பெயரற்றது – சிறுகதை

இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்களைச் சுழற்றிக்கொண்டு வந்தது. மூன்று நாட்களாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமென்றில்லை. ஒழுங்கான சாப்பாடு, குளிப்பு முழுக்கு, கக்கூசு என ஒன்றுமில்லை. ரவியண்ணனின் வீட்டின் முன் விறாந்தையில் பனங்கிழங்குகளை அடுக்கியமாதிரி படுத்திருந்த இருபது பேர்களில் கடந்த இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவனைக் கண்ணயரவே விடுவதில்லை என்று முடிவு பண்ணியிருக்கவேண்டும். “க்ர்.. புர்..” என்ற அவர்களின் குறட்டை ஒலிக்கு கவிழ்ந்து படுப்பதும், காதுகளைப்பொத்தியபடி […]

சுதர்சினி (சிறுகதை) – தமிழினி

-மறைந்த தமிழினி அவர்கள்  2014 ஓகஸ்ட் அம்ருதா இதழில் எழுதியிருந்த சிறுகதை) மாலை ஐந்து மணி கடந்துவிட்டது. வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பகுதியில் இன்னும் கொஞ்ச நேரம் கழித்து கைதிகளை உள்ளே தள்ளி கதவுகளை மூடிவிடுவார்கள். இன்னும் சிறிது நேரமேனும் திறந்தவெளியில் சற்றே காற்று வாங்கலாம் என்ற எண்ணம் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஓங்கி வளர்ந்த ஒரு தென்னை மரத்தைவிட உயரமான மதிற்கவரைத் தாண்டி முக்கி முனகி உள்ளே வரும் காற்று முகத்தில் மோதியெல்லாம் விளையாடுவதில்லை. […]

ஆற்றாது அழுத கண்ணீர் – பாதசாரி

மனிதன் விலங்குதான். தீ மூட்டியதிலிருந்து, சிந்தித்துச் சிந்தித்து ஐம்பதாயிரம் ஆண்டுகளாக எண்ணி எண்ணித் துணிந்து, இணையத்தால் உலகளந்த பின்னும் அவன் விலங்குதான். அவனுக் கான வசதிகள் மேம்பட்டன, அவ்வளவுதான். அறிவு என்பதோ, பருப்பொருட்களைப் பகுத்து அறிந்து, ஆக்கிப் பயன் கொண்டது மட்டும்தான். அவன் தன்னை அறிவதில்லை. தற்காத்து, தற்பேணி, தற்காமுற்று தான் தனது என அலைக்கழிகிறான். அவன்தான் குடும்பம், குழு, கூட்டம், சாதி, இனம், அரசு, நாடு என்று அலை விரியும் வட்டங்களில் கூடிக் களித்தும் முரண்பட்டும் […]

ஆயாச்சி அல்லது கச்சான்காரப் பூரணத்தின் பேரன்

ஆறாவடுவின் நான்காவது திருத்தமும் முடித்து, “இதுதான் எனது உச்சக் கொள்ளளவு. இதற்குமேலும் நீங்கள் எதிர்பார்க்கும் செழுமை என்னிடம் மருந்திற்கும் கிடையாது” என்று அனுப்பிவைத்தபோது தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொன்னார். “பரவாயில்லை. இது கெட்டிக்கார இளைஞன் ஒருவன் எழுதிய சுவாரசியமான பதிவுதான். ஒரு தொடக்கமாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் கெட்டிக்காரத்தனம் மட்டுமே ஒரு நாவலை எழுதப் போதுமானதல்ல. அதற்கும் மேலாக ஒரு நிறைவான மனித மனம் தேவைப்படுகிறது. வாழ்வின் சகல பாடுகளையும் பட்டு ஓய்ந்த வயதொன்றின் மனநிலையோடு பதட்டமின்றி […]