ஏன் பெயிலாகிறோம்

ஏன் கல்வி ஒரு மாணவனுக்கு கடுமையாக இருக்கிறது.. ஏன் பலர் பரீட்சைகளில் தோற்கிறார்கள் என்கிற ஒரு ஆய்வு எனக்கு மெயிலில் வந்தது. உங்களுக்கும் சில சமயம் வந்திருக்கும். வராதவர்களுக்காக அதை இங்கை தாறன்! முதலில ஒரு வருசத்தில இருக்கிற மொத்த நாட்களில 52 ஞாயிற்றுக் கிழமைகள் வருது. ஒரு மனிசனுக்கு ஓய்வு கட்டாயம் முக்கியம் எண்ட படியாலை அந்த 52 நாளும் படிக்க முடியாது. ஆக மிச்சம் 313 நாள் தான் படிக்க இருக்கு. கோடை விடுமுறை […]

நான் எப்பிடி இருக்கிறன்!

எனது படத்தை வலைப்பதிவில் வெளியிட வேணும் என்று கோரிய அநேகம் பேரின் வேண்டுகோளை மதித்து (அடி ஆத்தி! அநேகம் பேரா..? அது யாரு? சரி! ஆகக்குறைந்தது எனது விருப்பத்திற்கு ஏற்ப) இந்தப் பதிவு! இதில் ஒரு மார்க்கமாக நின்று கொண்டிருப்பது நான் தான்! எப்பிடி இந்தப் படத்தை எடுத்தனியள் எண்டு யாரேனும் கேட்டால்.. அப்பிடி யார் எடுத்தது! அதுவா வந்திச்சு!!! இந்த படத்துக்கு பொருத்தமான கவிதை எழுதுறாக்களுக்கு …. இந்தப் படத்தை Save picture as பண்ணி […]

றேடியோக்களின் கதை

‘எங்க சக்திக்கு முன்னால உங்க சக்தி ஜுஜுப்பி!’ ‘அணையிறதுக்கு நான் ஒண்ணும் தீக்குச்சி இல்லை! சூரியன்’ ‘நான் சேர்த்த கூட்டம் அன்பால தானாச் சேர்ந்த கூட்டம்’ ‘அசந்தா அடிக்கிறது உங்க பாணி அசராமல் அடிக்கிறது என் பாணி’ இவையெல்லாம் தமிழ்ச் சினிமாக்களின் பஞ்ச் வசனங்களாயினும் எனக்கு அதிகம் பரீச்சயம் ஆனது கொழும்பில இருக்கிற தனியார் வானொலிகள் மூலம் தான். உப்பிடி மாறி மாறி கோழிச்சண்டை போடுறதை ரசிச்சுக் கேட்கிறதே நல்ல ஒரு பொழுது போக்கு. தொன்னூற்றெட்டின் துவக்கமாயிருக்க […]

எங்கடை தமிழும் உங்கடை தமிழும்!

ஈழத்தமிழ் குறித்து நமது சகோதரர்களின் மெச்சுகை அவ்வப்போது வலைப்பதிவுகளில் வரும். ஆஹா அதுவெல்லோ தமிழ் என்கிற மாதிரியான பாராட்டுக்கள் ஒருவித பெருமையைத் தருவது உண்மைதான். ஈழத்தமிழ் என்கிற அடைமொழியில் அவர்கள் குறிப்பிடுவது யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கு மொழியைத்தான் என நான் உணர்கிறேன். தமிழக சினிமாக்களிலும் இலங்கைத் தமிழ் என யாழ்ப்பாணத்து பேச்சு வட்டார மொழி தான் பயன்படுகிறது. அதாவது யாழ்ப்பாண பேச்சு வட்டார மொழியை நெருங்க முயற்சிக்கிறார்கள். ஆனால் வெற்றி பெறுகிறார்கள் இல்லை. தமிழ்ச் சினிமாக்கள் பார்த்து […]