comments 21

வேட்டைக்காரன் – கடுப்பைக் கிளப்புறார் யுவர் ஆனர்

நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம்.

புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் – புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் – ஈழத்தமிழர்கள் திரட்டப்படக்கூடிய சக்தியா என்பதுதான். என்னளவில் பொதுவாகவே தமிழர்கள் ஒரு சக்தியே அல்ல என்ற முடிபுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களாவது சக்தியாவது..

அண்மைய நாட்களில் Facebook இலும் ட்விட்டரிலும் சில மறுமொழிகளிலும் ஆங்காங்கே எழுதிய குறிப்புக்கள் இவை, முன்பாக சில உண்மைகள்

இலங்கைக்கு அன்னியச்செலாவணியைப் பெற்றுக் கொடுக்கின்ற அங்கிருந்து ஏற்றுமதியாகின்ற பொருட்களை இன்னும் யாரும் தவிர்க்கவில்லை. தெரிந்த ஒரு புள்ளிவிபரம் சொல்கிறேன். சுவிற்சர்லாந்தில் 140 க்கும் மேற்பட்ட சின்னதும் பெரியதுமான ஈழத்தமிழர்களால் நடாத்தப்படுகின்ற விற்பனை நிலையங்கள் உள்ளன. வாரத்திற்கு 200 kg இலிருந்து 2000 kg வரை அவர்களுக்கான கடலுணவை இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கிட்டத்தட்ட 50 000 kg கடலுணவு வாரத்திற்கு இறக்குமதியாகிறது. இதற்காக 350 000 அமெரிக்க டொலர்கள் வாரத்திற்கு சுவிற்சர்லாந்தில் இருந்து மட்டும் அன்னியச் செலாவணியாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் போகிறது.

இது வாரக்கணக்கு. அதுவும் சுவிற்சர்லாந்திலிருந்து மட்டும். இனி மாதத்திற்கும் அதேபோல மற்றைய ஐரோப்பிய கனடா நாடுகளிற்கும் கணக்குப் பாருங்கள். ஒப்பீட்டளவில் சுவிற்சர்லாந்தில் ஈழத்தமிழர்களின் தொகை குறைவென்பதையும் மனதில் வையுங்கள்.

வேட்டைக்காரனுக்குப் பின்னால் ஒரு ரத்தக் கதையிருக்கென்று கதைவிடுகிறவர்கள் – இலங்கைக் கடல் மீனில் உண்மையாகவே தமிழன் ரத்தம் இருக்கென்றதை வசதியாக மறந்து விடுகிறார்கள். கடைக்காரர்களிடம் பேசினால் ஏன் இத்தாலியிலிருந்து நோர்வேயிலிருந்து இறக்குமதி செய்யலாமே என்றால் (ஒருவேளை இத்தாலி சோனியா பிறந்த நாடு என்பதால் வேண்டாம் என்கிறார்களோ ) இல்லையாம்! சனத்துக்கு தமிழ் மீன்தான் வேண்டுமாம்.

நான் தெளிவாகவே சொல்லிவிடுகிறேன். புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு வரையறைக்குட்பட்ட வகையில்த்தான் தமிழீழம் வேண்டும். சிறிலங்கன் எயர்லைன்ஸ் இல் பயணிக்க வேண்டாம் என்றால் அப்போது தமிழீழத்தை விட மலிவான கட்டணம்தான் முக்கியம். இலங்கைப் பொருட்களைப் புறக்கணியுங்கள் என்றால் அப்போதும் தமிழீழத்தை விட தமிழ் மீன்தான் முக்கியம். இவர்களுக்கு ஏற்றமாதிரி புறக்கணிப்புக் கோருவதென்றால் இனி சுவிஸ் தமிழர்களே கனேடிய டொலர்களைப் புறக்கணியுங்கள் என்றோ அல்லது கனேடியத் தமிழர்களே சுவிஸ் பிராங்குகளைப் புறக்கணியுங்கள் என்றுதான் கோர முடியும்.

0 0 0

ஐரோப்பாவில் ஈழத்தமிழ் தொலைக்காட்சிகள் 3 இருக்கின்றன. அதிலொன்று இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகின்றது. இன்னொன்று கட்டண ஒளிபரப்பில் தன்னை இந்தத் தேசியம் தன்னாட்சி என்ற சிக்கல்களில் மாட்டாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. மற்றயது பாவம் இந்தச் சனத்தை நம்பி தமிழ்த் தேசியம் தனிநாடு என்ற கோதாவில் இறங்கி சம்பளங்கள் கூட கொடுக்க முடியாத சிக்கலில் இழுத்து இழுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆனால் கலைஞர் தொலைக்காட்சிக்கும் – சன் தொலைக்காட்சிக்கும் இருக்கிற வரவேற்பில் அவர்கள் தமது குழுமத் தொலைக்காட்சிகளை எட்டு பத்து என இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவை மக்களது தெரிவென்பதே நிஜமாகினும் தம்மை ஒரு யூத இனம் என கனவு கண்டு கொண்டிருக்கிற தம்மை ஒரு எதுமாதிரியுமில்லாத புதுமாதிரியான இனம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிற கூட்டமொன்றின் வண்டவாளங்கள்தான் இவை.

0 0 0

vijayவேட்டைக்காரனைப் புறக்கணிக்கக் கோருவோர் மீதும் கோருகிற மக்கள் மீதும் இருக்கிற என் பார்வைகள் இவைதான். ஒரு சினிமாவைப் புறக்கணிக்கக் கோருகிறவர்களும் சினிமாத்தனமாகவே கோருகின்றனர். அல்லாதுவிடின் விஜய் மன்னிப்புக் கேட்காவிட்டால் ச்சும்மா அதிரப்போது பாருங்க என்ற வார்த்தைகள் எப்படி வரும். ? இதைப்பார்த்தால் யாரோ ரஜினி ரசிகர்தான் இந்தப் புறக்கணிப்பைக் கோரியிருக்கிறார் போலத் தெரிகிறது. மற்றையது புறக்கணிப்பைக் கோருவதற்கான காரணங்கள். இந்திய பொருளாதாரம் எதிர் ஈழத்தமிழர் பணம் என்கிற நிலையில் – அது இந்திய பொருளாதாரத்தில் சிறு சிறு துளியே ஆயினும் – அங்கு திரட்டப்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் சக்தியைத் தெரியப்படுத்தல் என்ற நிலையிலன்றி விஜய் காங்கிரசோடு கதைத்தார் ! விஜய் அன்ரனி இலங்கை இராணுவ வானூர்தியில் சென்றார் ! சிங்கள ராணுவப் பாட்டுப் பாடியவர் இதில் பாடியிருக்கிறார்! என்ற காரணங்கள் சந்தி சிரிக்க வைக்கின்றன. சீமான் விஜயை வைத்துப் படமெடுத்தால் என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

0 0 0

Facebook குறிப்புக்கள்

வேட்டைக்காரனை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய தொலைகாட்சி படங்களை புறக்கணித்தால் எனக்கு மகிழ்ச்சியே.. ஆனால் – நமது மக்களைப்பற்றி நன்றாகவே தெரிந்து வைத்துக்கொண்டு ! இந்தப் புறக்கணிப்புக்களை தமிழீழத்தின் பெயரால் கோருவதும் – மக்கள் அதை கு**டியில் தட்டிவிட்டுச் சென்று பார்ப்பதுமாக இந்த வெளயாட்டு ரொம்ப நாளாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சனம் திரும்பத் திரும்ப தமக்கு தமிழீழம் வரையறைக்குட்பட்ட வகையிலேயே தேவை என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். நாமோ அவ்வப்போது தவளைகளைப்போல அவ்வப்போது கத்திக் கொண்டிருக்கிறோம்.

* * *

தயவு செய்து ஒவ்வொரு படங்களும் இப்பிடியிப்பிடி வரும்போது தொங்கித் தொங்கிக் கத்துறதை விட்டுட்டு நேர்த்தியான முறையில் (இந்த சும்மா அதிருதில்ல ) என்ற அலுக்கோசுத்தன புறக்கணிப்புக் கோரல்களை கைவிட்டு – ஏன் இந்திய சினிமா இந்திய சுற்றுலா உட்பட்ட இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதன் மூலம் ஈழத்தமிழன் திரட்டப்பட்ட ஒரு சக்தியாக இருக்கிறான் என நீருபிக்க வேண்டிய தேவையையும் மக்களுக்கு சொல்லுங்கள்.

ஆனால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழன் திரட்டப்பட முடிகிற அளவுக்கு ஒரு சக்தியே அல்ல என்பதுதான் எனது முடிவு. அது முறியடிக்கப்படுமானால் மகிழ்ச்சி.. வேட்டைக்காரனுக்கு முன்பாக இலங்கை விமானங்கள் இலங்கை பொருட்கள் என அனைத்தையும் புறக்கணித்து நீங்கள் ஒரு சக்திதான் என்பதை நிரூபியுங்கள்..

இலங்கை இந்தியா வல்லரசுகளோடு அரசியல் ஆயுத வழி போராடிய ஒரு இனத்தின் குஞ்சுகளும் குருமன்களும் போயும் போயும் வேட்டைக்காரனோடு போராடுகிறார்கள் என்பது மனத்துயரம்.

* * *

கனநாளாக யோசித்தேன்.. ஏன்ராப்பா இப்பிடி ஐஞ்சு சேத்துக்கும் பெறுமதியில்லாத , சும்மாவே தோற்றுப்போகப் போகிற ஒரு மொக்கைப் படத்திற்காக இப்பிடி அடிபிடிப் படுறாங்கள் என்று..

இதில ஒரு உளவியல் இருக்கு. தோற்றுப் போன இனமொன்றின் மன வெப்பியாரம் இப்பிடித்தான் டே.. அவன்தான் அடிச்சவன்.. டே இவன்தான் அடிச்சவன் என்றும் டே அவனை அடி.. டே இவனை அடி என அலைபாய்ஞ்சு கதறும். இதில ஆத்திரப்பட ஏதுமில்லை. இந்த நிலை வந்ததே என அனுதாபப்படத்தான் முடியும்.

* * *

வேட்டைக்காரனை இணையத்தில் இறக்கிப் பார்க்கலாம். இலங்கை மீனை இணையத்தில் சமைச்சுச் சாப்பிடலாமோ..

* * *

எல்லாம் தமிழ்நாட்டு நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு வருமானம் கொஞ்சம் குறையத்தான் செய்யும். பட்ஜெட்டைக் குறைத்து அதைச் சரிக்கட்டிவிட்டு இனிமேல் ஈழத்தமிழர்களுக்கு படங்களை விநியோகிப்பதில்லை என்ற முடிவை எடுங்கள். மானாட மயிலாட சூட்டிங் பார்க்க வருகிற ஈழத்தமிழர்களை உள்ளே விடாதீர்கள். நடிகர்களோடு படமெடுக்கலாமோ என வருகிற தமிழர்களை அடித்துக் கலையுங்கள். வருடா வருடம் நாங்கள் எம்பியெம்பிக் குதிக்கிறது உங்களுக்கு எரிச்சலாய் இல்லையா ? அதனாற்தான் சொல்லுறன். பேசாமல் எங்களைப் புறக்கணியுங்கள்.
* * *

கட்டக்கடைசியா இந்தப் புறக்கணிப்பெல்லாம் முடிந்து படமெல்லாம் வெற்றிகரமா ஓடியபிறகு இப்பிடி எங்கையிருந்தாவது செய்திவரும். அதொன்றுதான் கண்ட மிச்சமாயிருக்கும்.

“வேட்டைக்காரனைப் புறக்கணியுங்கள் – புலிகள் கோரிக்கையைப் புறக்கணித்தனர் புலம் பெயர்ந்த மக்கள்.”

21 Comments

 1. விமர்சனம் என்று படிக்க வந்தால், மிக ஆழமான அலசல் சயந்தன்

  //இலங்கை இந்தியா வல்லரசுகளோடு அரசியல் ஆயுத வழி போராடிய ஒரு இனத்தின் குஞ்சுகளும் குருமன்களும் போயும் போயும் வேட்டைக்காரனோடு போராடுகிறார்கள் என்பது மனத்துயரம்//

  ஒவ்வொருமுறையும் இப்படி ஏதாவது ஒரு படம் வருவதும் ஒரு சிறு முனுமுனுப்பு போல் புறக்கணியுங்கள் என கோரிக்கைவிடுவதும்…எப்படி ஈழம் ஏற்படும்??

 2. 2va

  நல்லதொரு பதிவு., facebook கில் எனது நண்பர் ஒருவர் போட்டு இருந்த விளக்கம் Youtube கிளிப்புடன்
  பாட்டுக்கு விளக்கம்வேற:-
  புலி உறுமுது புலி உறுமுது (Referring to Tigers)
  URUMUTHU MEANS THE TIGER IS SCARRED THAT SOMEONE IS COMING TOWARDS HIM… AND JUST TO SCARE HIM OFF… IT’S GETTING ON THE DEFENCE STANCE!!!!

  புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் ((Referring to Rajapakshe) வர்றத பாத…்து
  He is saying on the above sentence, Tigers are roaring when they see Rajapakshe coming….
  கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது (Referring to Tigers) வேட்டைக்காரன் வர்றத பாத்து (Referring to Rajapakshe)
  WHEN THE TIGERS SEE RAJAPAKSHE COMING, THEY ARE GETTING SCARED, THEY ARE SHAKING, AND THEY ARE LOOSING THEIR STAND!!!!!!

  பட்ட கத்தி பளபளக்க பட்டி தொட்டி கலகலக்க
  பறந்து வாறன் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன் (Referring to Rajapakshe)

  நிக்காம ஓடு. ஓடு.. ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… ஓடு… (Referring to Tigers)
  வாறன் பாரு வேட்டைக்காரன்.. (Referring to Rajapakshe)
  NOW HE IS SAYING… RUN RUN RUN EELAM TAMILS, RAJAPAKSHE IS COMING!!!!

  புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து

  கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது நில கொலயுது நில கொலயுது வேட்டைக்காரன் வர்றத பாத்துSee More

  Vettaikaran – puli urumudhu (FIRST ON NET!!)
  http://www.youtube.com

 3. //ச்சும்மா அதிரப்போது பாருங்க என்ற வார்த்தைகள் எப்படி வரும். ? இதைப்பார்த்தால் யாரோ ரஜினி ரசிகர்தான் இந்தப் புறக்கணிப்பைக் கோரியிருக்கிறார் போலத் தெரிகிறது//

  🙂

 4. சயந்தன் உக்களிடம் சில கேள்விகள்,
  சூரியா, நிரு போன்ற நிறுவனக்களால் சந்தைப் படுத்தப்படும் மீன்கள் எங்கிருந்து வருகின்றன?

  இந்தியப் பொருட்களை ஈழத் தமிழர் புறக்கணிப்பதன் மூலம் இந்தியப் பொருளாதராம் ஆட்டம் காணாது.ஆனால் சிறிலங்காப் பொருளாதராம் பெருமளவில் ஆடை ஏற்றுமதியில் தங்கி உள்ளது.மேற்குலகில் வாழும் மக்களிடமும் நிறுவனக்களிடமும் நடாத்தப்படக் கூடிய போராட்டங்கள் இந்த ஆடை ஏற்றுமைதி வர்தகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியன.மேலும் உப்புச் சக்தியாக் கிரகம் முதல் காந்தியாரின் விதேசிய உடை எரிப்புப் போராட்டங்கள் எல்லாமுமே, இந்திய மக்களை அணிதிரட்ட அரசியற் மயப்படுத்த தேசிய விடுதலை நோக்கிப் போராட வைத்தன.இவாறன போராட்டங்கள் குறீயீட்டானவையே தவிர அவை பொருளாதாரப்பாதிப்பை குறிக்கோளாகக் கொண்டவை அல்ல.

  மேலும் புலத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் ஏன் புறக்கணிப்புப் போராட்டங்களுக்கு ஆதரவு தரவில்லை பற்றி என்ன நினைகிறீர்கள்.அதற்குக் காரணம் என்ன?

  உங்கள் எழுதுக்களைப் போன்று அவர்களும் எங்களால் முடியாது என்னும் மன நிலையில் இருப்பதே அடிப்படைக் காரணம். நாம் புறக்கணிப்பதால் ஒன்று ஆகிவிடாது என்னும் ‘தோல்வி’ உள மன நிலை தான் காரணம். நாம் எதை நினைக்கிறோமோ அதுவாகா ஆகிறோம் என்று உளவியலில் சொல்வார்கள்.பதினாறு வயதில் என்னால் முடியும் என்று தன்னந்தனியனாக ஒரு இளஞன் கண்ட அனவுகளில் பலவற்ற அவனால் செய்ய முடிந்தது அவன் தன்னால்முடியும் என்று நம்பியபடியால்.
  மேலும் எழுத்தாளர்கள் ,பதிவர்கள் என்போர் ஒரு சமூகத்தின் கூட்டு உளவியலைத் தீர்மானிக்கின்றனர்.எம்மால் முடியாது என்று எழுதினால் அது எம்மால் முடியாது தான் போகும்.முடியாது என்பதை முடியும் என்று மாற்றுவது எமது கைகளிலையே இருக்கிறது.அதற்க்கு கடுமையான கூட்டு உழைப்பு அவசியம். நிறுவனப் படல், பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடல் அவற்றை வழிமுறைப் படுதுவதற்கான நடைமுறைகள அமுலாக்கல் என எமது செயற்பாடுகள் இருக்க வேண்டும்.

  தமிழீழ நாடு கடந்த அரசினூடாக , நிறுவனப் படல்.சிறிலங்காப் பொருட்களுக்கு மாற்றீடான மூலாதரங்களைக் கண்டறிந்து அவ்வாறான பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவங்களை தமிழீழ அரசின் இலச்சினை மூலம் அடையாளமிடல்.அவ்வாறான் இலச்சினையை உடைய பொருட்களை வாக்கும் படி மக்களை வேண்ன்டுதல் என பல வழிகளில் தீர்வுகளைக்காண முடியும்.எல்லாவற்றிற்க்கும் முதலில் எம்மால் முடியும் என்னும் நம்பிக்கை வேண்டும்.

 5. சயந்தன்

  மேலும் புலத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் ஏன் புறக்கணிப்புப் போராட்டங்களுக்கு ஆதரவு தரவில்லை பற்றி என்ன நினைகிறீர்கள்.அதற்குக் காரணம் என்ன? //

  அதான் சொன்னேனே.. வரையறைக்குட்பட்ட வகையில்தான் நமக்கு தமிழீழம் தேவை! அப்பிடியில்லை நாங்கள் சொல்லி விளங்கப்படுத்தலாம் என்றால்

  30 வருட ஆயுதப்போர்
  30 000 க்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர்க் கொடை
  2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் சாவு

  இத்தனைக்குப் பிறகும் நீங்க முதலேயிருந்து சனங்களுக்குப் படிப்பிக்கப் போறம் என்றால்

  வாழ்த்துக்கள்

 6. எல்லாருக்கும் தமிழ் ஈழம் வேணும் ஆனால் அதை அடைவதற்கான வழி முறை,கூட்டுச் செயற்பாடு என்பவை இல்லை.இவை தாந்தோன்றியாக எழுவதில்லை.ஒரு சமூகத்தில் முன் நோக்கிச் சிந்திக்கும் சக்திகள் வழிகாட்டலில் தலமையியிலயே இது நிகழ்கிறது, நிகழ்ந்தது.சிறு சிறு போராட்ட வெற்றிகளின் அடிப்படியைலையே எம்மாலும் தமீழம் கண முடியும் என்னும் நம்பிக்கை பலரையும் ஆட்கொண்டது.சிறு தொகையினரின் முன் நேறிய செயற்பாடுகள் பலரையும் நபிக்கை கொள்ளவைதது.கூட்டு உளவியலை முன் நகர்த்தியது.
  தோல்வி கண்ட பல போராட்டங்கள் உலகில் மீண்டு எழுந்திருக்கின்றன.இதில் படிப்பிக்க ஒன்றுமில்லை.போராட்டங்களுக்கு அடிப்படை முரண்பாடுகள்.முரண்பாடுகள் தீர்க்கப்படாத வரை போராட்டங்கள் முடியப் போவதில்லை.உங்கள் அண்மைய எழுதுக்களில் விரவி இருப்பது தோல்வியில் எழும் விரிக்தியின் வெளிப்பாடுகள்.உலகில் அழிந்து மீண்ட போராட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்,விரக்தியான மன நிலையில் இருந்து விடுபடலாம்.

 7. Anonymous

  .ஆனால் சிறிலங்காப் பொருளாதராம் பெருமளவில் ஆடை ஏற்றுமதியில் தங்கி உள்ளது.//
  அற்புதன் என்ன சொல்லவாறார் என்றால் தமிழர்கள் பயன்படுத்துகிற இலங்கை மீனிலோ விமானப் பயணத்திலோ இலங்கை பொருளாதாரம் தங்கியிருக்கவில்லை. மாறாக அது வெள்ளைக் காரர்கள் இறக்குமதி செய்யும் ஆடை ஏற்றுமதியிலேயே தங்கியிருக்கிறது. ஆகவே வெள்ளைக்காரர்கள்தான் அவற்றைப் புறக்கணிக்க வேண்டுமே தவிர நாங்கள் அல்ல.

  தாங்ஸ் அண்ணே.. பாலை வார்த்தீர்கள்..

 8. THE GLOBAL RECESSION IS A SERIOUS THREAT TO SRI LANKA’S MAIN EXPORT.

  Since 1986, garment exports have been the single most important item of export and the apparel industry has been the largest manufacturing industry in the country. The decline in demand for clothing, especially in the US and Europe which are the country’s main export markets, could damage the apparel industry irreparably and cause serious strains on the economy. Some garment factories have already closed, others are cutting down on overtime payments and still others exploring the possibility of part time employment to its full time workforce. Beyond doubt new recruitment to the industry has been halted.

  Apparel exports accounted for 43 percent of the country’s gross export earnings in 2007. It was the country’s major industrial export accounting for 56 percent of the country’s industrial exports last year. Garment exports have continued to increase over the years although its share in exports has declined owing to a healthy diversification of industrial exports in recent years. The exports of textiles and garments increased by 8.5 percent last year contributing US $3342 million to the country’s export earnings. Textiles, garments and leather products accounted for 8.5 percent of national output (GDP).

  The garment industry has been the single most important industry since liberalisation of the economy, from 1986 onwards when garment exports surpassed tea exports. Garment exports rose from 2 percent of total exports in 1977 to 28 percent of exports in 1986 and became the major export by 2000, when 54 percent of export earnings were derived from apparel exports. Since 2000 there has been an increase in garment exports in spite of the fizzling out of the Multi Fibre Agreement (MFA) that conferred quotas to developing export countries in 2004. Despite this, garment exports increased in 2005 and 2006 and even in 2007, garment export earnings increased by 8.5 percent. However 2008 witnessed sluggishness in garment exports with garment export growth being only 5 percent in the first seven months of the year. In spite of this, garment exports were responsible for 24 per cent of industrial exports and contributed 23 percent to total export earnings in the first seven months of this year.

  Export Markets

  Sri Lanka’s main export markets for garments are the USA and European Union (EU) countries. The US accounted for a market share of 50 percent in 2007, while EU countries accounted for 45 percent of Sri Lanka’s exports of garments. Within the EU, the United Kingdom accounted for one half share of European exports, with Italy and Germany accounting for most of the rest, at 9 and 5 percent, respectively. It is therefore primarily the United States market that is of significance for Sri Lankan apparel exports. And the US is severely affected by the recession. However the recession has spread to EU countries, whose demand for clothing is also of importance for Sri Lankan exports. The recession in the US has already seen cutbacks in spending that is affecting garment exports severely. Retail spending has dropped in recent months and no doubt purchases of garments have been an early casualty. Consequently orders placed for purchase of garments for exports have already declined.
  http://www.montagelanka.com/?p=864

 9. Tamilini

  “இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த உள்நாட்டுப் போரில் சிறிலங்கப் படைகள் செய்த மனித உரிமை மீறல்கள், போர் குற்றம் ஆகியன குறித்து விசாரித்த ஐரோப்பிய ஒன்றியம், சிறிலங்காவின் ஆயத்த ஆடைகளுக்கு வழங்கிவந்த இறக்குமதி தீர்வை மானியத்தை இரத்து செய்வதாக அறிவித்துள்ளத”

 10. Eela Tamil

  Rajapachchonthi is zero in front of our brave Hon.Pirabaharan. If you are supporting devil RP (he doesn’t even know how to hold a “thuvakku “ in his hand), you are not human…Justice will win one day..innocent people lives/cries never let the criminals or crime supporters to live peacefully…

 11. பிரன்சு காலனியதுக்கு எதிராக அல்ஜிரிய மக்கள் பல ஆண்டுகளாகாப் போராடினார்கள்.அவர்களின் போராட்ட இயக்கமான FLN 1958 ஆM ஆண்டளவில் முற்று முழுதாக அழிக்கப்பட்டது.1960 ஆம் ஆண்டளவில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி 1962 ஆம் ஆண்டளவில் அல்ஜீரியா விடுதலை பெற்றது.
  இந்த இணைப்பில் இருக்கும் படத்தை முழுமையாகப் பார்க்கவும்,பல சம்பவங்கள் எங்கள் போராட்டத்தின் மீள்பிரதி போல் இருக்கும்.அடக்குமுறையாளர்கள் தற்காலிகமாக வெற்றிகளைப் பெற்றலும் ஈற்றில் அடக்கபடும் மக்களே வெற்றி பெற்றிருகிறார்கள்.
  http://aatputhan.blogspot.com/2009/12/battle-of-algiers-1964.html

 12. Tamilan

  Your Heading Kalakkaal……………………….

  இதே விஜய்க்கு சென்னைல ஒரு காலத்துல ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கனும்னு ஒரு வெறியோட இருந்த ரசிகன் நான். ஆனால் மதுர படம் பார்து என்னுடைய என்னத்தை மாற்றினேன். அடுத்தடுத்து வந்த படங்களில் அவனுடைய கேவலமான நடிப்பு கதை தேர்வு இவைகளில் மெதுமெதுவாக விஜ்ய் ரசிகர் என்று சொல்வதை மிக மிக கேவலமாக எண்ணிணேன்.

  ஆனால் எப்பொழுது காங்கிரஸில் போய் சேர்ந்தானோ அன்றிலிருந்து அவனுடைய போஸ்டரை பார்பதை கூட பாவமாக நினைத்து வாழ்ந்து வந்தேன்.

  நண்பர்கள் வர்புருத்துகிறார்கள் என்று என் வாழ்கையில் நடந்தது அந்த துன்பச் சம்பவம். ஆம் வேட்டைகாரனை சிட்னியில் முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க என் நெஞ்சில் கொஞ்சம் கொஞ்சமாக ரத்தம் வழிய சபதம் இனிமேல் விஜய் படத்தை பார்காமல் இருப்பது மட்டும் அல்ல திருட்டு வீசீடி வாங்கி அனவருக்கும் கொடுப்பதை என் தொண்டாக செய்வேன். ஏனெனில் மறந்தும் இனி இவன் படத்துக்கு யாரும் திரையரங்கு சென்று பார்ககூடாது.

  அடுத்த நாள் “அவதார்” AVATAR என்ற ஆங்கில படத்துக்கு சென்று இதை ஈடு கட்டி கொண்டேன். தயவு செய்து உங்கள் பணத்தை பார்து செலவு செய்யுங்கள்.

  பின் குறிப்பு: நானும் ஒரு காலத்தில் அஜீத் ரசிகர்களுடன் போட்டியிட்ட முட்டாள்.

  Please go to AVATAR movie and you will find your money and time worth.

 13. MANO

  “புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு வரையறைக்குட்பட்ட வகையில்த்தான் தமிழீழம் வேண்டும்”. தங்களுடைய சுயநலன்களுக்காக மட்டுமே இவர்களுக்கு தமிழீழம் தேவை.
  30 வருட ஆயுதப்போர்
  30 000 க்கும் மேற்பட்ட போராளிகளின் உயிர்க் கொடை
  2 லட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் சாவு.

  இவை எல்லாம் இவர்களுக்கு தூசி, ஏனெனில் இவை எதுவும இவர்களை பாதிக்காது. யாராவதும் சண்டை பிடிக்க வேண்டும், யாராவதும் சாக வேண்டும் ஆனால் தமிழ்ஈழம் எங்கலுக்கு வேண்டும் ஆனால் நாங்க அங்க போக மாட்டோம்.

  “ஒவ்வொருமுறையும் இப்படி ஏதாவது ஒரு படம் வருவதும் ஒரு சிறு முனுமுனுப்பு போல் புறக்கணியுங்கள் என கோரிக்கைவிடுவதும்”

  this might be a trick to sell the Movie

 14. johan paris

  //எல்லாம் தமிழ்நாட்டு நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுக்கு வருமானம் கொஞ்சம் குறையத்தான் செய்யும். பட்ஜெட்டைக் குறைத்து அதைச் சரிக்கட்டிவிட்டு இனிமேல் ஈழத்தமிழர்களுக்கு படங்களை விநியோகிப்பதில்லை என்ற முடிவை எடுங்கள். மானாட மயிலாட சூட்டிங் பார்க்க வருகிற ஈழத்தமிழர்களை உள்ளே விடாதீர்கள். நடிகர்களோடு படமெடுக்கலாமோ என வருகிற தமிழர்களை அடித்துக் கலையுங்கள். வருடா வருடம் நாங்கள் எம்பியெம்பிக் குதிக்கிறது உங்களுக்கு எரிச்சலாய் இல்லையா ? அதனாற்தான் சொல்லுறன். பேசாமல் எங்களைப் புறக்கணியுங்கள்.
  //
  இது அருமை. நடைமுறைப்படுத்தினால் ஈழத்தமிழர் பலர் கூட்டமாகத் தீக்குளிக்க
  வாய்ப்பு உண்டு.

 15. ஏதேனும் குறிக்கோள்களுக்காக மக்களை அணிதிரட்ட வேண்டுமாயிருந்தால் அதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கும் , போயும் போயும் இரண்டரை மணி நேர சாக்கடைத்தனமான சினிமாவை புறக்கணிக்க அழைப்பு விடுப்பது சிறுபிள்ளைத்தனம். இந்த அறிவிப்பை விடுபவர்கள் மழைக்காலத்தில் விடிய விடிய கத்திவிட்டு காலையில் பிராணனை விட்டுவிடும் தவக்களைகளிற்கு ஒப்பானவர்கள்.

 16. thas

  வணக்கம்
  நீங்கள் சொல்வது சரி முதலாவது தமிழன் என்பவன் மானம் கெட்டவன் (என்னையும் சேத்து தான்) ஏன் எனில் எல்ல னேரமும் யூதன் யூதன் என்கிறார்கள் முதலில் யூதன் யார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேணும் ஒற்றுமை என்பதன் விளக்கம் தான் அவர்கள் அவர்களிடம் அறிவு இருகிறது தமிழனிடம் போறாமை இருக்கிறது அகாவே தமிழன் திருந்த மாட்டன் இன்னும் ஒரு 50 வருடங்களில் புலம்பெயர் நாடுகளில் தமிழ் இருக்கது , ஏன் கனடாவில இருக்கிற சனதுகு தமிழ் படியுங்கோ என்றால் தமிழ் படிக்கிறதில என்ன பெனிவிற் என்று கேக்கிறார்கள் .. இனிவரும் காலங்களில் தமிழ் திரைபடம் என்ன நீங்கள் எதை சொன்னலலும் தமிழ் சனம் கேக்கது அஹாவே தமிழன் 100 வருடதுகு பிறகு இருபான் என்பது எல்லம் பகல் கனவு , என்ன திரைபடம் உன்களை ஏமத்தி காசு சம்பாதிக்கிறான் அது ஒரு வியாபரம்

  ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவபர்கள் இருக்க தான் செய்யும்

  நன்றி
  தாஸ்
  கனடா

 17. venkattan

  சரியோ பிழையோ. ஒற்றுமை தேவைஎன்டால் சேர்ந்து நிண்டு கத்தவேணம். இப்படி பதிவ எழுதி ஒன்றுமையின்மையை காடடகூடாது. தமிழனிடம் ஒரு நாய் புத்தி இருகு:குது. எவன் நல்லது கெட்டது செ்யதாலும் அததுக்கு குதர்க்கமா கதைக்கிறது. இனியாவது திருந்ததுங்கொ. எந்த சிங்களவனனும் (99வீதமானவர்) தமிழாக்ள சாகிறார்கள் எ்னறு குரல்கொடுக்கவில்ல. இந்தியாவில் எத்நத இந்துவும் குரல் கொடுக்கவில்லை. இதற்கு காரணம் இப்படிப்ட்ட ஒற்றுமையின்மையே. நான் வேட்டைகாரனை பகிஸ்கரித்தேன். காரணம் நாம் எமது பலத்தை காட்டடவேண்டும் என்பதற்ாககத்தான். உங்களுக்க ஒற்றுதையில் அக்கறை இருந்தால் தை வர்க்க பதிவிடுங்கள். உங்களுக்கு வேட்டைகாரனை புறக்கதித்ததே எரிச்சல் என்றுதான் படுகிறது. எடுத்தவுடன் புலாத்தில் இருப்வர்களை சாடவெ்ணாம். கடும் குளிருலும் எம் மக்களுக்கா பொராட்டம செ்தவர்க்தர்ன்.
  தயவு செய்து தமிாழகளின் ஒற்றுமைதான் உங்களின் விருப்பம் என்றால் இப்படயான விதண்டாவாத பதிவிடுவதை நிறுத்துங்கள். அதுசரி சாரல் எப்பதான் தமிழ் தேசியத்திற்கு ஆதரவான பதிவிட்டிருக்க…. நடத்துங்கோ.. ஆனால் செத்த 30000 மக்களின் பிணங்கிளல் நின்று கூத்தடிப்பததை உங்கள்மனச்சாட்சி

Leave a Reply