All posts filed under “நேர்காணல்

comment 0

ஈழத்துஇலக்கியத்தின் மீது தமிழகத்திற்கு கரிசனை உள்ளதா? – நேர்காணல்

19FEB, 26FEB 2017 திகதிகளில் இலங்கை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது. நேர்காணல் : கருணாகரன் 1. கூடிய கவனிப்பைப் பெற்ற உங்களுடைய “ஆறாவடு”, “ஆதிரை” க்குப் பிறகு, யுத்தமில்லாத புதிய நாவலைத் தரவுள்ளதாகச் சொன்னீங்கள். அடுத்த நாவல் என்ன? அது எப்ப வருது? அந்த நாவலுக்கு இப்போதைக்குக் கலையாடி என்று பெயர். எழுதிக்கொண்டிருந்த காலம் முழுவதும் பெரிய மன அழுத்தத்தைத் தந்த நாவல் ஆதிரை. அந்த நாவல் ஒரு கட்டத்திற்குப் பிறகு தன்னைத்தானே கொண்டிழுத்துக்கொண்டுபோனபோது ஒரு கையாலாகாதவனாக நின்று பார்த்துக்கொண்டிருந்தேன்., மனம் சலிச்சு, இதிலிருந்து வெளியேறி விடவேண்டுமென்று நொந்துகொண்டிருந்தேன். அதுவொரு அலைக்கழிப்பான காலம். அதை எழுதிமுடித்து அது வெளியாகிவிட்ட பிறகும் கூட, துயரப்படும் ஒரு மாந்தர் கூட்டத்தைக் கைவிட்டுவந்த ஓர் உணர்வுதான் இருக்கிறது. இதை மறுபடியும் எழுதித்தான் கடக்கவேண்டும்போலிருக்கிறது. உண்மையைச் சொன்னால் மனது ஒரு கொண்டாட்டத்தை விரும்புகிறது. ஆறாவடு எள்ளலும் துள்ளலுமாக எழுதப்பட்ட ஒரு நாவல். இப்பொழுது யோசித்தால் ஒரு துயரக்கதையை பகிடியும்…

comment 1

நேர்காணல் – அம்ருதா மாத இதழ்

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிற்சர்லாந்தில் வாழும் சயந்தன் தமிழில் எழுதும் முக்கிய படைப்பாளி. “ஆறாவடு“ நாவலின் மூலமாக தமிழ்ப்பரப்பில் கூடுதல் கவனத்தைப் பெற்றவர். “பெயரற்றது“ இவருடைய சிறுகதைகளின் தொகுதி. இப்பொழுது வந்திருப்பது “ஆதிரை“. வந்த சில வாரங்களிலேயே அதிகமான உரையாடல்களை “ஆதிரை“ உண்டாக்கியுள்ளது. ஈழப்போர் மற்றும் ஈழப்போராட்டம் என்ற தளத்தில் கட்டமைந்திருக்கும் ஆதிரை எழுப்புகின்ற கேள்விகள் பல கோணங்களில் ஆயிரமாயிரம். “யுத்தத்தின் முடிவில் எஞ்சிய கள யதார்த்தமும், பாதிக்கப்பட்ட இந்தச் சனங்கள் யார் என்ற கேள்வியும் ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியின் கொந்தளிப்பிலிருந்து ஆறிக்கொள்வதற்கான ஒரு வடிகாலாக இந்த எழுத்து இருக்குமென்பதை ஒரு கட்டத்தில் உணரத்தொடங்கினேன்“ என்று கூறும் சயந்தன் யாழ்ப்பாணம், சுழிபுரம் என்ற இடத்தில் பிறந்து போர்க்கால வாழ்வின் வழியே இடப்பெயர்வுகளைச் சந்தித்தவர். பின்னர், வன்னியிலிருந்து மீண்டு புலம்பெயர்ந்தவர். சயந்தனுடனான இந்த நேர்காணல் இணைய உரையாடலின் வழியாக நிகழ்த்தப்பட்டது. – கருணாகரன் ஆறாவடுவுக்குப் பிறகு ஆதிரை. எப்படி உணர்கிறீர்கள்? ஆறாவடு எழுதிமுடித்தபோதிருந்த நிறைவு…

comments 3

தமிழகத்தையும் ஈழத்தையும் இணைப்பது எது எனக் கேட்டால்..? -தீராநதி

போருக்குப் பின்னர் ஈழத்திலிருந்து புதிய தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சாத்தியாமான எல்லா எல்லைகளையும் தொட்டு விடும் துடிப்பு அவர்களிடம் உள்ளது. அந்த வகையில் தனது ‘ஆறாவடு’ நாவல் மூலம் தமிழ் இலக்கியப்பரப்பில் அறிமுகமாகியிருப்பவர் சயந்தன். நாவல் வெளி வந்த மிகக்குறுகிய காலத்திலேயே புகலிடத்திலும், இலங்கையிலும் விவாதிக்கப்படும் முன்னணி படைப்பாளியாகியிருக்கிறார். “கடவுள் படங்களுக்கு முன்னே நின்று முப்பது வயதுவரையாவது உயிரோடு வாழ்ந்தால் போதுமென வேண்டிய காலங்கள் என் நினைவில் நிற்கின்றன.” என்று சொல்லும் சயந்தன் இப்போது சுவிஸ்சில் வாழ்கிறார். மனதுக்குப் பட்டதை பளிச்சென்று பேசிவிடும் சயந்தனின் நேர்காணல்…… தீராநதி: உங்களுடைய ஆறாவடு நாவலுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருக்கிறது? சயந்தன்: நாவல் வெளியான நாளிலிருந்து, அங்கீகாரமும் நிராகரிப்பும் மாறி மாறி வந்தபடியிருந்தன. ஆறாவடு எனது முதல் படைப்பு, முதற் படைப்பொன்றின் படைப்பாளி என்ற வகையில் அங்கீகாரங்களும் எனக்கு நெருக்கமான எழுத்துக்களைப் படைத்த எழுத்தாளர்களது பாராட்டுக்களும் ஒரு வித கிளர்ச்சியைத் தந்தன என்பதை மறைக்க…

comment 0

பிரபாகரனுக்கு இருந்த ஆதரவு இப்போது யாருக்கும் இல்லை – விகடன்

”இத்ரிஸ் என்கிற எரித் திரியக் கிழவனுக்கு 30 வருடங்களுக்கு முன்னர் கருமையும் திரண்ட தோள்களும் உருக்குலையாத கட்டான உடலும் வாய்த்துஇருந்தது. இப்போதுபோன்று இடுங்கிய கண்களும் ஒடுங்கிய கன்னங்களும் கோடுகளாகச் சுருங்கிய தோல்களும் இருக்க வில்லை. அகன்ற நெற்றியும் தலையோட் டினை ஒட்டிச் சுருள் சுருளாயிருந்த தலை மயிரும் அவனுக்கு இருந்தன. எப்போதும் எதையோ சொல்லத் துடிப்பதுபோலத் தடித்த உதடுகளை அவன் கொண்டு இருந் தான். உறுதியான கரங்கள் எத்தியோப்பியப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்ட துப்பாக்கிகளைத் தாங்கி இருந்தன. இருண்ட வானத்தில் இரண்டு சூரியன்களைப் போன்ற பிரகாசமான கண்கள் அவனுக்கு இருந்தன. அவற்றில் சதா காலத்துக்கும் ஒரேயரு கனவு மீதம் இருந்தது. அது தனி எரித்திரிய விடுதலை தேசம்!” – தனது ‘ஆறாவடு’ நாவலின் இறுதி அத்தியாயத்தை இப்படி ஆரம்பிக்கிறார் சயந்தன். 50 ஆண்டுகளாக ஈழத்தில் நடைபெறும் இன ஒடுக்குமுறை, 30 ஆண்டு கால ஆயுத யுத்தம் என நாடுநாடாக நிழல் தேடி…