All posts filed under “ஆறா வடு

comment 0

குற்ற உணர்வின் பிரேத பரிசோதனை: யதார்த்தன்

நான் போரினை உணரத்தொடங்கும் போது போர் முடியத்தொடங்கி விட்டது. துப்பாக்கிகளும் பீரங்கிகளும் கிபிர் சத்தமும் உறுமி கேட்ட செவிப்பறைகளை கொண்ட இறுதித்தலை முறையாக நாங்கள் நிற்கின்றோம். தோற்ற தரப்புகளும் வென்ற தரப்பும் எஞ்சிய தர்ம அதர்மங்களை பங்கு போட்டு இன்னும் முடியவில்லை. ஒட்டு மொத்த மானுட இருப்பையும் போர்கள் மாற்றியமைத்தன . ஈழம் அதற்கு விதி விலக்கல்ல. மக்கள் தோற்ற தரப்பிற்கும் வென்ற தரப்புக்கும் இடையே முப்பது வருடங்களாக மாற்றப்படாத அதே முகங்களுடன் இன்னும் பொலிவிழந்து கிடக்கின்றார்கள். கொள்ளைகள் கற்பிதங்கள் எல்லாம் மேற்புல் மேயும் நம்பிக்கையீனம் கொண்ட மிருகங்களாகவே நிற்கின்றன. போராடியவர்களில் ஒரு தரப்பு உடல் உளம் இரண்டும் விதம் விதமாய் சிதைக்கப்பட்டு போர் மிருகத்தின் பல்லிடுக்குகளில் இருந்து நழுவி வீழ்ந்து கிடக்கின்றார்கள். யாரும் கடந்த காலத்தை ஞாபப்படுத்த தயாராக இல்லை , மறக்கவும் தான். தோற்று போனவர்களின் பிணங்களை வாசனை திரவியமிட்டு அரசியல் நடக்கின்றது . பிணங்களின் உள்ளே தேசத்தின்…

comment 0

அருமையான வாசிப்பனுபவம் : ´ஆறாவடு´

நேற்று வாசித்து முடித்த அருமையானதொரு புத்தகம் இது. சுவிஸ் நாட்டில் வசித்து வரும் புலம் பெயர் தமிழரான சயந்தன் எழுதி இருக்கிறார். நீர்க்கொழும்பில் இருந்து இத்தாலி நாட்டிற்குப் படகுப் பயணம் மேற்கொள்ளும் ஒரு போராளியின் முந்நிகழ்வு (பிளாஷ் பேக்) நினைவாக கதை விரிகிறது. அவர் இயக்கத்தில் சேர்வது ஒரு சுவாரசியமான கதை. தான் வாங்கிய சோலாபுரி செருப்பை ஒருவன் திருடிவிடுகிறான். அவன் இலங்கையில் மையமிட்டுள்ள இந்திய ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவன். அவனுடன் ஏற்பட்ட தகராறு இவரை பெரும் சோதனைக்கு ஆளாக்கிவிடுகிறது. அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அவரை இயக்கத்தில் சேர்ந்து பணியாற்ற உந்துகிறது. மேம்போக்காகப் பார்த்தால் ஒரு செருப்புக்கான சண்டை காரணம் போலத் தோன்றும், ஆனால் நாம் எதிர்பாராத சில சிறிய நிகழ்வுகள் கூட நம் வாழ்கைப் பாதையின் போக்கை மாற்றிவிடும் என்பதற்கு இது ஒரு உதாரணமாகப் பட்டது. இந்திய அமைதிப் படைகளின் அட்டூழியம் குறித்து அரசியல் மேடைகளில் கேட்டிருக்கிறேன்,…

comment 0

ஆறாவடு – யோ.கர்ணன்

அடிப்படையில் அ(இ)ந்த நாவல் விடுதலைப்புலியுறுப்பினராக இல்லாத ஒருவரினால், விடுதலைப்புலிகள் பற்றி அறிந்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது. பெரும்பாலான ஈழத்து நாவல்களிற்கேயுரித்தான விபரிப்புக் குறைபாடு, பாத்திர உருவாக்க பலவீனங்களுடன் நாவலிருந்தாலும், அது வாசிப்புச் சுவாரஸ்யமுள்ள நாவல்தான். அதிலெல்லாம் சந்தேகமில்லை. ஆனால், பிரச்சனையென்னவென்றால், நாவலின் ஆதாரமாக இருந்திருக்க வேண்டிய உயிர்ப்பு அதிலிருக்கவில்லை. என்னைக் கேட்டால் சயந்தன் வேறு களங்களை நாவலாக்கியிருக்கலாம் என்றுதான் சொல்வேன். ஏனெனில் அந்த விடயத்தில் அவரால் வெற்றியடைய முடியவில்லை. (புலியெதிர்ப்பு மிகச்சிறந்த சந்தை வாய்ப்பைக் கொண்டிருப்பதாக யமுனா குறிப்பிட்டிருந்தார். உண்மையில் பங்குச்சந்தையில் எதனது பங்கு உச்சவிலையிலிருக்கிறதென்பதற்கு இது உதாரணமாகயிருக்கும்) ஆறாவடு விடுதலைப்புலிகள் பற்றிய வாழ்க்கையை அசலாகப் பதிவுசெய்யவில்லை. சற்றே கறாராக இருந்தாலும் சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. விடுதலைப்புலிகள் பற்றிய விபரிப்புக்களில் கிட்டத்தட்ட தென்னிந்தியத் திரைப்படங்களைத்தானது நினைவுபடுத்தியது. அதில் சித்தரிக்கப்பட்டதல்ல விடுதலைப்புலிகளின் வாழ்க்கை. தவிரவும், அதில் குறிப்பிடப்படதெதுவுமே விடுதலைப்புலிகள் மீதான ஆழமான விமர்சனங்கள் கிடையாது. அவையெல்லாம் புலிகளின் சாதாரண முகங்கள். அந்த முகங்கள் மீது…

comment 0

வதைகளின் கதைப்பாடல் – ம.மணிமாறன்

துடிப்படங்கிய உடல்களைப் புரட்டித் தேடுகிறது கரும்பச்சை சூடிய சிங்களச்சிப்பாயின்  துவக்கு. புகை படர்ந்த பெருவெளிக்குள் துழாவித்திரிகிற அவனின் கண்களுக்குள் உறைந்திருக்கிற வன்மத்திற்கு ஓராயிரம் ஆண்டின் வரலாற்று ரேகை படிந்திருக்கிறது. தன்னுள் திளைக்கும் கொடுரத்தினை விதைத்தது புத்தபிக்கு மஹானாமாவின் சிங்கள காவியமான மகாவம்சம் என்பதை அந்த வீரன் அறிந்திருக்கச் சாத்தியமில்லை. வரலாற்றுப் பிரக்ஞையற்ற அவனது மூளை போர்க்கருவிகளால் வடிவமைக்கப்பட்டது. பேரினவாத காற்றைக் குடித்து பெருத்த சிங்களச் சிப்பாய் தான் தேடிய உயிர் அடங்கிய உடலைக்கண்டடைந்த மணித்துளியை வரலாறு கனத்த மௌனத்துடன்தான் பதிவு செய்கிறது. சிதிலமடையாத எண் 001 குறிப்பிடப்பட்ட அடையாள அட்டைக்கருகில் திறந்து கிடக்கும் சிங்கப்பூர் லோஷன் பாட்டிலில் இருந்து கிளம்பிய திராட்சை வாசனையால் நிறைந்திருந்தது அக்குறு நிலம். தன் உடலைப்புரட்டுகிற சிப்பாய் பிறப்பதற்கு முன்னான ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தைந்திலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் துவங்கியிருந்தான் வேலுப்பிள்ளை பிரபாகரன். முப்பதாண்டுகள் வீரச்சமருக்கு ஒப்புக்கொடுத்திருந்த உடலது. பேரினவாதம் காத்திருந்த நிமிடத்திற்குப் பிறகான நாட்கள் யாவும் தலைகீழாக…