சின்ராசு மாமா

சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் எப்போதுமிருக்கிற பீடிக் கட்டு அல்லது சுருட்டு அல்லது ஒற்றைச் சிகரெட் முதலானவற்றைப் பார்த்து அவரது தொழில் நிலவரத்தைச் சொல்லுகிற ட்ரிக்ஸ் எனக்குத் தெரிந்திருந்தது. “மாமோய், கடலம்மா இண்டைக்கு பார்த்துப் பாராமல் அள்ளித் தந்திருக்கிறா போல” என்றால் அன்றைக்கு ஒரு முழுச் சிகரெட் பெட்டி சின்ராசு மாமாவின் சட்டைப் பையினில் முன் தள்ளியவாறு இருக்க மணிக்கொரு தடவை அவர் சிகரெட்டை ஊதித்தள்ளுகிறார் என்று அர்த்தம். அப்போது இடுங்கிய கண்களில் மகிழ்ச்சி மேவியிருக்க இரண்டொரு […]

தமிழ் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ்

ரமில் டைகர்ஸ் பிறீடம் பைட்டர்ஸ் என்று டிவியின் உள்ளே நின்று சற்றே நெஞ்சை முன்தள்ளியவாறு கைகளை உயர்த்திக் கத்திய இளைஞனை எங்கோ கண்டிருந்ததாக அகதித்தஞ்ச விசாரணையின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர்  சோபாவில் புதைந்திருந்து விரல்களால் முன் நெற்றியைத் தேய்த்தபடி யோசித்தார். இளைஞனின் ரீ சேர்ட்டில் புலியொன்று பாய்ந்தபடியிருந்தது. தொப்பியிலும் அதே புலி. கழுத்தினில் சுற்றப்பட்டு மார்பினில் தொங்கிய மிதமான குளிரைத்தாங்கும் சிவத்த கம்பளிச் சால்வையின் இரு முடிவிடங்களிலும் இரண்டு புலிகள் பாய்ந்தன. கன்னங்களில் மெல்லிய கறுத்தக்கோடாக தாடியை […]

இந்தியாக் காரன்

“இவனொரு இந்தியாக்காரனடா. இலங்கைத் தமிழன் என்று பொய் சொல்லி இங்கை அகதித் தஞ்சம் கேட்டிருக்கிறான்.” என்று பூலோகத்தார் சுட்டிய இளைஞன் எங்களைக் கடந்துபோய்க் கொண்டிருந்தான். இடத்திற்குப் புதியவனைப்போலவே தோன்றியது. கண்டதில்லை. முதுகில் தொங்கிய பையின் கைப்பிடியை நெஞ்சோடு அழுத்திப் பிடித்திருந்தான். ஒன்றிரண்டு தடவைகள் எங்களைப் பார்த்தான். கண்களில் சிநேகமா அச்சமா என் உய்த்துணரமுடியாத பார்வையிருந்தது. அவன் அப்படிப் பார்த்தபோதெல்லாம் அவனை எரித்துவிடுவது போல பூலோகத்தார் முறைத்தார். “பாரன், களவெடுத்துப் பிடிபட்டவன் மாதிரி அவன்ரை முழியை.. யாரைப் பேக்காட்டலாம் […]

மகாப் பிரபுக்கள்

கனகுராசா கக்கூசுக்குப் போகிற வழியில், கையில் வைத்திருந்த தண்ணீர் வாளி முழுவதுமாகத் துருப்பிடித்திருந்தது. அதன் ஓரங்களிலும் உள்ளேயும் பாசி பரவி பச்சைக் கலரிலிருந்தது. அவர் வெறும் மேலுடன் நின்றார். பழைய சவுதி சாரமொன்றை துாக்கிக் கட்டியிருந்தார். கக்கூசு வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்தது. பழைய காலக் கக்கூசு, யாழ்ப்பாணத்திற்கு கக்கூசுக் கலாச்சாரம் வந்தபோது அவரது ஐயா ஊரில் முதலாவதாகக் கட்டிய கக்கூசு அது. கிணற்றடியில் இருந்து இத்தனை முழத்திற்கு அப்பால் இருக்க வேண்டுமென சுகாதார அலுவலர்கள் அப்போது அறிவுறுத்தினார்கள். […]