யாழ் நூலகத் திறப்பு – தடுப்பு – காரணங்கள்

இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்கஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை […]

கதை எழுதுவது என்பது கணித சமன்பாடு அல்ல

“கதை எழுதுவது என்பது கணித சமன்பாடுகளில் எழுதுவது போன்ற விடயம் கிடையாது. தொடர்ச்சியான வாசிப்பும், பயிற்சியும் தான் சம்பவங்களை கதைகளாக்கும் ஆற்றலை எமக்கு அளிக்கவல்லன” என்ற தன் கருத்தோடு திரைப்படக்கதைகளை தேர்ந்தெடுப்பது எவ்வாறு? என்ற விடயத்தை தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக நேற்றைய தினம் (2020.06.07) எம் பட்டறைக்குழு மாணவர்களுடன் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்ட ஈழத்து எழுத்தாளர் சயந்தன் கதிர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். போர் கால அனுபவங்களையும், அவலங்களையும் தன்னுடைய எழுத்தின் […]

ஆறாவடு! இது எங்கள் கதை…

சயந்தனின் ஆறாவடு குளிரும் இரவொன்றில், வானம் நட்சத்திரங்களை மேகங்களுக்குள் ஒளித்து வைத்த இராத்திரியொன்றில், அரை வயிறு உணவும் இரப்பைக்குள் சுழன்று தொண்டைக்குள் தாவும் நிமிடங்களில், கால்கள் கொடுகிக் கொண்டிருக்க, தூக்கத்தின் பிடியிலிருக்கும் கண்களை இமைகள் மூடாமல் காவல் செய்திருக்க, ஒரு சாரத்தை இழுத்துப் போர்த்தியபடி, பெருங்கடல் வெளியொன்றில், திசைகளைத் தின்றபடி மேலும் கீழும் குதித்து விழுந்து ஓடிக்கொண்டிருக்கும், படகு நிச்சயம் இத்தாலிக்கு தான் பயணமாகிறது எனும் சொச்ச நம்பிக்கையில் தாய் நிலத்தை விட்டு பரதேசிகளாக, அகதிகளாக, நிலமற்றவனாக […]

ஆதிரை ஒரு பெரும்படைப்பு

இரண்டு வாரங்களில் 4 புத்தகங்களை வாசிக்க முடிந்தது. நண்பர் பத்திநாதனின் கையிலிருந்த சயந்தன் எழுதிய ‘ஆதிரையை’ வாங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலிருக்கும். 640 பக்கங்கள் என்பதால் எடுக்கமுடியாமலே இருந்தது. பழைய வேகம் இல்லையென்றாலும் 4நாட்களில் வாசிக்க முடிந்தது. ஈழத் தமிழரிடமிருந்து வரும் படைப்புகளைப் பெரும்பாலும் வாசித்து வருபவன் என்றவகையில் இந்த நாவல் மிக முக்கியமான படைப்பு. 1980 களின் தொடக்கத்திலிருந்து 2010இன் தொடக்ககாலம் வரையிலான அகன்ற பரப்பில் பயணமாகிறது. பொதுவாக ஈழப்படைப்புகளை எழுதுவது வாசிப்பது விமர்சிப்பது என்பதான […]