சரியமளிக்கிறது. தமது அரசியல் விவேகத்தினை மிகத் திறம்பட புலிகள் வெளியுணர்த்துகின்றனர்.

வெளிப்படையாகவே என்ன செய்வது, ஏது செய்வது எனத் தெரியாது முழிக்கும் அரச கபடத்தை தோலுரித்து உலகெங்கும் புலிகள் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இனி….

யுத்தம் ஒன்றை யாருமே விரும்பவில்லை. யுத்தம் செய்பவர்கள், யுத்தத்தின் விளைவுகளை அனுபவித்தவர்கள் என எவருமே விரும்பவில்லை. ஒரு வேளை யுத்தமொன்றே யதார்த்த நிலையிலும் சரியான தீர்வாக இருக்குமென்ற நிலை வரின்…

அவ்வாறான யுத்தம் ஒன்றைத் தொடங்கச் சொல்வதற்கான முழு உரிமையும் யுத்தம் செய்பவர்களுக்கும், அதன் விளைவுகளை அனுபவிக்கப் போகின்ற மக்களுக்குமே உண்டு!

மாறாக தனிமனித வாழ்நிலை மேம்படுத்தலுக்காக தேசங்கள் தாண்டி வந்து, விருப்பப்பட்டும், விரும்பாமலும் மாசாமாசம் காசு கொடுத்து விட்டு அங்கே என்னவாம் நடக்குது என செய்திகளில் தேடி.. உதுக்கு சண்டையை தொடங்கிறது தான் சரியான வழி எனச் சொல்கின்றவர்களுக்கு அதைச் சொல்ல எந்த உரிமையும் கொஞ்சமேனும் இல்லை.

24 Comments

  1. எழுதிக்கொள்வது: sivamathy

    சரியாகச் சொன்னீர்கள் சயந்தன். அந்த மக்களின் வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். நானும் அந்தக் காலப்பகுதியை அங்கு கழித்தவன்தான். அந்த மக்களின் அவலத்தை முழுமையாக அறிந்தவன்தான். அவர்களின் முடிவுதான் நிச்சயமாகத் தலைவரின் முடிவாகவும் இருக்கும்.

    7.58 18.4.2005

  2. எழுதிக்கொள்வது: sivamathy

    சரியாகச் சொன்னீர்கள் சயந்தன். அந்த மக்களின் வாழ்வாதாரங்கள் கட்டியெழுப்பப்பட வேண்டும். நானும் அந்தக் காலப்பகுதியை அங்கு கழித்தவன்தான். அந்த மக்களின் அவலத்தை முழுமையாக அறிந்தவன்தான். அவர்களின் முடிவுதான் நிச்சயமாகத் தலைவரின் முடிவாகவும் இருக்கும்.

    7.58 18.4.2005

  3. //உதுக்கு சண்டையை தொடங்கிறது தான் சரியான வழி எனச் சொல்கின்றவர்களுக்கு அதைச் சொல்ல எந்த உரிமையும் கொஞ்சமேனும் இல்லை.//

    இதை சொல்லுறதுக்கும் உனக்கும் உரிமை இல்லையடா மடையா

  4. //உதுக்கு சண்டையை தொடங்கிறது தான் சரியான வழி எனச் சொல்கின்றவர்களுக்கு அதைச் சொல்ல எந்த உரிமையும் கொஞ்சமேனும் இல்லை.//

    இதை சொல்லுறதுக்கும் உனக்கும் உரிமை இல்லையடா மடையா

  5. எழுதிக்கொள்வது: Kulakaddan

    .//(இந்த இராணுவ முகாமை யுத்தம் தொடங்கிய பின்னர் தாமாகவே ராணுவத்தினர் கைவிட்டு சென்று விட்டனர்.)//

    இது அபத்தமா தெரியலையா………தவளைப்பாச்சல்தாக்குதலில் பல போராளிகள் வீரசாவடைந்து கைப்பற்றியது பூனகரி மூகாம் சயந்தன் . ஆமா அப்ப எங்க இருந்கீங்க…………

    11.28 18.4.2005

  6. எழுதிக்கொள்வது: Kulakaddan

    .//(இந்த இராணுவ முகாமை யுத்தம் தொடங்கிய பின்னர் தாமாகவே ராணுவத்தினர் கைவிட்டு சென்று விட்டனர்.)//

    இது அபத்தமா தெரியலையா………தவளைப்பாச்சல்தாக்குதலில் பல போராளிகள் வீரசாவடைந்து கைப்பற்றியது பூனகரி மூகாம் சயந்தன் . ஆமா அப்ப எங்க இருந்கீங்க…………

    11.28 18.4.2005

  7. இல்லைக் குளக்காட்டன்.. தவளைப் பாய்ச்சலில் இராணுவ முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டது. இராணுவ தளபாடங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் பெருமளவில் குறுக்கப்பட்டது.

    ஆயினும் தாக்கியழித்துத் திரும்புதல் முறையிலேயே இந்த தாக்கதல் நிகழ்ந்தது.

    பின்னர் 96 இல் புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாகவோ அல்லது வேறெந்த காரணத்திற்காகவோ இராணுவத்தினர் முற்றாக அந்த முகாமை கைவிட்டு சென்றனர்.

    இது பற்றி திகதி வாரியாக சொல்லக் கூடிய வசந்தனிடம் கேட்கிறேன். நன்றி

  8. இல்லைக் குளக்காட்டன்.. தவளைப் பாய்ச்சலில் இராணுவ முகாம் முற்றாக தாக்கியழிக்கப்பட்டது. இராணுவ தளபாடங்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசம் பெருமளவில் குறுக்கப்பட்டது.

    ஆயினும் தாக்கியழித்துத் திரும்புதல் முறையிலேயே இந்த தாக்கதல் நிகழ்ந்தது.

    பின்னர் 96 இல் புலிகளின் தாக்குதல் அச்சம் காரணமாகவோ அல்லது வேறெந்த காரணத்திற்காகவோ இராணுவத்தினர் முற்றாக அந்த முகாமை கைவிட்டு சென்றனர்.

    இது பற்றி திகதி வாரியாக சொல்லக் கூடிய வசந்தனிடம் கேட்கிறேன். நன்றி

  9. ஓமோம் குளக்காட்டான்!
    தவளைத்தாக்குதல் 1993 கார்த்திகையில் நடந்தது. ஆனால் சமர் முடிந்ததும் அணிகளனைத்தும் பின்வாங்கிவிட்டன. (ஒரு ரி.55 ரக டாங்கி கைப்பற்றப்பட்டது முக்கியமானது.)
    1996 இறுதிப்பகுதிவரை இராணுவமே அப்பகுதியைத் தக்கவைத்திருந்தது. 1996 இல் முல்லைத்தீவு மீதான ஓயாத அலைகள் ஒன்று வெற்றியைத் தொடர்ந்து கிளிநொச்சியைக் கைப்பற்ற சத்ஜெய என்ற பெயரில் நடவடிக்கையை 3 கட்டங்களாக நடத்தி கிளிநொச்சியைக் கைப்பற்றியது இராணுவம். ஆனால் கைப்பற்றிய கையோடு பூநகரியை விட்டு தாமாகவே இராணுவத்தினர் பின்வாங்கி விட்டனர். இது நடந்தது 1996 ஒக்டோபர் மாதம். (அடுத்த மாவீரர் நாளுக்கான தாக்குதல் பூநகரி மீதுதான் என்று தகவல் அறிந்ததாலேயே பின்வாங்கினர் என்று சிலர் சொல்லக் கேள்வி.)

    பின் 1998இல் மன்னாரையும் பூநகரியையும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது (இதுவும் முறியடிக்கப்பட்டது) பூநகரி படைத்தள பின்வாங்கல் ஒரு முட்டாள்தனமான வேலையென பல ஆய்வாளர்களால் கூறப்பட்டது.

  10. ஓமோம் குளக்காட்டான்!

  11. மன்னாரிலிருந்து பூநகரிக்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பெயர் ரணகோச 1,2…
    முதல் பின்னூட்டத்தில் இதை எழுத மறந்துவிட்டேன்.

  12. மன்னாரிலிருந்து பூநகரிக்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பெயர் ரணகோச 1,2…
    முதல் பின்னூட்டத்தில் இதை எழுத மறந்துவிட்டேன்.

  13. வசந்தன் சொல்வது சரி குளக்காட்டான். 93 இல் பூநகரி இராணுவத் தளம் முழுதுமாக கைப்பற்றப்பட்டிருந்தால் 95 வரை கிளாலியை பயணத்திற்கு பயன்படுத்த வேண்டிய தேவை இருந்திருக்காதே.. கேரதீவு பூநகரி பாதையை பயன்படுத்தியிருக்கலாமே..

  14. வசந்தன் சொல்வது சரி குளக்காட்டான். 93 இல் பூநகரி இராணுவத் தளம் முழுதுமாக கைப்பற்றப்பட்டிருந்தால் 95 வரை கிளாலியை பயணத்திற்கு பயன்படுத்த வேண்டிய தேவை இருந்திருக்காதே.. கேரதீவு பூநகரி பாதையை பயன்படுத்தியிருக்கலாமே..

  15. pois a malta até te lia se percebesse um cu do q tas a escrver mas continua pq és grande pah

    beijos

  16. pois a malta até te lia se percebesse um cu do q tas a escrver mas continua pq és grande pah

    beijos

  17. எழுதிக்கொள்வது: http://uyirvaasam.blogspot.com

    3வது ஈழப்போரின் பத்தாண்டுகளை மீட்டியதற்கும் மீட்டலுக்கும் நன்றிகள் சயந்தன். இனி நான் எழுதப்போவதை விவாதமாக கருதாது உங்கள் மனச்சாட்டியைத் தொட்டுச்சொல்லுங்கள்.
    யுத்த நிறுத்தத்திற்குப்பின்னர் இன்றுவரையும் போருக்கு வாழ்ந்த மக்களின் வாழ்வில் எந்த நன்மையை பெற்றிருக்கிறார்கள் ?

    போரைத்துவங்கச் சொல்ல உங்களுக்கும் உரிமையில்லை எனக்கும் உரிமையில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உங்களது பங்கு என்ன என்பதையாவது சொல்ல மறந்தது ஏன் ?

    தமது சுகவாழ்வுக்காக எல்லோரும் புலம்பெயர்ந்துவிட்டார்கள் ஆகவே யாருக்கும் எதையும் செர்லவும் உரிமையில்லை. ஆனால் உங்கள் தந்தையார் புலம்பெராது ஊருக்குள்ளிருந்திருந்தால் உங்களது இன்றைய வாழ்வு இந்த ஆரூடக்கட்டுரையை எழுத வைத்திருக்குமா ?

    அந்த மண்ணுக்குள் போருக்குள் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் வாழ்வுக்கான ஆதாரங்களாக 90சதவிகிதமான புலம்பெயர்ந்தோர் கரைகிறார்கள் ää கரைந்தார்கள் தெரியுமா அல்லது அறிந்தீர்களா ?

    இந்த மண்ணில் வாழும் யாராவது சுகமாக வாழ்கிறார்கள் என்று எப்படி அவ்வளவு இலகுவாய் செர்hமல் செர்லிவிடும் தகுதியைப்பெற்றீர்கள் ? சொல்ல முடிந்தது ?

    யுத்தம் என்பதை யாருமே விரும்பவில்லை அதை எந்த மனிதனும் விரும்பி ஏற்பதும் இல்லை. ஆனால் அது திணிக்கப்படுகிற போது அதை எதிர்கொள்ளும் வ்லமையைத்தான் தற்போதைய நமது தாயகம் எதிர்கொள்கிறது. அதற்கான எதிர்காலத்தேவையையே கருத்தில் எடுக்கிறது.

    காலக்கிரமத்தில் சம்பவங்களை அடுக்கிவிடுவதால் கடந்தவையும் ää காலத்தின் தேவையும் மறைக்கப்படமாட்டாது.

    பிற்குறிப்பு-
    இது எனது கருத்து மட்டுமே. எதையும் யாரும் சொல்ல உரிமையுள்ளதோ. அதேபோல் என்மனதில் பட்டதை எழுதியுள்ளேன். சயந்தன். உங்கள் பதிலையும் எதிர்பார்த்து.

    தற்போதை தேவை கட்சி பிரித்து கூட்டணி பிரித்து முன்பு எதிரி இப்போதும் எதிரி என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தும் சாதுரியமான எழுத்துக்களை விட எல்லோரையும் எப்படி இணைக்கலாம் என்பதற்கான வழிமுறைகளை சொல்வது இக்காலத்திற்குப் பொருத்தமாகும். தற்போதைய தேவை அல்லது புலம்பெயர்ந்தோர் சேவையாக செய்யக்கூடியது. பிரித்தல்களைவிட இணைப்புக்கான தீர்வையே.

    இன்னொரு விடயம் சயந்தனுக்கு !
    எழுத்தாளர் சாந்தன் ää ஊர்முற்றத்துக்கவி புதுவை இருவரும் அன்றொருநாள் ஆவேசப்பெருக்கால் எழுதிவைத்துவிட்ட வார்த்தைகள் இன்றும் புலம்பெயர்ந்தோர் பலரிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவர்களிடமே விசாரித்து அறியும் வல்லமையுள்ளவர் நீங்கள். ஆகவே அதையும் ஒருதரம் ஞாபகப்படுதலாக இங்கு சொல்கிறேன்.

    தனிமனித மேம்படுத்தலுக்காக 2000த்திற்கு பிற்பட்ட காலத்திNயே இலகுவாய் கொழும்பில் ஏறி ஒஸ்ரேலியா கனடா ஐரோப்பா என பறக்க முடிகிறது. அதற்கு முன்னர் இத்தாலிக்கடலிலும் போலந்து பனிக்குள்ளும் எகிப்திய சிறைகளிலும் அடைபட்டு துயர்பட்டவர்களுக்கே நீங்கள் சொல்லும் தனிமனித மேம்பாடு என்பதன் தார்ப்பரியம் விளங்கும்.

    ஆகவே அவதானமாக இனிமேல் தமிழரும் தமிழர் தேசமும் தாழ்த்தப்படாத உங்கள் அரசியல் ஆய்வுகளை தாருங்கள். அதை வரவேற்பது நானும்தான்.

    அன்புடன் சாந்தி (கருத்தை கருத்தால் வெல்வோம்)

    8.34 26.4.2005

  18. எழுதிக்கொள்வது: http://uyirvaasam.blogspot.com

  19. //ஊர்முற்றத்துக்கவி புதுவை இருவரும் அன்றொருநாள் ஆவேசப்பெருக்கால் எழுதிவைத்துவிட்ட வார்த்தைகள் இன்றும் புலம்பெயர்ந்தோர் பலரிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவர்களிடமே விசாரித்து அறியும் வல்லமையுள்ளவர் நீங்கள்//

    அது என்ன வல்லமை? ஓஹோ..சயந்தனுக்கு Character build-up கொடுக்கிறீங்களா சாந்தி? நடக்கட்டும் நடக்கட்டும்.

  20. //ஊர்முற்றத்துக்கவி புதுவை இருவரும் அன்றொருநாள் ஆவேசப்பெருக்கால் எழுதிவைத்துவிட்ட வார்த்தைகள் இன்றும் புலம்பெயர்ந்தோர் பலரிடம் ஏற்படுத்திய தாக்கத்தை அவர்களிடமே விசாரித்து அறியும் வல்லமையுள்ளவர் நீங்கள்//

    அது என்ன வல்லமை? ஓஹோ..சயந்தனுக்கு Character build-up கொடுக்கிறீங்களா சாந்தி? நடக்கட்டும் நடக்கட்டும்.

  21. எழுதிக்கொள்வது: shanthy

    தப்பாக விளங்கிவிடாதீர்கள் பலன் விரும்பி. அரசியல் ஆய்வாளர்களுக்கும் ஆரூடர்களுக்கும் அவர்களெல்லாம் நினைத்தவுடன் சந்திக்கக்கூடியவர்களல்லவா ?

    சுகவாழ்வு தேடி புலம்பெயர்ந்த அகதிகளுக்கு அந்தத்தகுதியெ;hம் கிடையாது அல்லவா அதுதான். வேறு பில்டப் ஒன்றுமில்லை.

    காலத்தின் தேவைகளை மறந்து ஏதோ எழுதினோம் ஏப்பப்புளிச்சலை வெளியெற்ற ஆய்வுகள் செய்தோமா என்றிருக்க முடியவில்லை. எனது கருத்தை சொல்லியுள்ளேன். அவ்வளவே.
    தான் எழுதிவிட்ட வார்த்தைகளுக்காக புதுவை ரீரீஎன் தொலைக்காட்சியில் அதற்கான விளக்கத்தையும் கேட்தாலேயே இதை எழுதினேன்.

    அன்புடன் சாந்தி (கருத்தை கருத்தால் வெல்வோம்)

    22.50 26.4.2005

  22. எழுதிக்கொள்வது: shanthy

  23. வணக்கம் சாந்திக்கா..
    //உங்கள் அரசியல் ஆய்வுகளை தாருங்கள்//

    இது அரசியல் ஆராய்ச்சியோ ஆய்வோ அல்ல. மூன்றாவது ஈழப்போர் ஆரம்பித்த பத்தாவது ஆண்டின் நிறைவில் அதன் நினைவுபடுத்தலும் அப்போது நடந்த சில சம்பவங்களின் கோர்வையும்.

    //யுத்த நிறுத்தத்திற்குப்பின்னர் இன்றுவரையும் போருக்கு வாழ்ந்த மக்களின் வாழ்வில் எந்த நன்மையை பெற்றிருக்கிறார்கள் //

    இன்னமும் சொந்த வீடுகளுக்கு கூட போக முடியாத நிலையில் இன்னமும் அகதி முகாம் வாழ்க்கையையே வாழ்கின்ற மக்கள் இருக்கிறார்கள். காலை இழுத்து இழுத்து நடக்கின்ற சமாதானத்தின் ஒரு பலனாக கோர குண்டு வீச்சுக்கள் எறிகணை வீச்சுக்கள் நின்று போனதை குறிப்பிடலாம்.

    //பாதிக்கப்பட்டவர்களுக்காக உங்களது பங்கு என்ன என்பதையாவது சொல்ல மறந்தது ஏன் //

    அது 97, 98 ஆண்டுகள். ஈழப்பகுதி குறிப்பாக வன்னி என்றுமில்லாத யுத்த மற்றும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து நின்றது. அந்த நிலையில் அது ஒரு றுவாண்டாவாக சோமாலியாவாக மாறாமல் அங்குள்ள சிறுவர்களும் குழந்தைகளும் பசியாற முடிந்ததென்றால் அதற்கு புலம் பெயர்ந்தவர்கள் மட்டும் தான் காரணம்.

    இனி..

    புலம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானாவர்கள் தம்முடைய வாழ்வு மேம்படுத்தல் என்கிற விமர்சனத்துக்கு உட்பட முடியா காரணத்திற்காகவே வந்தார்கள் என்பது உண்மை. (வாழ்வு மேம்படுத்தல் என்னும் போது தன்னுடைய குடும்பம் அக்கா தங்கைகளின் திருமணம் ஊரில் பட்ட கடன் அடைத்தல் என்னும் எல்லா காரணங்களும் அடங்கும். )

    என்னுடைய இறுதிக்கருத்துக்கு வருகிறேன்.

    யுத்தத்தின் கோரம் என்னவென்று எனக்கு தெரியும். (ஈழத்தில் பிறந்து வளர்ந்த எல்லோருக்கும் தெரியும்.)
    இன்று யுத்தத்தின் கொடும் விளைவுகள் எதுவும் வந்தடையாத ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு அங்கே யுத்தத்தினை தொடங்கு என எவரெல்லாம் கேட்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த அருகதை இல்லை.

    (பிற்குறிப்பு: பெடியளுக்கு மானம் ரோசம் இல்லையோ. பேசாமல் சண்டையை தொடங்கினாத்தான் அரசாங்கத்துக்கு உறைக்கும் என்று புலத்தில் கதைக்கின்ற போது யுத்தத்தின் பின்னர் அந்த மக்களின் மனக்கிலி இழப்புக்கள் என்பவற்றை ஏன் இவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை என்று நினைக்கின்ற போது ஏற்படுகின்ற கோபமே இப்படி ஏதாவது எழுத வைக்கின்றது. பின்னர் அவற்றை விளக்கி நீண்ட விமர்சனம் எழுத வைக்கிறது.

  24. வணக்கம் சாந்திக்கா..

Comments are closed.