All posts filed under “ஆதிரை

comment 0

ஒரு நிலப்பரப்பின் முப்பதாண்டுகால வரலாறு

சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாகக் கோத்தகிரியில் குழந்தைகள் நிகழ்விற்காகத் தங்கியிருந்த போது புத்தகம் ஒன்றை வாசிக்க எடுத்துத் துவங்கி, முதல் பத்தியினைப் படித்துவிட்டு இத்தனை வலிகள் மிகுந்த எழுத்துகளைத் தொடர்ந்து வாசித்தால் நிச்சயம் நிகழ்விழும் பயணத்திலும் ஈடுபாடுச் செலுத்திட முடியாது என்பதால் மூடி வைத்து விட்டுத் தொடவேயில்லை. பிறகு மீண்டும் சென்னை வந்த பிறகு எவ்வளவு விரைவாக முடித்திட வேண்டுமோ அவ்வளவு விரைவாக முடித்திட வேண்டும் என்கிற முனைப்பில் துவங்கினால் சில பக்கங்களைக் கடந்திட முடியாமல் அப்படியே போட்டுவிட்டு அழுதும் அமைதியாய் இருந்தும் உணர்வுகளைக் கடந்து மெதுமெதுவாய் இருதினங்களுக்கு முந்தைய நள்ளிரவில் முழுவதுமாக முடித்தேன் அந்த 664 பக்க நாவலை. ஏற்கனவே பலமுறை பலயிடங்களில் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கும் வார்த்தைகள் தான் என்றாலும் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டிய தேவை இருக்கிறது. “2௦ம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப்போர்கள் சார்ந்த இலக்கியங்கள் உலகளவில் பெரும் தாக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தின. அவற்றையெல்லாம் விட மிஞ்சி…

comment 0

ஜிஃப்ரி ஹாஸன்

ஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின் போராட்டமும் தமிழர் வாழ்வும் பற்றி பல நாவல்கள் வெளிவந்து விட்டன. ஷோபா சக்தியின் BOX கதைப்புத்தகம், குணா கவியழகனின் விடமேறிய கனவு, சாத்திரியின் ஆயுத எழுத்து, சயந்தனின் ஆதிரை போன்றன இந்தவகையில் குறிப்பிடத்தக்க நாவல்கள். ஆதிரை வடபுல சாமான்ய தமிழ்ச்சனங்களினது வாழ்வு ஈழப்போரால் எப்படிச் சிதைந்தது என்பதை மிக அழுத்தமாக தனிமனிதர்கள், குடும்பங்கள், கிராமங்கள் என ஆழமாக ஊடுறுவி சரளமான புனைவு மொழியில் எடுத்துக் கூறுகிறது.  மலையக மக்களினதும் ஒரு குறிப்பிட்ட காலகட்ட அவலம் சிதைந்த சித்திரமாக நாவலுக்குள் ஊடுறுவிச் செல்கிறது. வடபுல எழுத்தாளர்களின் ஈழப் போராட்ட நாவல்களில் போராட்டத் தீயின் கொடு நாக்கு எப்படி அப்பாவி மலையகச் சனங்களையும் தீண்டியது என்பதை மனச்சாட்சியோடு இந்நாவல்தான் பதிவு செய்கிறது. 1983 இனப்படுகொலையில் மலையகத் தமிழ் மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். அது பற்றி முழுமையாகப் பதிவுசெய்யும் ஒரு மலையக நாவலே தெளிவத்தை ஜோசப்பின் நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983. அதைத் தவிர்த்து இலங்கை…

comment 0

ஆதிரை – ஆதிலட்சுமி சிவகுமார்

1977 தொடக்கம் 2009 வரையான காலத்தை பேசும் ஒரு நாவல். விமர்சனம் அல்லது கருத்துரை என்பதற்கு அப்பால் சயந்தனின் இந்த ஆர்வம் அல்லது முயற்சியை வரவேற்பதுடன் பாராட்டியும் ஆகவேண்டிய கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன். மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் சயந்தன். படைப்பியற்றுறையில் சயந்தன் தனித்துவமான ஒரு கதைசொல்லியாக தன்னை அடையாளப்படுத்தியிருப்பதுடன், நிறுவியுமிருக்கின்றார். ஆதிரைக்கு முன்பதாகவே இதனை அவர் நிறுவியிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. நாடற்றஒருவன் சிறையில் அனுபவிக்கும் மிகக்கொடூரமான சித்திரவதைகளுடன் நாவல் ஆரம்பிக்கிறது. “லெட்சுமணன்” இனத்துவேசத்தால் கொல்லப்பட்ட, மற்றும் இன்னமும் சிறைகளில் வதைபடும் தமிழ் இளைஞர்களின் ஒரு குறியீடாகவே தெரிகிறான். மிகநீண்ட இடைவெளிக்கு பிறகு மலையக தமிழ்மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுகின்ற ஒரு படைப்பாகவும் ஆதிரை உள்ளது. கண்டுகொள்ளப்படுவதில் பின்தள்ளப்படுகின்ற மக்களைப்பற்றி பேசும் ஆற்றல் வரவேற்கத்தக்கது. தன்னுடைய நறுக்கென்ற உரையாடல்கள் மூலமாக படிப்பவர்கள்நெஞ்சில் ஆணிஅறைந்துவிடுகிறார் சயந்தன். உதாரணமாக, (பக்கம் 28, 29 ல்வரும் உரையாடல்) “யாருக்கு தனிநாடு கேக்கிறாங்க? “ “தமிழங்களுக்கு…

comment 0

புத்தா.. அல்லது ஆதிரையின் முதலாம் அத்தியாயம்

05 ஜூன் 1991 கரியிருட்டு. தொடையில் ஈரலித்துப் பின்னர் முதுகு நோக்கி ஊர்கின்ற ஈரம் என்னுடைய மூத்திரம் தானென்பதை  வலது கையினால் அளைந்து நான் உறுதி செய்தேன். இடது கையின் மணிக்கட்டுநரம்பை நசித்துக்கொண்டிருந்த விலங்கு, கூண்டின் இரும்புக் கம்பியோடு பிணைக்கப்பட்டிருக்க, முடிந்தவரை ஈரத்திலிருந்து உடலை நகர்த்த முயற்சித்தேன். குண்டும் குழியுமாய் சிதிலமான தரையில் கிளை பிரியும் தாரையென மூத்திரம் மற்றுமொரு பாதையில் என்னைத் தொட்டது. சற்றுமுன்னர் அளைந்த கையை வயிற்றில் தேய்த்துத் துடைத்துக்கொண்டேன். விரல்களில் பிடுங்கிய நகக் காயங்களிலிருந்து நோவு கிளர்ந்தது. நீரில் மெதுவாக முங்குவதைப்போல வியர்வையும் மூத்திரமும் கலந்த நாற்றத்தில் புலன்கள் இயல்படையலாயின. இருளை அளைந்தேன். இடது கண் ஒரு கொப்புளம் போல வீங்கிக்கிடந்தது. விழிமடலைத் திறக்கும்போது  பிளேற்றால் தோலை வெட்டிப்பிளப்பதைப்போன்ற வலி. ஒன்றரைப் பார்வையில்  கம்பிகள் கீலங்கீலமாகப் புலப்பட்டன. புகையைப்போல குளிர் பரவிற்று. வெளிச்சத்தின் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. தோலுரிந்ததுபோல சுவர் பூச்சுகள் கழன்று தொங்கும் பழங்காலத்துக் கட்டடத்தில் தனியான…