அஷேரா! மனதை விட்டு அகலாத அற்புதம் – உமா ஆனந்த்

“கையைச்சுடும் என்றாலும் தீயைத்தொடும் பிள்ளைபோல்” நான் ஏன் தேடி தேடி ஈழக்கதைகளை வாசிக்கிறேன் என்று புரியவில்லை. எப்படியாவது வாழ்ந்துவிட துடிக்கும் மக்களின் கதை. உயிர் வாழும் ஆசை எந்த எல்லைக்கும் துரத்தக்கூடியது . அற்புதம் கடைசி முறையாக இலங்கையில் இருந்து கிளம்புவதை சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அருள்குமரன்களும், அற்புதங்களும்தான் ஈழத்தின் அசலான முகங்கள் என்று தோன்றுகிறது. விடுதலைக்காக போராடும் இயக்கங்கள் கூட துரோகமும், வக்கிரமும், வெறியுமாக திரிவதை பார்க்கும்போது மனிதம் மீதான நம்பக்கையே அற்று போகிறது. மனித மனத்தின் […]

அமேஸான் கின்டிலில் மூன்று புத்தகங்கள்

என்னுடைய ஆறாவடு, ஆதிரை நாவல்களும் இதுவரை தொகுக்கப்படாத ஏழு சிறுகதைகளை உள்ளடக்கிய இறுதி வணக்கம் என்ற கதைத் தொகுப்பும் இப்பொழுது அமேஸான் கின்டிலில் கிடைக்கின்றது. வாசிப்பு அனுபவத்தை கின்டிலில் கொள்வோர் பயன்படுத்தலாம்.

சாதியமும் புலிகளும் |புலிகளின் அதிகாரபூர்வ பார்வை

காலங்காலமாக தமிழீழ சமூகத்தின் உணர்வுடன் கலந்திருந்த வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியை இழந்து வருகிறது. எமது 18 வருடகால ஆயுதப்போராட்டம் இதைச் சாதித்துள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்து வர வர சாதியத்தின் முனையும் மழுங்கிவருகின்றது. அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளை சிற்சில இடங்களில் இன்றும் காணக்கூடியதாகவே உள்ளது. அவ்விதம் நாம் சந்தித்த ஒரு முக்கிய சம்பவத்துடன் கட்டுரை ஆரம்பமாகிறது. சாதியம் தொடர்பான புலிகளின் கருத்தை இக்கட்டுரை தொட்டுச் செல்கிறது. விடுதலைப்புலிகள் […]

யாழ் நூலகத் திறப்பு – தடுப்பு – காரணங்கள்

இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்கஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை […]