All posts filed under “நனவிடை

comments 4

ஒபரேசன் பூமாலை – அந்த நாள் நினைவுகள்

அண்மைக் காலச் செய்திகளின் படி இந்தியா இலங்கை அரசுக்கான சகல வித உதவிகளையும் செய்வதற்கான காலம் கனிந்து வருகிறது. மேற்கு நாடுகளிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கும் இலங்கை அரசுக்கு ஆறுதல் சொல்லவும் அரவணைக்கவும் அருகில் யாராவது இருக்கத் தானே வேண்டும். ஆயினும் அது பற்றிப் பேசுவதல்ல இப்பதிவு. 1987 யூன் 4 இந்தியா யாழ் குடாநாட்டின் பகுதிகள் மீது உணவுப் பொட்டலங்களை இட்டு இப்போது 20 வருடங்களாகி விட்டன. ஒபரேசன் பூமாலை என்ற இந்த நடவடிக்கை தொடர்பாக இந்திய இராணுவத் தரப்புக்கள், அப்போதைய இந்திய பத்திரிகைகள் என்ன சொல்லின?, அது பற்றி தகவல்கள் என்ன என்பன குறித்து, இன்னுமொரு தேவைக்காக தகவல்கள் திரட்டியபோது bharat-rakshak என்னும் இந்திய இராணுவத்தின் இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் தமிழ் வடிவம் இது. இக் கட்டுரையின் இடையில் வரும் இப்பந்தியினை வாசித்து விட்டு முழுவதையும் படியுங்கள். கடந்த மாதங்களில் சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கான தனது…

comments 26

அந்த ஐந்து பேரையும் யாருக்காவது தெரியுமா..?

இன்று ஒருவருடன் நமது இளம் பராயத்து நினைவுகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்த போது இது பற்றிய பேச்செழுந்தது. அதாவது நமது இளம்பராயத்து பாடப் புத்தகங்களில் இடம் பெற்ற சுவையான சுவாரசியமான கதைகளை இப்போதும் நம்மால் நினைவு கொள்ள முடிகிறதா என கொஞ்சம் முயற்சித்துப் பார்த்தோம். குறிப்பாக தமிழ் ஆங்கில பாடப்புத்தகங்களில் இவ்வாறான நிறையக் கதைகள் இருந்தன. கதைகள் மட்டுமல்லாமல் பாடல்களும் கூட. இதனைப் படித்துக் கொண்டிருக்கும் யாருக்காவது Muru என்பவரைத் தெரியுமா? ஆரம்ப ஆங்கில பாடப் புத்தகத்தில் I am Muru, I am from Nigeria எனத் தன்னை அறிமுகப் படுத்துவாரே.. அவர் தான். அவரைத் தெரிந்திருந்தால் நீங்கள் என் வயதொத்தவர்கள். Muru ஐ போல மொத்தம் 5 பேர் இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கு Taro ஐயும் ஞாபகமிருக்கிறது. I am Taro, I am from Japan என்றவர் அவர். இது தவிர இந்தியாவிலிருந்தும் இங்கிலாந்திலிருந்தும் இருவர்…

comments 9

பழைய இரும்புக்கு பழம் வாங்கியிருக்கிறியளா?

கானா பிரபா மாம்பழங்கள் பற்றி எழுதிய போது நினைத்திருந்த பதிவு இது.பின்னர் மலைநாடான் பாலைப் பழங்கள் (பால்ப் பழம் என்றால் யார் கேட்கப் போறாங்க..?) பற்றியெழுத அவரின் வழி சிநேகிதியும் அம்பிரலாங்காய் குறித்து எழுதியாயிற்று. இது என் முறை. எல்லாருக்கும் ஒவ்வொரு பழங்கள் பிடித்தது போலவே எனக்கு நிறையப் பிடித்தது ஐஸ்பழங்கள். (தமிழ்நாட்டில் இதனை குச்சி ஐஸ் என்பர்). 50 சதம் விற்றுக் கொண்டிருந்த போது அறிமுகமானது இந்தப் பழம். மத்தியானத்துக்கும் பின்னேரத்துக்கும் இடைப்பட்ட நேரங்களில் சைக்கிளில் மணியடித்துக் ஐஸ்பழக் காரர் வர ஆரேனும் 50 சதம் தரமாட்டினமோ எண்டு மனம் அலைபாயும். அந்த நேரம் கோன் கிறீம் 2 ரூபா வித்தது. எண்டாலும் அது எங்கையாவது கோயிலுக்குப் போனாத்தான் வாங்கித் தருவினம். மற்றும் படி வீடுகளில இருக்கிற நேரம் ஐஸ்பழம் தான். ஞாபகப்படுத்திப் பாத்தால் ஐஸ்பழம் சிவப்பு நிறத்திலையும், மஞ்சளும் ஒரேஞ்சும் கலந்த ஒரு நிறத்திலையும் தான் அதிகம் இருந்தது…

comments 10

நான் படம் பார்த்த கதை

சொன்னதன் பிறகு இவன் என்ன சரியான சூனியமாய் இருப்பான் போல இருக்கெண்டு நினைக்க கூடாது. 97 ம் ஆண்டு வரைக்கும் தமிழ்ச்சினிமாவில புதுசா யாரார் நடிக்கினம் அவையின்ரை பேர் என்ன எண்டு எனக்கு ஒண்டும் வடிவா தெரியாது. நடிகர்கள் எண்டாலும் பரவாயில்லை. ரஜினியையும் விஜயகாந்தையும் புதுசா வந்தவையில பிரசாந்தையும் தெரியும். நடிகைகளைப் பொறுத்த வரை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் நதியாவும் அமலாவும் ராதாவும் தான். குஷ்வுவையும் தெரியும். அதுவும் 92 க்கும் 97 க்கும் இடையில ஆரார் புதுசா நடிக்க வந்தவை எண்டது சுத்தமாத் தெரியாது. சொன்னால் நம்ப மாட்டியள். 97 இல வன்னிலை பூவே உனக்காக பாத்த போது தான் உவர் தான் விஜய் எண்டதையும் அவற்றை முகத்தையும் முதலில பாத்தன். அதுவும் அந்தப் படத்தில Don’t miss எண்டொரு பாட்டுக்கு ஆடுறது அரவிந்த சாமி எண்டு சொன்னாங்கள். (அது விஜய் தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமான கெட்டப்) நான்…